முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புகைப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மே மாத புகைப்பட போட்டிக்கு

மே மாத புகைப்பட போட்டிக்கான என் படம்.

புகைப்படப் போட்டிக்கு - 6

இது போட்டிக்கு இதெல்லாம் சும்மா.

புகைப்பட போட்டிக்கு-5

இதோ நம்ம இரண்டு படங்கள் மத்தெலாம் தினமும் உபயோகிக்கும் பொருட்களில் சேத்துக்க முடியாது அப்படின்னா ஒண்ணும் பண்ண முடியாது ;-)

புகைப்படங்கள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

புகைப்பட போட்டிக்கு -3

இருப்பவர்களுக்கு வாழ்க்கை வண்ணமயமானது தாய் தந்தை கூட இல்லாத இந்த அனாதைக்குழந்தைகளுக்கு வாழ்வே இருட்டுதான். எந்த நிறமாய் இருந்தால் என்ன எல்லா நிறங்களிலும் அனாதைகள் உருவாக்கப்படுகிறார்கள்

கறுப்பு வெள்ளைப்படங்களும் உணர்ச்சிகளும்

செல்லா இந்த பதிவை போட்டு ஒரு குறு வாக்குப்பதிவு நடத்திக்கொண்டு இருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே படங்களை இணைத்தேன். அதாவது படங்களே கறுப்பு வெள்ளையில் எடுத்தது. இல்லையென்றால் ஒப்புமைக்கு உதவும். Post Processing செய்ததில்லை. அதென்ன சரியா படமெடுக்காமல் கடைசில அத மாத்திக்கறது என்று ஒரு கேள்வி எனக்கு. அது அழுகுணி ஆட்டம் என்று ஒரு எண்ணம். இதே படச்சுருளில் எடுத்தால் இந்த மாதிரி சரி செய்ய முடியுமா என்று ஒரு துணைக்கோபம் வேறு. இதனாலேயே எந்த மென்பொருளும் இல்லாமல் இதுவரை ஓட்டிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் அதுவும் எல்லோரும் photoshopல் கலக்கும்போது (எங்க போனாலும் காசு கேக்குது) நான் மட்டும் கட்டற்ற மென்பொருள் அபிமானத்தில் GIMPஐ வைத்தும் picasaவை வைத்தும் கொஞ்சம் விளையாடலாம் என்று தரவிறக்கி வைத்திருந்தேன். மேல சொன்ன பதிவை பார்த்ததும் கொஞ்சம் விளையாடியதின் விளைவு இங்கே. படத்தை உபயோகிக்க அனுமதி தந்ததற்கு வி. ஜெ. சந்திரனுக்கு நன்றி. அவரின் ஒரிஜினல் இங்கே. ஒரு சின்ன கத்தரிப்பு. அப்புறம் ஒரு கறுப்புவெள்ளையாக்கல் இதில் சொல்லுங்கள் உங்கள் ஓட்டு எதுக்கு? கறுப்பு வெள்ளை...

புகைப்படப் போட்டிக்கு - 2

அதென்னவோ கறுப்புவெள்ளை மாதிரி உணர்ச்சிகளை மட்டும் காண்பிக்க வண்ணப்படங்கள் வரமாட்டேன் என்கிறது. என்னுடைய இரண்டு. கள்ளமில்லாச்சிரிப்பும் தூக்கம், அழுகை மற்றும் கேள்வியும்.

புகைப்படப் போட்டிக்கு

புகைப்படப் போட்டின்னு வந்தப்புறம் கலந்துக்கலைன்னா எப்படி? சரி வீட்டுக்கு போன அப்புறம் மடிக்கணினிலேந்து தோண்டி கொஞ்சம் சாவகாசமா இதுவரை இங்க போடத படமா, நல்லதா போடலாம்னு இருந்தேன். பார்த்தா அதுக்குள்ள 16 பேர் பின்னூட்டம் போட்டுட்டாங்க. இன்னும் விட்டா 30 என்ன முன்னூறே போட்டுடுவாங்க. அதனால் இரண்டை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.