சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை.
தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும் ஈடுஇணையற்றவை. அம்புலிமாமாவைப்பொருத்தவரை அதன் அரசர் காலத்துக்கதைகளும், 'மண்டை வெடிக்க வைக்கும்' வேதாளத்தின் புதிர்கள் மிகவும் பிடித்தமானவை.
இவை இருந்தாலும் மிகவும் பிடித்தது கோகுலம். இதில் கடிதம் எழுதிப்போட்டு கருத்து சொல்வது(அப்போவே ஆரம்பிச்சாச்சு), உறுப்பினர் அட்டை வாங்கி நண்பர்களிடம் காண்பிப்பது என்று இருந்தது மேலாண்மையில் Cult marketing பற்றி எழுதும்போது Case studyக்கு உதவியது.
கோகுலத்தில் வரும் 16பக்க வண்ணப்படக்கதை இப்போதும் வருகிறதா என்று தெரியவில்லை. வீட்டுக்கே வரும் இதழுக்காக பொறுக்காமல் மாதாமாதம் எப்போது வரும் என்று கடைக்கே சென்று கேட்டு நச்சரித்ததும் இனிய நாட்கள்(கடைக்காரருக்கல்ல). அநியாயத்துக்கு காசு கேக்கறாங்க இப்போ. அப்போவே விற்பனை குறைவுன்னு புலம்புவாங்க அப்படி இருக்கையில் இலவசமா கொடுத்தா கொஞ்சம் விளம்பர வருவாயாவது வரும்.(கருத்து !!)
சரி இப்போ எதுக்கு இந்த ஊதுவத்தி சுற்றல்? வழக்கம் போல வெட்டியா இணையத்தை மேயந்த போது அம்புலிமாமா சிக்கியது. யாருக்காவது தெரியாமல் இருந்தா உதவட்டுமேன்னு ஒரு 'அறம் செய்ய விரும்பு'னதுதான்.

கருத்துகள்
வாழ்க வாழ்க!
மின்கல மாதவன் என்றொரு தொடர்கதை வந்தது கோகுலத்தில்.. நினைவிருக்கிறதா.. ?
நன்றாகவே இருக்கிறது
அட பொன்ஸ்,
ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க.
நன்றி.
மாண்ட்ரெக் கதைகளை முத்து, இந்திரஜால காமிக்ஸ்ஸிலும் படித்திருப்பீர்களே.
அம்புலிமாமாவைப் போலவே வந்த பொம்மை வீடு, பாலமித்ரா படித்ததுண்டா?
சுட்டிகளுக்கும் மிக்க நன்றி சத்யா.
அட ஆமாம்.முத்து காமிக்ஸ் மறந்து போச்சு. நிறைய படிச்சிருக்கேன். பாலமித்ராவும்.
பொம்மைவீடா. கேள்விப்பட்டதுகூட இல்லையே. ஏன் வாங்கித்தரலைன்னு அப்பாகிட்ட சண்டை பிடிக்கிறேன். ;-))))
இரத்னபாலா-வை மறந்து விட்டீர்களா? அதில் டாக்டர் பூவண்ணனின் தொடர்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.
இடையில் www வராது. சூப்பர் கதைகள் உள்ளன அங்கே..!!