முன்னுரை அல்லது உரிமைத் துறப்பு:
*வித்தகர்களே!! எனக்கு HTML ஐத்தாண்டி இணையமொழி அறிவு கிடையாது. நான் கொஞ்சம் பழைய ஆள் (இணைய அறிவால்) CGI/PERL (இதல்லாம் இன்னும் ஆராவது பாவிக்கிறார்களா??) மற்றும் Apache அறிவும், கொஞ்சம் போல் Drupal அறிவும் மட்டுமே உண்டு. முட்டாள்தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டுகிறேன்.
* இந்த கேள்வியெல்லாம் யார் யாரிடம் கேட்டால், எங்கெங்கு கேட்டால் பதில் கிடைக்கும் என்று தெரியும். இருந்தாலும் நீளம் மற்றும் மின்னஞ்சல் தொல்லை வேண்டாம் என்று இங்கு போடுகிறேன்.
*கேள்விகளையெல்லாம் படித்துவிட்டு "முதலில் நீ எழுதுடா அப்புறம் பாக்கலாம்.. " என்று திட்டவெல்லாம் கூடாது.
1. Bloggerல் பாட்டு/கவிதையெல்லாம் தட்டச்சினா, எல்லாமே இடது பக்கம் போய்விடுவதை சரி செய்வது எப்படி. (left justify ஆகிவிடுவதை தடுப்பது எப்படி)
2.வார்ப்புருவுக்கும் ஓடைக்கும் சம்பந்தம் இருக்கா?
பதில்-ஓடைக்கும் வார்ப்புருவுக்கும் தொடர்பு இல்லை. feed is template / theme independent
*வித்தகர்களே!! எனக்கு HTML ஐத்தாண்டி இணையமொழி அறிவு கிடையாது. நான் கொஞ்சம் பழைய ஆள் (இணைய அறிவால்) CGI/PERL (இதல்லாம் இன்னும் ஆராவது பாவிக்கிறார்களா??) மற்றும் Apache அறிவும், கொஞ்சம் போல் Drupal அறிவும் மட்டுமே உண்டு. முட்டாள்தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டுகிறேன்.
* இந்த கேள்வியெல்லாம் யார் யாரிடம் கேட்டால், எங்கெங்கு கேட்டால் பதில் கிடைக்கும் என்று தெரியும். இருந்தாலும் நீளம் மற்றும் மின்னஞ்சல் தொல்லை வேண்டாம் என்று இங்கு போடுகிறேன்.
*கேள்விகளையெல்லாம் படித்துவிட்டு "முதலில் நீ எழுதுடா அப்புறம் பாக்கலாம்.. " என்று திட்டவெல்லாம் கூடாது.
1. Bloggerல் பாட்டு/கவிதையெல்லாம் தட்டச்சினா, எல்லாமே இடது பக்கம் போய்விடுவதை சரி செய்வது எப்படி. (left justify ஆகிவிடுவதை தடுப்பது எப்படி)
பதில்1 - blockquote /blockquote மூலம் கதை கவிதைகளை
இடப்புறமிருந்து விருப்பப்பட்ட இடத்துக்கு வலப்புறமாக நீக்கலாம்.இன்னும்
நீக்கணும் என்றால் இருமுறை
<-blockquote-><-blockquote-> <-/blockquote-> <-/blockquote->
கொடுக்கலாம்
பதில் 2-
pre tag உபயோகப்படுத்தலாம்.அது எழுதப்பட்ட விதம்
உ.ம் இங்கே இருக்கும் வரிகளாம்
பதிவர் சொல்லி தந்ததாம்
அங்கே இங்கே தள்ளாமல்
அழகாய் இங்கே வந்ததாம்.
pre இங்கே இருக்கும் வரிகளாம்
பதிவர் சொல்லி தந்ததாம்
அங்கே இங்கே தள்ளாமல்
அழகாய் இங்கே வந்ததாம்.
/pre
2.வார்ப்புருவுக்கும் ஓடைக்கும் சம்பந்தம் இருக்கா?
