முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எகொஇச?

ஆங்கிலச்சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதுவது நான் அடிக்கடி முயலும் சங்கதி. மின்னஞ்சல்களில், ட்விட்டரில் எல்லாம். எத்தனை கலப்படம் செய்கிறேன் என்று அறிந்துகொள்வதற்காக. படத்தை பாருங்கள். சட்டென்று முகத்தில் அறையும் கலப்படம் தெரிவது முன்னேற்றமா அல்லது இன்னும் மிச்ச்சொச்சம் மறைந்து ஆங்கிலமே அகிவிட்ப்போவத்தற்கான வீழ்ச்சியா? தெரியவில்லை. இப்போதைக்கு தோன்றுவது தலைப்பு.

எச்சரிக்கை:இது ஒரு வெட்டி பதிவு

எனக்கும் சடப்பாண்டிக்கும் பலகால நட்பு. சடப்பாண்டி சென்னைத்தமிழ் காதலன். நான் அவன் காலைவாருவதும், அவன் என்னை தாக்குவதும், கருணாநிதி ராம்தாஸ் மாதிரி அப்படி ஒரு அதீத நட்பு. அரசியல் மீட்டிங்குகளில் திடீரென கேள்விப்படும் விஷயங்களில் சந்தேகம் வந்துவிடும் நம்ம சடபாண்டிக்கு, அல்லது ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்டு நம்மை மடக்குவதில் சடபாண்டிக்கு அலாதி இன்பம். '' நைனா, புயநானூறுன்னா இன்னாப்பா? ''என்பான், அவனுக்கு விளக்கி முடிப்பதிற்குள் நமக்கு தொண்டைத்தண்ணி வற்றிவிடும். எது சரி பாணி கேள்விகள் அதிகம் அவனிடமிருந்து வரும். கத்திரிக்காய் கரீட்டா, கத்தரிக்காய் கரீட்டா என்பான்.சேட்டை சேட்டுன்னு கூப்பிடணுமா, சேடுன்னு கூப்பிடணுமான்னான் இன்னொரு நாளைக்கு, தாகம் எடுக்குமா, தாகம் அடிக்குமான்னான்... ஒரு நாளைக்கு. விளக்கெண்ணைக்கு பேரு வச்சது யாருன்னான் ஒருநாளைக்கு. அதுவாவது பரவாயில்லை, ஒரு தடவை 'எதிர்வூட்டு ஆயா, அயுகுது'ன்னான் கடைக்குள்ள வந்துகொண்டே. 'அடப்பாவி, பாட்டி போய்சேந்துட்டாங்களா'ன்னேன். 'ஒன் வாய கழுவுடா... பாட்டி நல்லாதான் கீது... சீரியல் பாத்துட்டு அயுகுது'ன்னான...

மாண்புமிகு முதல்வருக்கு ஓர் கோரிக்கை மடல்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! தங்கள் பிறந்த நாளுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பார்கள். நான் வாழ்த்துக்களுடன் ஒரு சில கோரிக்கைகளையும் தங்கள் முன் வைக்கவிழைகிறேன். தமிழ் கூறும் நல்லுலகம், நடுவண் அரசிடம் போராடி தமிழை செம்மொழி ஆக்கியமைக்காக உங்களை என்றென்றும் வாழ்வாங்கு வாழ்த்தும். மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ், இணையத்தில் ஓரளவு வளர்ந்தே வருகிறது. மொழி சீர்திருத்தம் கொண்டு வந்து சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர வாயப்பு கிடைத்தது. இன்று நாம் அடுத்த கட்ட சீர்திருத்தமும் தனித்தமிழ் வளர்ச்சியும் தூண்டவேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழ் பெரும் தேக்க நிலை பெற்று இருக்கிறது. இணையத்திலும் அறிவியலிலும் அதே வேகத்திற்கு மொழி ஈடுகொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. அவ்வாறு இல்லாத மொழிகள் ஆங்கில ஆதிக்கத்தால் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இதை நிர்வாக ரீதியில் அணுகுதற்கான வழிமுறையோ, செயல்முறையோ அல்லது அதிலுள்ள சிக்கல்களையோ அறியும் அளவிற்கு எனக்கு வயதுமில்லை அனுபவமும் இல்லை. கொச்சையான நேரிடையான மொழியில் சொல்லி விடு...

தேன்கூட்டுக்கு என்ன ஆச்சு?

தேன்கூட்டில் பதிவு செய்து ஒரு மாதத்திற்க்கு மேலாகிறது. ஒரு எதிர்வினையையும் காணோம். Pending approval அப்பிடின்னே சொல்லிக்கிட்டு இருக்கு. மின்னஞ்சல் எல்லாம் அனுப்பி பாத்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. நம்ம feedல தான் பிரச்சனை அப்பிடின்னு ஆதம் ஓடைக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துக்கும் RSS பிடிக்கலை. feedvalidator.org ஆதம் பக்கவா இருக்குன்னு சொல்லுது. என்னோட வலைப்பூவுல பிரச்சனையா இல்லை தேன்கூட்ல பிரச்சனையா? யாராவது விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.

