முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பகலொளி சேமிப்பு நேரம்


  http://www.fallingfifth.com/comics/20070311


   நடராஜ் காலில் வெந்நீர் ஊற்றினார்போலவே ஓடும் பையன். காலையில் ஒன்பதரைக்கு நகரின் நடுவில் முக்கிய வேலை என்றால் 8;50க்கு தான் ரயில் பிடிக்கப் போவான். ரயிலைப்பிடித்து, பேருந்து பிடித்து, ஆட்டோ பிடிக்கவேண்டும். இதே வழக்கமாப் போச்சு என்று அவன் அம்மா ஒருநாள் காலையில், சிலர் ஐந்து பத்து நிமிடம் அதிகமாக கடிகாரத்தில் 'fast' ஆக வைத்துக்கொள்வாரே, அதேபோல் கடுப்பில் ஒருமணிநேரம் 'fast'ஆக கைப்பேசி நேரத்தை வைத்துவிட்டார்.

    இது தெரியாமல் நடராஜ் நாள் முழுக்க எல்லா வேலைக்கும் ஒரு மணி முன்னதாகவே செல்வதை உணர்ந்தான். அப்போதுதான் கடிகாரத்திலும் போனிலும் வேறு வேறு நேரம் இருப்பதைப் பார்த்து அம்மாவின் சேட்டை என்று புரிந்து சரிசெய்துகொண்டான். ஆனால் அவனுக்கு அன்று எல்லாம் ஒரு மணிநேரம் முன்னதாகவே முடிந்துவிட மாலையிலும் விளையாட்டு, நடை என்று கொஞ்சம் நேரம் செலவிட்டான்.

  இப்போது அந்த ஒருமணிநேரம் எங்கே வந்தது? எங்கே போச்சு? எதுவுமே ஆகவில்லை சரிதானே.

  இதேதான் நடக்கிறது பகலொளி சேமிப்பு நேரம் எனப்படும் daylight saving time போது. ஆறு ஏழு மாதங்கள் தள்ளி 'சரிசெய்து' வைத்துக்கொள்வதால் குழம்புவதும் நியாயம்தான்.

அமரிக்கப் பகல்கள் ( பூமியின்  23.4°  சாய்வினால் ) இளவேனிற் மற்றும் வேனிற் காலங்களில் நீளமானதாக இருக்கும். அதாவது கிட்டத்தட்ட காலை 5 மணியிலிருந்து மாலை 8 வரை. பூமத்திய ரேகைக்கு  அருகில் இருக்கும் இந்தியாவில் அதிகமாக உணரமுடியாது இதை. ஆகையால், மாலை வெயிலை வீணாக்கவேண்டாம் என்று ஏப்ரல் மார்ச் மாதங்களில் ஒரு ஞாயிறு அன்று ஒரு மணி fast-ஆக வைத்துக்கொள்வது பின் குளிர் ஆரம்பித்ததும் அதை சரிசெய்துகொள்வது.

இப்படி வெயில் காலத்தில் அதிகப்படுத்தி வைத்துக்கொள்வதால் காலையில் சீக்கிரம் எழுந்து வேலைகளை முடித்து மாலையில் சீக்கிரம் வீடு வந்தால் வெயிலும் இருக்கும். பிள்ளைகளோடு விளையாட, மற்ற பொழுதுபோக்க ஏதுவாக இருக்கிறது. மின்சாரமும் சேமிக்கப்படுவதாக தகவல்கள் சொல்கின்றன. அதாவது daylightஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

குளிர்காலத்தில் சரியாக வைத்துக்கொள்ளும் ஒரே ஒரு நாள் நீங்கள் தூங்கி எழும்போது ஒரு மணிநேரம் அதிகம் தூங்கி இருப்பீர்கள். மற்ற நாட்கள் எல்லாம் அதேதானே.

 இந்த கடிகார நேரத்தைக் கூட்டுவதா குறைப்பதா என்று புரிவதற்கு Spring Forward Fall Back என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். மாற்றி வைத்த நேரத்தை மட்டும் daylight Saving Time என்றும்(savings என்று எழுதக்கூடாது). DST : Starts on Summer. Ends on Winter.  மாற்றாத நேரத்தை standard time என்பது சரிதானே.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4