முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணைய வானொலி முடிவுக்கு வருமா?

ஆம். இணையத்தில் வானொலி கேட்கும் பலருக்கும் இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி. வாஷிங்டனில் இருந்து இயங்கும் காப்புரிமைக் கழகம் வானொலி வலைத்தளங்களுக்கான கட்டணத்தை 3 மடங்காக்கி இருக்கிறது. அதுவும் சும்மா இல்லை இது போன வருடம் (2006 ஜனவரி 1ல்) இருந்து பாக்கி சேர்த்து இந்த வருடம் மே 15ல் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் பல தளங்கள் திவாலாகும் அல்லது வானொலி சேவைகள் முடிவுக்கு வரும என செய்தித் தளங்களும் வானொலி சேவை தரும் தளங்களும் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்களுக்கு http://www.savenetradio.org/ http://www.kurthanson.com/archive/news/041607/index.shtml http://www.shoutcast.com/

எத்தனை கோடி அழகை வைத்தாய் இறைவா...

ஏதோ 4,5 விடயங்கள்சொல்லிக் கொடுத்ததற்காக ஞாபகம் வைத்து என்னையும் அழைத்தற்கு நன்றி அன்புத்தோழி !! அழகென்றால் எனக்கு உடற்கூறு அல்லது தோற்றம் தாண்டி மனதிற்கு இதமளிக்க கூடிய எதுவுமே அழகுதான். நம் ரசனையில் தான் இருப்பது அழகு. இவ்வுலகமே அழகுமயமானதுதான். சரி 6 மட்டும் சொல்லவேண்டுமென்பதால்... மலை: எல்லோரும் கடற்பெருமை பேசுகின்றனர். எனக்கென்னவோ மலை நிரம்பப் பிடிக்கும். கொல்லி மலை, ஜவ்வாது மலை, ஊட்டி, குற்றாலம், பாபநாசம் னு.. நம்ம ஊரு மலை தவிர இங்கே வெள்ளயங்கிரி(white mountainக்கு தமிழ்ல என்ன:-)) போய் இருக்கேன். மலையோட கம்பீர அழக ரசிக்கணும்னா நீங்க ஒரு பிரயாணத்துல ஜன்னலோரம் உக்காந்து பார்த்தால் தான் தெரியும்.. வானம்: எல்லாரும் நிலவ ரசிப்பாங்க.. ