முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...

.......னா?

1.நண்பன் கூப்பிட்டு அவசரத் தேவையென 24 மணி நேரத்தில் என் சேமிப்பு முழுதையும் கேட்டால் கொடுப்பேனா? 2. பொய் சொல்லாமல் சோம்பேறித்தனத்தால் காலதாமதமானதை சொல்வேனா? 3.ஞானம் அதிகமில்லை, சரக்கு இவ்வளவு தான்னு உண்மையச் சொல்லி வேலைக் கேட்பேனா? 4.Treat என்ற பெயரில் ஓசிச்சாப்பாடுக்கு அலையாமல் இருப்பேனா? 5.ஒரு வருடத்திலாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவேனா? 6.ஒரு நாளாவது எடுத்த வேலையை முழுவதுமாய் செய்து முடிப்பேனா? 7.ஒரு விளையாட்டையாவது ஒழுங்காய் கற்பேனா? 8.அலுவலக சந்திப்புகளில் சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு அசட்டு சிரிப்பு சிரிக்காமல் இருப்பேனா? 9.மீட்டிங்குகளில் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடையை தடுமாறாமல் சொல்வேனா? 10.வீட்டிலிருந்தும் ஒரு நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பேனா? 11.ஒரு தடவையாவது அலுவலகத்திற்கு பொய் சொல்லி லீவு போடுவேனா? 12.நாளை பிள்ளை வளர்ந்து, சொல்லும் புதுமைக்கருத்துகளை தடுக்காமல் ஏற்பேனா? 13.மற்றவரிடம் பேசும் பொழுது எல்லாம் தெரிந்த மாதிரி நடிக்காமல் இருப்பேனா? 14.தெரிந்தவர்களிடம் பேசும் போது, என் எண்ணம் தான் உயர்ந்ததென மனதில் தோன்றாமல் இருப்பேனா? 15.காசும், பதவியும் வந்தால...

எச்சரிக்கை:இது ஒரு வெட்டி பதிவு

எனக்கும் சடப்பாண்டிக்கும் பலகால நட்பு. சடப்பாண்டி சென்னைத்தமிழ் காதலன். நான் அவன் காலைவாருவதும், அவன் என்னை தாக்குவதும், கருணாநிதி ராம்தாஸ் மாதிரி அப்படி ஒரு அதீத நட்பு. அரசியல் மீட்டிங்குகளில் திடீரென கேள்விப்படும் விஷயங்களில் சந்தேகம் வந்துவிடும் நம்ம சடபாண்டிக்கு, அல்லது ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்டு நம்மை மடக்குவதில் சடபாண்டிக்கு அலாதி இன்பம். '' நைனா, புயநானூறுன்னா இன்னாப்பா? ''என்பான், அவனுக்கு விளக்கி முடிப்பதிற்குள் நமக்கு தொண்டைத்தண்ணி வற்றிவிடும். எது சரி பாணி கேள்விகள் அதிகம் அவனிடமிருந்து வரும். கத்திரிக்காய் கரீட்டா, கத்தரிக்காய் கரீட்டா என்பான்.சேட்டை சேட்டுன்னு கூப்பிடணுமா, சேடுன்னு கூப்பிடணுமான்னான் இன்னொரு நாளைக்கு, தாகம் எடுக்குமா, தாகம் அடிக்குமான்னான்... ஒரு நாளைக்கு. விளக்கெண்ணைக்கு பேரு வச்சது யாருன்னான் ஒருநாளைக்கு. அதுவாவது பரவாயில்லை, ஒரு தடவை 'எதிர்வூட்டு ஆயா, அயுகுது'ன்னான் கடைக்குள்ள வந்துகொண்டே. 'அடப்பாவி, பாட்டி போய்சேந்துட்டாங்களா'ன்னேன். 'ஒன் வாய கழுவுடா... பாட்டி நல்லாதான் கீது... சீரியல் பாத்துட்டு அயுகுது'ன்னான...

