முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரபரப்பு தகவல்: இங்கிலாந்து ராணி இந்தியாவிடம் மன்னிப்பு!!

இங்கிலாந்து ராணி இந்தியாவிடம் பிரிவினைக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதை பிரிடிஷ் பிரதமர் இன்று பிரிடிஷ் நாடளுமன்றத்தில் அறிவித்தார். அந்தச் செய்தி பின்வருமாறு. 1947ல் விடுதலை சுதந்திரம் கொடுக்கும் போது தவறு விளைந்துவிட்டது. இதன் விளைவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உருவாகி இன்று அது பல பிரச்சினைகளுக்கு ஆதாரமான விஷயமாகி விட்டது. பல்வேறு தரப்பிலிருந்தும் இன்று அடிவாங்கிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் முதல் தேர்தலே இல்லாமல் ராஜாவாக இருக்கும் முஷாராஃப் வரை பல பிரச்சினைகளுக்கும் இதுவே ஒரு பலத்த காரணமாக இருக்கிறது. ஒரு வேளை பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்திருக்காது. பின்பு இந்தியாவின் தயவில் பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உருவாகி உலககோப்பையில் போட்டு சாத்தி இருக்காது. பாகிஸ்தான் இல்லாமல் எப்படி அயர்லாந்து அதை வெற்றி பெறும், அதனால் பாவம் உல்மர் மரணம் சர்ச்சை வேறு உருவாகி இருக்காது. ஆகையால் இப்படி பல பிரச்சனைகளுக்கும் காரணமான பிரிவினை இங்கிலந்து அரசின் முட்டாள்தனத்தால் வந்தது. அதற்காக இங்கிலாந்து மக்களின் சார்பில் இந்தியாவிடம்

தேன்கூட்டுக்கு என்ன ஆச்சு?

தேன்கூட்டில் பதிவு செய்து ஒரு மாதத்திற்க்கு மேலாகிறது. ஒரு எதிர்வினையையும் காணோம். Pending approval அப்பிடின்னே சொல்லிக்கிட்டு இருக்கு. மின்னஞ்சல் எல்லாம் அனுப்பி பாத்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. நம்ம feedல தான் பிரச்சனை அப்பிடின்னு ஆதம் ஓடைக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துக்கும் RSS பிடிக்கலை. feedvalidator.org ஆதம் பக்கவா இருக்குன்னு சொல்லுது. என்னோட வலைப்பூவுல பிரச்சனையா இல்லை தேன்கூட்ல பிரச்சனையா? யாராவது விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.

2007 வந்த பார்க்கவேண்டிய படங்கள் யாவை?

எனக்கும் படங்களுக்கும் ரொம்ப தூரம். ஆடிக்கு ஒண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணுனு மொத்தம் இரண்டு படம் பார்த்த வருடங்கள் எல்லாம் உண்டு. காரணங்கள் பல உண்டு. அதை வேறொரு பதிவில் பார்க்கலாம். நான் கேட்க வந்த விஷயம் வேறு. இந்த வருடம் வந்த தமிழ் படங்களில் பார்க்க வேண்டிய படம் என்று நீங்கள் நினைக்கும் படத்தை பற்றி இங்கு பின்னூட்டமிடவும். ஒரு 2 வரி அந்த படத்தை பற்றி போட்டால் மிக்க நலம். காமடி கீமடி பண்ணக்கூடாது. கட்டாயமாக வீராசாமி not allowed. இந்த பதிவை படித்தபிறகு மொழி ஏற்கனவே என் கணக்கில் உள்ளது. பின்னூட்டமிடும் பதிவர்களுக்கு என் நன்றிகள்.

புதுப்பதிவர் அறிய வேண்டிய மற்றும் ஒர் முக்கிய விஷயம்!!

நான் சின்ன வயசுல சென்னைக்கு வந்த புதுசுல மக்கள் வேற எதோ பாஷை பேசறாங்கன்னு நெனச்சுப்பேன். கொஞ்ச காலம் பொன அப்புறம்மாதான் தெரிஞ்சுது அவங்க தமிழ்ல தான் பேசறாங்க ஆனா நமக்கு தான் தமிழறிவு கம்மினு. பின்ன பெங்களுர் வந்த புதுசுல தமிழ்ல பேசற மக்கள பாத்து சந்தோஷப்பட்டேன். பாத்தா, 'ஆமாவா' ஸ்டைல் தமிழ் கேட்டு இன்னும் நிறைய தெரிய வேண்டி இருக்குன்னு இருந்தேன். அப்பிடியே கொஞ்சம் இணையம் பக்கம் வந்தா, மறுமொழி மட்டுறுத்தல், பாகச, பொகசனு கொசகொசன்னு ஒண்ணுமே விளங்கலே. புதுப்பதிவனான எனக்கு மக்கள் என்னமோ சொல்றாங்க ஆனா என்னனு தான் புரியலன்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருந்தேன். அறிவுக்கண்ண திறக்கற மாதிரி ரவிசங்கர் ஒரு பதிவ போட்டு இருக்கார். நீங்களூம் என்ன மாதிரி fresherனா கட்டாயமா போய் பாருங்க. இங்கயும பார்க்கலாம்.