நான் சின்ன வயசுல சென்னைக்கு வந்த புதுசுல மக்கள் வேற எதோ பாஷை பேசறாங்கன்னு நெனச்சுப்பேன். கொஞ்ச காலம் பொன அப்புறம்மாதான் தெரிஞ்சுது அவங்க தமிழ்ல தான் பேசறாங்க ஆனா நமக்கு தான் தமிழறிவு கம்மினு. பின்ன பெங்களுர் வந்த புதுசுல தமிழ்ல பேசற மக்கள பாத்து சந்தோஷப்பட்டேன். பாத்தா, 'ஆமாவா' ஸ்டைல் தமிழ் கேட்டு இன்னும் நிறைய தெரிய வேண்டி இருக்குன்னு இருந்தேன். அப்பிடியே கொஞ்சம் இணையம் பக்கம் வந்தா, மறுமொழி மட்டுறுத்தல், பாகச, பொகசனு கொசகொசன்னு ஒண்ணுமே விளங்கலே. புதுப்பதிவனான எனக்கு மக்கள் என்னமோ சொல்றாங்க ஆனா என்னனு தான் புரியலன்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருந்தேன். அறிவுக்கண்ண திறக்கற மாதிரி ரவிசங்கர் ஒரு பதிவ போட்டு இருக்கார். நீங்களூம் என்ன மாதிரி fresherனா கட்டாயமா போய் பாருங்க. இங்கயும பார்க்கலாம்.
பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக...
கருத்துகள்