பதில்-ஓடைக்கும் வார்ப்புருவுக்கும் தொடர்பு இல்லை. feed is template / theme independent
3. வார்ப்புருவை மாற்றினால் தமிழ்மணத்தேன்கூட்டு நிரலை சேர்த்தபிறகு திரட்டிகளில் பிரச்சனை வருமா? வந்தால் யாரைகேட்டால் உதவி கிடைக்கும்? (சிலபேர் மாதிரி மண்டை காஞ்சு சுத்தாமல் இருக்க முன்யோசனைக்கேள்வி)
பதில்- வெறுமனே blogger, wordpress தரும் தெரிவுகளைக் கொண்டு theme, template மாற்றினால் பிரச்சினை இல்லை. ஏதேனும் கூடுதல் நிரலை blogger வார்ப்புருவில் சேர்ப்பதானால், தமிழ்மண நிரல் இருக்கும் இடத்தில் கை வைக்காவிட்டால் பிரச்சினை இருக்காது. எப்ப வார்ப்புருவைத் திருத்தினாலும் அதற்கு முன் அதன் ஒரு படியைச் சேமித்து வைப்பது நலம். ஏதும் பிரச்சினை என்றால் மீட்டு விடலாம். இதற்கு மேலும் ஏதும் சொதப்பினால் பதிவர் உதவிப் பக்கத்தில் கேளுங்கள். இல்லை, complaints@thamizmanam.comக்கு எழுதுங்கள்
4 நான் பிறருக்கு போடும் பின்னூட்டங்களை மட்டும் திறட்டுவது எப்படி?
நான் புகுபதிகை செய்தே பின்னூட்டமிடுவது வழக்கம்(இதுதான் பின்னூட்ட நேர்மை ;-)) நான் போட்ட பின்னூட்டத்திற்கு பதில் வந்ததா என்று பார்ப்பதற்கோ அல்லது எங்கெல்லாம் சென்றேன் என்பதற்காக அல்ல. என்னுடைய பின்னூட்டங்களை மட்டும் தொகுக்க வழி என்ன?
பதில்2; உங்கள் சில மறுமொழிகளைக் காணலாம். பார்க்கவும்wordpress பதிவுகளில் நீங்கள் இட்ட மறுமொழிகளை உங்கள் wordpress dashboardல் இருந்தே பார்க்கலாம்.
5. வார்ப்புருக்களில் விளையாட என்ன என்ன மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்? XML படிக்க சுலப வழி என்ன? ஏதாவது இணைய மென்பொருளோ,புத்தகமோ இருக்கிறதா? அமேசான் வலைத்தளம் நடத்துமளவுக்கு படிக்க நேரமில்லை. கொஞ்சம் மக்குகளுக்கான புத்தகம் இருந்தால் அனுப்பி வைக்கவும்.
பதில்-தனித்தனியாய் மொழி கற்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நமக்கு என்ன வசதி வேண்டும் என்ற தெளிவும் அதை இணையத்தில் தேடி சரியான இடத்தில் வெட்டி ஒட்டும் திறனும் :) கொஞ்சம் htmlம் போதும் என்றே நினைக்கிறேன்.
6.தனியாக கடைபோட எவ்வளவு செலவாகும்? எவ்வளவு கொள்ளளவு தேவைப்படும்? படங்கள், பாட்டுக்கள், விழியங்கள் தொகுத்தால் எவ்வளவு இடம் பிடிக்கும்? வெறும் தொடுப்பு (embedded objects) மட்டுமே என்றாலும் நம் வழ்ங்கிக்குதானே தரவிறக்கி படமோ பாட்டோ காமிக்கும். அப்போ பிரச்சனை வராதா?
நீங்கள் உங்கள் தளத்தில் கொண்டுள்ள உரை அளவு (text size) மட்டும் உங்கள் கணக்கில் வரும்.
