நேற்று டிவிட்டரில் சிந்தாநதி மறைந்துவிட்டார் என்ற செய்தியைப் பார்த்தபோது மிகவும் அதிர்ந்துபோனேன். சிந்தாநதி என்னும் பெயரைக்கேட்ட உடனே எனக்கு நினைவுக்கு வருவது அவரின் ' எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள் ' என்னும் கவித்துவமான வரிகள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் மிகவும் துடிப்போடு தமிழ்ப்பதிவுலகில் இயங்கிக்கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டார். பதிவுலகில் மிக மிகச்சிலருடன் மட்டுமே மின்னரட்டையில் பேசுவதுண்டு.அவர்களில் ஒருவர் சிந்தாநதி. இரண்டு மாதங்கள் முன் திடீரென ஒருநாள் வந்தவரைக்கண்டு மகிழ்ந்தேன். சில நிமிடங்கள் பேசியதிலேயே, எதோ பிரச்சனைகள் வரமுடியவில்லை என்றார். அவரின் இயர்பெயர் என்ன எனபது கூட தெரியாது.பல இடங்களிலும் அவரே இயர்பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது கண்டு நாகரிகம் கருதி கேட்காமலே இருந்துவிட்டேன். இப்போது கேட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்னும் சில நிமிடங்கள் பேசி இருக்கலாம்.ஏதாவது உதவி தேவையா என்று கூட கேட்டிருக்கலாம். இப்போது வருந்துகிறேன். முன்பெல்லாம் அடிக்கடி அரட்டையில் வருவார்.மிகவும் பின்னரவாகக்கூட இருக்கும்.அமரிக்க பகல் நேரத்தில் என்ன இந்...
முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையுடன்...