முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசூர் வம்சம்

ஜெயமோகன் 2கோடி தமிழர்கள் தமிழகத்துக்கு வெளியே வாழ்வதாக ஒரு கணக்கைச் சொல்கிறார்.இத்தனை பேரும் அடுத்த தலைமுறை அதற்கடுத்த தலைமுறை என்று அவரவர் சமூகம் சார்த்த அறக்கோட்பாடுகளையும் வழக்கங்களையும் மொழியையும் சேர்த்துக்கொண்டும் சிதைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி ஒரு தலைமுறை, கடைக்கு போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அமர்ந்திருக்கும் விருந்தாளியைப்போல்,சடக்கென உங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு வருகிறது அரசூர் வம்சத்தை படிக்கும்போது. பனியன் சகோதரர்கள் வருகிறார்கள், வயசன் பறக்கிறார், முடிந்துகொண்டு நலங்குப்பாடல்களை மூத்தகுடிப்பெண்டுகள் பாடுகிறார்கள் நட்ட நடுவே ஒன்றும் புரியாமல் நீங்களும் அமர்ந்திருக்கிறீர்கள். மாய எதார்த்த நாவல்கள்(magical realism) வகை நாவல்கள் காலக்கயிற்றில் மாட்டிக்கொண்ட காத்தாடிப்பட்டம் போல் இல்லை இல்லை.. ஊடுநூலும் பாவு நூலும் போல.. வேண்டாம் ஒரு Pendulum போல உங்களை முன்னும் பின்னும் இன்னும் கொஞ்சம் முன்னும் என்று மாற்றி மாற்றி கொஞ்சம் தலைசுற்ற வைக்கிற கதைசொல்லும் வடிவம். காபரியேல் மார்க்யூசு சொல்வது போல் கொஞ்சம் அசந்தால் விவரணைகளிலிலேயே

சிந்தாநதி - அஞ்சலி

நேற்று டிவிட்டரில் சிந்தாநதி மறைந்துவிட்டார் என்ற செய்தியைப் பார்த்தபோது மிகவும் அதிர்ந்துபோனேன். சிந்தாநதி என்னும் பெயரைக்கேட்ட உடனே எனக்கு நினைவுக்கு வருவது அவரின் ' எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள் ' என்னும் கவித்துவமான வரிகள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் மிகவும் துடிப்போடு தமிழ்ப்பதிவுலகில் இயங்கிக்கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டார். பதிவுலகில் மிக மிகச்சிலருடன் மட்டுமே மின்னரட்டையில் பேசுவதுண்டு.அவர்களில் ஒருவர் சிந்தாநதி. இரண்டு மாதங்கள் முன் திடீரென ஒருநாள் வந்தவரைக்கண்டு மகிழ்ந்தேன். சில நிமிடங்கள் பேசியதிலேயே, எதோ பிரச்சனைகள் வரமுடியவில்லை என்றார். அவரின் இயர்பெயர் என்ன எனபது கூட தெரியாது.பல இடங்களிலும் அவரே இயர்பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது கண்டு நாகரிகம் கருதி கேட்காமலே இருந்துவிட்டேன். இப்போது கேட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்னும் சில நிமிடங்கள் பேசி இருக்கலாம்.ஏதாவது உதவி தேவையா என்று கூட கேட்டிருக்கலாம். இப்போது வருந்துகிறேன். முன்பெல்லாம் அடிக்கடி அரட்டையில் வருவார்.மிகவும் பின்னரவாகக்கூட இருக்கும்.அமரிக்க பகல் நேரத்தில் என்ன இந்