7.தனிப்பதிவர்களே(அதாவது தனித்தளத்தில் பதிபவர்களே!!). உங்கள் வழங்கி யார்? எவ்வளவு கொள்ளளவு வைத்திருக்கிறீர்கள்?
பதில்1; ஆண்டுக்கு 100 MB கொள்ளளவு. மாதம் 1 GB தரவுப் பரிமாற்றம்
8. Wordpressல் நிரல்களை மாற்றுவது எப்படி? நிரலே காணக்கிடைக்கவில்லை. Presentation->View my Stylesheetக்கு போனால் என்னுடைய developer studio திறக்குது. ஏதோ 'c'ற்றறிவு இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் CSS ஐ வைத்துக்கொண்டு 'ஙே' என்று விழிக்கத்தான் தெரிகிறது.
பதில்1;wordpress.comல் வார்ப்புருவைத் தொகுக்க வேண்டும் என்றால் காசு கட்ட வேண்டும்.
9. ஓடையை உருவாக்கும் நிரலை எங்கு காண்பது? அல்லது வழங்கிமென்பொருளோடு சேர்ந்தேவருமா? இதற்கும் அடுத்த கேள்விக்கும் சம்பந்தம் இருக்கு.
பதில்-தனித்தளத்தில் இயங்கும் wordpress கூட்டுப் பதிவு என்றால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனி ஓடை உண்டு. wordpress.com குறித்து தெளிவில்லை
10. இப்போது Wordpressல் ஒரு கடையை திறந்தாச்சு. பிளாக்கரில் 2, 3 கடைகள். சொந்தமாக ஒரு கடை.தனித்தனியா திரட்டிகளுக்கு தெரிவித்து அதற்கு அவர்கள் வேறு ஒரு பயனர் கணக்கு உருவாக்கி அவர்கள் அனுமதி தந்து என்று நீளுவதை விட நான் ஒரே ஒரு ஓடை வைத்துக்கொண்டு அதில் என்னுடைய பல பதிவுகளை (இடுகைகள் அல்ல) ஒரே இடத்தில் தொகுத்து வழங்க முடியுமா? அதாவது என்னுடைய கேள்வி பிளாக்கருக்கு ஒரு ஒடை, wordpressக்கு ஒரு ஓடை என்று இல்லாமல் எனக்கென்று தனித்தளத்தில ஒரு ஓடை இருக்குமல்லவா அதிலேயே என்னுடைய பல பதிவுகளில் எழுதுவதும் ஒரே இடத்தில் வந்து விழவேண்டும் அது கூட்டு பதிவாக இருந்தால் கூட. இந்த தனிப்பதிவு ஓடையை நான் திரட்டிகளுக்கு கொடுத்தவிட்டால் முடிந்தது கதை. இது சாத்தியமா?
பதில் 1; யாஹூ பைப்ஸ், ரீடர் -> feedburner-> mail to blog என்று ஒரு வழிமுறை இருக்கிறது(விவரம் சிந்தாந்தி, ரவிசங்கர் பின்னூட்டங்களில்). பயன்படுத்திவிட்டு இங்கோ அல்லது தனிப்பதிவோ வரும்.
11. ஒரு கூட்டு பதிவில் நான் எழுதுவதை மட்டும் தனியாகப் பிரித்து என் தனிப்பதிவில் தானாய் விழ வைக்க முடியுமா?
பதில்1; பதில் 10ஐ பார்க்கவும். முடியும்.
12. wordpressல் தமிழ்மண நிரலை சேர்ப்பது எப்படி? சொந்தத்தளம் இல்லைங்கோ. msathia.wordpress.comக்கு தமிழ்மண நிரலை சேர்க்கவழி என்ன?
