கண்ணதாசன். யாருக்கும் தெரியாமல் மனத்தால் இழிந்து, பொய்யாய் வாழ்ந்து மறைகிறோம். நல்லதையும் கெட்டதையும் ஒருங்கே பார்த்து, வியந்து, அனுபவித்து இன்னும் என்னவெல்லாம் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யமுடியுமோ அத்தனையும் செய்து அவன் இன்னமும் வாழ்கிறான். என்னைப்போன்றோருக்கு எப்படி அவனை உணர முடிகிறது. வெறும் 54 வருடம் தான் வாழந்திருக்கிறான். அதற்குள் எத்தனை சாதனை, சோதனை. என்னை விட வயதில் மூத்தோருக்கு அவனை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பழைய சினிமா பாடல்களின் மூலம் அறிமுகமான காலத்தில வெறும் சினிமா பாடல்களை மட்டுமே வைத்தே நினைத்திருந்ததை அவனிடம் மானசீகமாய் மன்னிப்புகேட்க வைத்தது அர்த்தமுள்ள இந்துமதம். தனக்குதானே பட்டம்சூட்டிக்கொள்ளும் மாக்கள் எங்கே, தன்னையே பகடி செய்துகொண்ட அவன் எங்கே. சேர்கின்ற பொருள்களைச் செம்மையாய் எந்நாளும் காக்கவும் திறமை இலையே ஜெயிக்கின்ற கட்சியில் நுழைகின்ற வித்தையைத் தேருமோர் அறிவு மிலையே. காமராஜரைப்பற்றி மிகச்சுலபாக எப்படி எழுதமுடியும் என வியக்க வைத்த சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடா...
முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையுடன்...