2007 வந்த பார்க்கவேண்டிய படங்கள் யாவை?

எனக்கும் படங்களுக்கும் ரொம்ப தூரம். ஆடிக்கு ஒண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணுனு மொத்தம் இரண்டு படம் பார்த்த வருடங்கள் எல்லாம் உண்டு. காரணங்கள் பல உண்டு. அதை வேறொரு பதிவில் பார்க்கலாம். நான் கேட்க வந்த விஷயம் வேறு. இந்த வருடம் வந்த தமிழ் படங்களில் பார்க்க வேண்டிய படம் என்று நீங்கள் நினைக்கும் படத்தை பற்றி இங்கு பின்னூட்டமிடவும். ஒரு 2 வரி அந்த படத்தை பற்றி போட்டால் மிக்க நலம். காமடி கீமடி பண்ணக்கூடாது. கட்டாயமாக வீராசாமி not allowed. இந்த பதிவை படித்தபிறகு மொழி ஏற்கனவே என் கணக்கில் உள்ளது. பின்னூட்டமிடும் பதிவர்களுக்கு என் நன்றிகள்.

தமிழனின் வரலாறு

பாரதி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற இந்த பதிவை கண்டதும், எனக்கு மிகவும் பிடித்த கவிஞனை பற்றியே எனக்கு எதுவும் தெரியவில்லை என்ற சுயகோபம் எழுந்தது. இதுவே எனக்கு பாடபுத்தகத்திலும் படித்த நினைவு. கொஞ்சம் தேட மெனக்கெட்டால் ஒரு குழப்பமான பதிலே எல்லா இடத்திலும் கிடைத்தது. தமிழில் ஒரு உயர்ந்த இடத்தை பிடித்த பாரதிக்கே இந்த நிலைமை. நமக்கு வரலாறு பற்றிய ஒரு சுயபிரஞ்ஞை இல்லாமல் இருப்பதால் பல விடயங்களை இழந்துவிட்டோம். ஒரு நூறு ஆண்டுகட்கு முன்பு நடந்த ஒரு வரலாறே நம்மிடம் இல்லை எனும் போது மிகவும் வெட்ககேடாக இருக்கிறது.

How to Post in Tamizh? தமிழில் பதிவு செய்வதெப்படி?

I will try to post the simplest way of posting and typing in emails in tamizh. 1. Check whether you have Windows XP Service Pack 2. If not atleast you should have Indic Fonts installed. Open Regional and Language Options in Control Panel. On the Languages tab, under Supplemental language support, select the Install files for complex script and right-to-left languages check box. (You may need CD or network where you have files) Click OK or Apply. After the files are installed, you must restart your computer. 2. Install Barahapad from Baraha I have used Murasu, Tavaultesoft's Keyman and dozens of other editors. I found Baraha to be simple and doesnt give much trouble. Keyman is the second best. 3. While Installing Baraha set it to Tamizh usage 4. Open BarahaPad after installation. Set the Font to BRH Tamil RN. This is useful when you type numerals. The keyboard id phonetic. Meaning you need not worry about the Tamizh Keyboard. type tha-mi-zh will display as தமிழ். sa-th-yaa will disp...

Unbelievable Vaiko!!

எப்படி இதை இதுவரை கேட்காமல் விட்டேன். சமீபத்தில் வைகோவின் விடயம் கேள்விப்பட்டு சங்கொலி படிக்க ஆசைபட்டு சென்ற இடத்தில் இதை பார்க்க நேர்ந்தது. சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் திருவாசக வெளீயீட்டு விழா நிகழ்சசி மறு ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருக்கும் போது வைகோவின் பேச்சை ஒளிபரப்பவில்லை அப்பொழுது முழு ஒளிபரப்பையும் முன்பே பார்த்துவிட்ட என் அம்மா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "தமிழ் ஒரு நல்ல இலக்கியவாதியை அரசியலில் இழந்துவிட்டது , நீ ஒரு நல்ல சொற்பொழிவை miss பண்ணீட்டே".http://www.vaiko-mdmk.com/sangoli/symphony.php

பல நாட்டு கூட்டாஞ்சோறு

இன்று அலுவலகத்தில் potluck எனப்படும் கூட்டாஞ்சோறு நடைபெற்றத்து.நான் என் மனைவி கொடுத்தனுப்பிய Vegetable Biriyani கொண்டு சென்றேன். அனைவரும் சாப்பிட்டார்கள். எனக்கு இது வினொதமானதொரு கூட்டாஞ்சோறு. ஏனெனில் இதில் பல நாடுகளில் இருந்து பல விதமான தின்பண்டங்கள் சாப்பிட வாய்த்தது. What are you wondering? What is the big deal? :-) I am trying to use the BarahaPad and see how it goes. Since I know typing this is little bit of frustrating to type so slowly. So far so good that it is not giving me much Unicode related troubles. So looks like I got a good Tamil Keypad.

தமிழ் விசைப்பலகை

மிகவும் தேடிகொண்டு இருக்கிறேன் ஒரு எளிதான தமிழ் விசைப்பலகையை யாரவது தெரிந்தால் சொல்லுங்கள் உபயோகமாக இருக்கும்!!!