பதில்- wordpress.com தள இடுகைகளைத் தமிழ்மணத்தில் புதுப்பிக்க, தமிழ்மண முகப்பில் உள்ள இடுகைகளைப் புதுப்பிக்க என்ற வசதியைப் பயன்படுத்தவும்
கருத்துகள்
நான் புகுபதிகை செய்தே பின்னூட்டமிடுவது வழக்கம்(இதுதான் பின்னூட்ட நேர்மை ;-)) நான் போட்ட பின்னூட்டத்திற்கு பதில் வந்ததா என்று பார்ப்பதற்கோ அல்லது எங்கெல்லாம் சென்றேன் என்பதற்காக அல்ல. என்னுடைய பின்னூட்டங்களை மட்டும் தொகுக்க வழி என்ன? //
இந்த ஏற்பாட்டை cocomment உதவியுடன் நான் செய்துள்ளேன் - பார்வையிட்டுப் பாருங்கள்
எங்கட பார்க்கணும்னு தெரியல்லே..சொல்லுங்கோ.
cocommentன்னு ஒண்ணை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
2. ஓடைக்கும் வார்ப்புருவுக்கும் தொடர்பு இல்லை. feed is template / theme independent.
3. வெறுமனே blogger, wordpress தரும் தெரிவுகளைக் கொண்டு theme, template மாற்றினால் பிரச்சினை இல்லை. ஏதேனும் கூடுதல் நிரலை blogger வார்ப்புருவில் சேர்ப்பதானால், தமிழ்மண நிரல் இருக்கும் இடத்தில் கை வைக்காவிட்டால் பிரச்சினை இருக்காது. எப்ப வார்ப்புருவைத் திருத்தினாலும் அதற்கு முன் அதன் ஒரு படியைச் சேமித்து வைப்பது நலம். ஏதும் பிரச்சினை என்றால் மீட்டு விடலாம். இதற்கு மேலும் ஏதும் சொதப்பினால் பதிவர் உதவிப் பக்கத்தில் கேளுங்கள். இல்லை, complaints@thamizmanam.comக்கு எழுதுங்கள்.
4. cocomment சிறந்த தீர்வு. ஆனால், அதற்கு firefox வேண்டும் என்று நினைக்கிறேன். பதிவுகள் தவிர மன்றங்களில் இடும் பின்னூட்டங்களைக் கூடத் திரட்டும் என நினைக்கிறேன். நல்லதா என்று பார்த்து நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். தமிழ்மணம் மறுமொழித் திரட்டி சோதனை நிலையில் உள்ளது. அதில் உங்கள் சில மறுமொழிகளைக் காணலாம். பார்க்கவும்
wordpress பதிவுகளில் நீங்கள் இட்ட மறுமொழிகளை உங்கள் wordpress dashboardல் இருந்தே பார்க்கலாம்.
5. தனித்தனியாய் மொழி கற்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நமக்கு என்ன வசதி வேண்டும் என்ற தெளிவும் அதை இணையத்தில் தேடி சரியான இடத்தில் வெட்டி ஒட்டும் திறனும் :) கொஞ்சம் htmlம் போதும் என்றே நினைக்கிறேன். மேலதிக விவரங்கள் deepa தரலாம்.
6.பார்க்க - தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?.
ஒலி, ஒளிக்கோப்புகள் அனைத்தையும் பிற தளங்களில் பதிவேற்றி அதற்கு இணைப்பு தரலாம், பொதிந்து கொள்ளலாம் என்பதால் தனித்தளத்தின் தரவுப் பரிமாற்ற எல்லை பாதிக்காது. நீங்கள் உங்கள் தளத்தில் கொண்டுள்ள உரை அளவு (text size) மட்டும் உங்கள் கணக்கில் வரும்.
7. ஆண்டுக்கு 100 MB கொள்ளளவு. மாதம் 1 GB தரவுப் பரிமாற்றம். இதை விட அதிக வசதிகளைக் குறைவான தொகையிலும் பெற முடியும். இணையத்தில் தேடி சரியான நிறுவனத்தைக் காண வேண்டும். அதிகம் பரபரப்பு இல்லாத பதிவர் என்றால், (எடுத்துக்காட்டுக்கு, நாளைக்கு 100க்கு குறைவான வாசகர்கள்) 50 MB இடம் கூடப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், பல சேவைகள் வஞ்சனையில்லாமல் GB கணக்கிலேயே இடம் தருவதுண்டு.
