முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்படப் போட்டிக்கு - 6

இது போட்டிக்கு

இதெல்லாம் சும்மா.


அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை.

தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும…

புரட்சி நாளை வருகிறது!!

இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக
கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது.
சில முக்கிய அம்சங்களாவன
1. திறந்தவூற்று மென்பொருள்

2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM ஒன்றை v8 எனும் புதிய இயங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்(மற்ற உலவிகளில் இதை வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. ஒரே ஒரு tabஐ மட்டும் மிகுந்த கட்டுப்பாடுடன் இயக்கமுடியும். அதாவது அதில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தொட்ர்பு கொண்ட வழங்கிக்கி மட்டுமே அறியமுடியும். இதனால் கடவுச்சொல் திருட்டு, உங்களுக்கு தெரியாமல் கணினியில் மென்பொருள் நிறுவுவது, கடனட்டை விவரத்தை திருடுவது போன்றவை திருடாமல் தடுப்படும்.

4. மிகமுக்கியமாக ஒவ்வொரு tabம் ஒரு தனிஉலவிபோல் செயல்படும் அதாவது ஒரு tab சிதைந்தாலோ இயங்காமல் நின்று போனாலோ அல்லது மென்பொருள் இடியாப்பச்சிக்கலில் செயலிழந்தாலோ எல்லாம் சிதையாது. சுருங்கச் சொல்லின் முன்பு browser…