முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பகலொளி சேமிப்பு நேரம்

    http://www.fallingfifth.com/comics/20070311    நடராஜ் காலில் வெந்நீர் ஊற்றினார்போலவே ஓடும் பையன். காலையில் ஒன்பதரைக்கு நகரின் நடுவில் முக்கிய வேலை என்றால் 8;50க்கு தான் ரயில் பிடிக்கப் போவான். ரயிலைப்பிடித்து, பேருந்து பிடித்து, ஆட்டோ பிடிக்கவேண்டும். இதே வழக்கமாப் போச்சு என்று அவன் அம்மா ஒருநாள் காலையில், சிலர் ஐந்து பத்து நிமிடம் அதிகமாக கடிகாரத்தில் 'fast' ஆக வைத்துக்கொள்வாரே, அதேபோல் கடுப்பில் ஒருமணிநேரம் 'fast'ஆக கைப்பேசி நேரத்தை வைத்துவிட்டார்.     இது தெரியாமல் நடராஜ் நாள் முழுக்க எல்லா வேலைக்கும் ஒரு மணி முன்னதாகவே செல்வதை உணர்ந்தான். அப்போதுதான் கடிகாரத்திலும் போனிலும் வேறு வேறு நேரம் இருப்பதைப் பார்த்து அம்மாவின் சேட்டை என்று புரிந்து சரிசெய்துகொண்டான். ஆனால் அவனுக்கு அன்று எல்லாம் ஒரு மணிநேரம் முன்னதாகவே முடிந்துவிட மாலையிலும் விளையாட்டு, நடை என்று கொஞ்சம் நேரம் செலவிட்டான்.   இப்போது அந்த ஒருமணிநேரம் எங்கே வந்தது? எங்கே போச்சு? எதுவுமே ஆகவில்லை சரிதானே.   இதேதான் நடக்கிறது பகலொளி சேமிப்பு நேரம் எனப்படும் daylight saving time போது. ஆறு ஏழு மாத