8. wordpress.comல் வார்ப்புருவைத் தொகுக்க வேண்டும் என்றால் காசு கட்ட வேண்டும்.
9. ஓடையை உருவாக்கும் நிரல் என்று பதிவுகளுக்குத் தனியாக ஒன்றும் தேவை இல்லை. ஏற்கனவே உள்ள பல ஓடைகளை ஒன்றிணைக்க, நம் விருப்பப்படி மாற்றி அமைக்க feedburner போன்ற சேவைகள் உதவும்.
10. தனித்தளத்தில் இயங்கும் wordpress கூட்டுப் பதிவு என்றால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனி ஓடை உண்டு. wordpress.com குறித்து தெளிவில்லை. bloggerல் தனி ஓடை இல்லை. ஆனால், yahoo pipes, google reader கொண்டு இவற்றில் இருந்தும் கூட்டுப் பதிவுகளில் இருந்து உங்கள் பதிவை மட்டும் பிரித்து எடுக்கலாம். பெரிய விசயமில்லை. பதிவர் உதவிப் பக்கத்தில் திரட்டி செய்வது எப்படி என்று ஒரு கட்டுரை இருக்கு பாருங்கள். ஆனால், நீங்கள் இவ்வளவு மெனக்கெடுவது தமிழ்த்திரட்டிகளுக்கு ஒரே ஓடை தருவதற்குத் தான் என்றால், முதலில் திரட்டிகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால், அவை யாவும் தற்போது பதிவு வாரியாகத் தான் திரட்டுகின்றன. இப்படி பல பதிவுகளுக்கான ஒரே ஓடை என்பதில் தமிழ்மணம், தேன்கூடு போன்றவை நுட்ப மாற்றம் செய்ய வேண்டும். அல்லது, மனித முறையில் சேர்க்க வேண்டும். மற்றபடி, technorati, google blog search போன்றவையும் பதிவு வாரியாகத் தான் திரட்டும். உங்கள் வசதிக்காக வேண்டுமானால் இப்படி ஒரு ஓடை செய்து பார்க்கலாம்.
11. ஓடையாய் பிரித்துப் பக்கப் பட்டையில் காட்டலாம். அதையும் பதிவாகவே உங்கள் தனிப்பதிவில் திரும்பப் பதிப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் யோசிக்கணும். auto-post தெரிவு, குறுக்கு வழி ஏதாவது இருக்கான்னு பார்க்கணும்..
12. இலவச wordpress.com வார்ப்புருவைத் தொகுக்க முடியாது. அதனால் தமிழ்மணம் உட்பட எந்தத் தள நிரலையும் சேர்க்க முடியாது. காசு கட்டி வார்ப்புருவை மாற்றலாம். அதற்குப் பதில் தனித்தளத்திலேயே wordpress நிறுவிக் கொள்ளலாம். wordpress.com தள இடுகைகளைத் தமிழ்மணத்தில் புதுப்பிக்க, தமிழ்மண முகப்பில் உள்ள இடுகைகளைப் புதுப்பிக்க என்ற வசதியைப் பயன்படுத்தவும்.
--
யாருக்கும் மின்மடல் இடாமல் பொதுவில் கேட்டதும் நல்லதே. பதிலும் பலருக்கும் போய்ச் சேரும் அல்லவா?
ஆனால், ஏதோ பதிவுகள் பல்கலைக்கழகத்துக்கு நுழைவுத் தேர்வு எழுதின மாதிரி இருக்கு :) நான் passஆ :)
திருவாளர் ரவிஷன்கர், சிறப்பாகப் பதில் அளித்திருக்கிறார்
இருவருக்கும் ந்ன்றி உரித்தாகுக!
முதலாவது கேள்விக்கு மட்டும்....