இலவசகொத்தனாருக்கு சமர்ப்பணம் அல்லது படம் காட்டுதல்

நட்சத்திர வாரத்துல எல்லா பதிவையும் தீவிரமான பதிவா போட்டா இவன் தீவரவாதின்னு முத்திரை குத்தீடுவாங்கன்னு தமிழ் பதிவுலகின் மிக மிக முக்கியமான பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இருக்கற கொஞ்சநஞ்ச விஷயத்தையும் ஒரே வாரத்தில எழுத சொல்லீட்டாங்ளேன்னு கடுமையா சிந்தனை பண்ணிக்கிட்டு இருந்தப்போ, சிஷ்யன் தயாராகும் போது குரு தோன்றுவார் அப்படிங்கற மாதிரி இலவசக்கொத்தனார் இந்த பதிவைப் போட்டார். கொத்தனார், கட்டைவிரலெல்லாம் கேட்கக்கூடாது, சொல்லிட்டேன்!! அதனால் படம் காட்டறதுன்னு முடிவு பண்ணியாச்சு!! சிலருக்கு கோடை காலமானால் சுற்றுலா போக வாய்ப்பும் நேரமும் கிடைக்கும். சிலருக்கு பணி நிமித்தம் வேறு இடங்களுக்கு போக வாய்ப்பு கிடைக்கும். அப்படி பணி நிமித்தம் வேறு இடங்களுக்குப் போக வாய்பும்,ஊர் சுற்ற நேரமும் கிடைத்தால்.... நான்தான் அந்த அதிர்ஷ்டசாலி. சுருக்கமா சொல்லணும்னா, நான் தற்போது வசிக்கும் மாசூசட்ஸ் மாகாண Cape Cod வடகிழக்கு அமரிக்காவின் Goa மாதிரி. குளிர் காலத்தில் மனிதத்தலையை (மிருகத்தலையும் சேர்த்து தான்) காணக்கிடைக்காது. வெய்யில் காலத்துல அமரிக்க மக்கள் மட்டுமில்லாம பல்வேறு நாடு...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

சபாஷ்.. சரியான போட்டி!!!

முதலில்... அடுத்து.... :-)

பரபரப்பு தகவல்: இங்கிலாந்து ராணி இந்தியாவிடம் மன்னிப்பு!!

இங்கிலாந்து ராணி இந்தியாவிடம் பிரிவினைக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதை பிரிடிஷ் பிரதமர் இன்று பிரிடிஷ் நாடளுமன்றத்தில் அறிவித்தார். அந்தச் செய்தி பின்வருமாறு. 1947ல் விடுதலை சுதந்திரம் கொடுக்கும் போது தவறு விளைந்துவிட்டது. இதன் விளைவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உருவாகி இன்று அது பல பிரச்சினைகளுக்கு ஆதாரமான விஷயமாகி விட்டது. பல்வேறு தரப்பிலிருந்தும் இன்று அடிவாங்கிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் முதல் தேர்தலே இல்லாமல் ராஜாவாக இருக்கும் முஷாராஃப் வரை பல பிரச்சினைகளுக்கும் இதுவே ஒரு பலத்த காரணமாக இருக்கிறது. ஒரு வேளை பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்திருக்காது. பின்பு இந்தியாவின் தயவில் பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உருவாகி உலககோப்பையில் போட்டு சாத்தி இருக்காது. பாகிஸ்தான் இல்லாமல் எப்படி அயர்லாந்து அதை வெற்றி பெறும், அதனால் பாவம் உல்மர் மரணம் சர்ச்சை வேறு உருவாகி இருக்காது. ஆகையால் இப்படி பல பிரச்சனைகளுக்கும் காரணமான பிரிவினை இங்கிலந்து அரசின் முட்டாள்தனத்தால் வந்தது. அதற்காக இங்கிலாந்து மக்களின் சார்பில் இந்தியாவிடம்...

உலகம் அழிந்துவிட்டால்

நாளை உலகம் அழிந்துவிட்டால் நாம் இன்று கண்டுபிடித்திருக்கும் பல விடயங்கள் அழிந்துவிடும். அறிவியலார் டைனசர் காலத்தில் ஒரு கோள் விழுந்து உயிரினங்கள் அழிந்துவிடடதாக கூறுகின்றனர். நாளை உலகம் அந்த மாதிரி அழிந்துவிட்டால் எஞ்சப் போவது என்ன? நாம் கட்டிய உயர்ந்த கட்டிடங்களும் மிஞ்சும் சில கிறுக்கல்களும் தான். யாருக்கு தெரியும் காதலன் காதலி பெயரை கிறுக்கி இருக்கும் பாறைகள் மிஞ்சினால் உண்டு. கொஞ்சம் சிந்தித்தால் நாம் அறிவால் உணர்ந்த விடயங்கள அடுத்து வரும் மனிதர்கள்(அவர்களும் மனிதனைப்பொன்ற ஒரு உயிரினம்) நம்மை பற்றி என்ன அளவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் இந்த சிந்தனையை நீட்டினால் ஏன் நாம் கூட நம் மூதாதையரின்(அப்படி அழிந்து போயிருந்தால்) அறிவை பற்றி நாம் ஏன் தவறான ஒரு கண்ணோடத்தை பெற்று இருக்க கூடாது?