பிளாக்கரில் posting - create ல் edit html mode ல் நான்காவதாக இருக்கும் மேற்கோள் குறியைச் சுட்டினால் (compose mode ல் கடைசியிலிருந்து இடப்புறமாக ஐந்தாவது) வரும் blockquote /blockquote மூலம் கதை கவிதைகளை இடப்புறமிருந்து விருப்பப் பட்ட இடத்துக்கு வலப்புறமாக நீக்கலாம். இன்னும் நீக்கணும் என்றால் இருமுறை <-blockquote-><-blockquote-><-/blockquote-><-/blockquote->கொடுக்கலாம்.
நீங்கள் கேட்டது இதைத்தானா?
10. தனித்தனி ஓடைகளை கூகுள் ரீடரில் அல்லது யாகூ பைப்ஸ்ஸில் இட்டு பொது ஓடை உருவாக்கலாம். ஆனால் அதை திரட்டிகள் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியாது.
11. பீட்பர்னர் அல்லது இமெயில் சேவை வழங்கும் ஒரு சேவையில், கூட்டுப் பதிவில் உள்ள உங்கள் இடுகைகளுக்கான தனி ஓடையை இணைத்துக் கொண்டு உங்கள் தனிப்பதிவின் இமெயில் போஸ்ட் க்கான தனி முகவரியை இமெயில் சேவைக்கு சப்ஸ்கரைப் செய்தால் இது சாத்தியமாகலாம். ஆனால் தனி ஓடை எடுக்க முடிந்தால் மட்டுமே இது பலனளிக்கும். பிளாக்கரில் இது தனியாக எடுக்க இயலாது. ஆனால் வேர்ட்பிரஸ் கூட்டுப் பதிவில் இருந்து பிளாக்கரில் தானாக விழ வைக்கமுடியும்.
நான் பிறருக்கு போடும் பின்னூட்டங்களை மட்டும் திறட்டுவது எப்படி?
குழலியை கேட்டுப்பாருங்கள்,அவர் இதற்கென்றே ஒரு பதிவு வைத்திருந்ததாக ஞாபகம்.
நானே பதில் தெரியமத்தான் கேள்வியே கேக்கறேன். நீங்க பாஸான்னு நீங்க தான் சொல்லணும். ;-)
உங்கள் பொறுமையான சிறப்பான பதில்களுக்கு நன்றி.
1. இன்னும் இதற்கு பதில் கிடைக்கவில்லை. இந்த பதிவில் கூட பதில்களை கொஞ்சம் தள்ளி வருமாறு வைக்கலாம் என்றால் வழி தெரியவில்லை. எல்லாமே justify ஆகிவிடுகிறது ஒரு வரி உள்ளே ஒரு வரி வெளியே என்று வருவது கவிதைகளின் எழுதுமுறை. அதற்கு உதவ மாட்டேன் என்கிறது பிளாக்கர்.
2, இதற்கு ஏற்கனவே விடை தெரிந்திருந்தாலும் இந்த பதிவே சில நண்பர்களுக்கும் சேர்த்துத்தான். அதனால் கேட்டேன்.
3.
11. அதையும் பதிவாகவே உங்கள் தனிப்பதிவில் திரும்பப் பதிப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
--அதே என் வினா.
ரவி, இன்னும் குழம்பிவிட்டது. பிளாக்கரில் பிரித்து எடுக்க முடியாது என்கிறீர்கள் அப்படி என்றால் திரட்டிகளில்( ரீடர், பைப்ஸ்) எப்படி வரும?
மற்றவை புரிந்துவிட்டது ;-)
நன்றிகள் பல
சிந்தாநதி,
வருக. நன்றி. இன்னும் நீங்கள் சொன்ன justify தீரவில்லை.
குமார்,
வருகைக்கு நன்றி,
குழலி பதிவின் சுட்டி கிடைக்குமா? தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
கவிதையில் ஒவ்வொரு வரியிலும் வலப்புறமாக சற்று நீங்க வேண்டிய வரியை தேர்வு செய்து blockquote செய்தால் போதுமே?
நீங்கள் சிவப்பு நிறத்தில் இட்டுள்ள வரிகளை தேர்வு செய்து blockquote சுட்டியை தட்டுங்கள். அல்லது அதன் ஆரம்பத்தில் blockquote டேக் இறுதியில் /blockquote டேக
டேக்=(<>)
indent செய்வது தான் உங்கள் தேவை என்று நினைக்கிறேன். indent html என்று கூகுளில் தேடினால் ஏகப்பட்ட உதவிக் குறிப்புகள் கிடைக்கும். pre tag பயன்படுத்தி எளிமையாகச் செய்யலாம். எடுத்துக்காட்டுக்கு, என் பதிவில் செய்து காட்டி இருக்கிறேன்.
11. இந்த yahoo pipeல் விக்கிபசங்க பதிவில் இருந்து வெங்கட் எழுதிய இடுகைகளை மட்டும் பிரித்து எடுத்திருக்கிறேன். அங்குள்ள view source இணைப்பு மூலம் இது எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். இப்படி பிரித்து எடுக்கப்படும் இடுகைகளுக்கு ஓடைகள், மின்மடல் alertகள் எல்லாம் உண்டு. இந்த ஓடையை feedburnerல் எழுதிக் கொண்டு அது தரும் மின்மடல் அறிவிப்புச் சேவையில் உங்கள் mail-to-blogger மின்மடல் முகவரியைத் தந்து விட்டால் நீங்கள் விரும்பும் பதிவில் இந்த இடுகைகள் தானாகப் பதிப்பிக்கப்பட்டு விடும். blogger settings - emailல் இந்த mail-to-blogger முகவரியைப் பார்க்கலாம்.
சத்தியா,
நீங்கள் கவிதை, பாடல்கள் எழுதும் போது indent [இடைவெளி?] போன்றன விடுவதற்கு HTML tags ஐ புழங்கலாமே? அவற்றிற்கு HTML tags இருக்கிறதே. நான் இவ் HTML tags ஐப் பயன்படுத்தி வலையேற்றிய கவிதையை இங்கே பாருங்கள்.
குழலியை கேட்டுப்பாருங்கள்,அவர் இதற்கென்றே ஒரு பதிவு வைத்திருந்ததாக ஞாபகம்.//
நானும் ஒண்ணு எழுதியுள்ளேன். :)
http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_09.html
அப்புறம் ரவிசங்கர் - cocomment தனியே firefox இற்கு மட்டுமானதல்ல. ஆனால் அதில் இலகுவானது.
அதுபோலவே சாதாரண நிலையில் அதாவது நீங்கள் cocomment இல் login செய்துள்ள நிலையில் நீங்கள் எழுதும் மறுமொழிகள் கருத்துக்களப் பதிவுகள் அதாவது textarea விற்குள் எழுதப்படும் அனைத்தும் திரட்டப்பட வாய்ப்புண்டு.
அனானியாக மறுமொழி இடுவோருக்கு வெவ்வோறு பெயர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் வைத்திருப்போருக்கு தலைவலி கொடுக்கும் .
ஆகவே திரட்டப்படத் தேவையற்றவையை நாம் ஒரு கிளிக் உதவியுடன் செய்து கொள்ளலாம்.
வருகைக்கு நன்றி, பதிலெல்லாம் சொல்லிட்டாங்க. இங்க நீங்களே மாணவரா. சரியாப்போச்சு.
சிந்தாந்தி, ரவி,
இந்த பைப்ஸ்->feedburner->mail to blog வழிமுறையை பண்ணிட்டு சொல்றேன்.
வெற்றி,ரவி,
கலக்கலா வேலை செய்கிறது pre-tag.
HTML ஏதோ தெரியும் நினைச்சேன். அதுவும் தெரியாதா. சரியாப்போச்சு
cocomment பயன்படுத்திவிட்டு சொல்கிறேன்.
தகவலுக்கும், சுட்டிக்கும் மிக்க நன்றி.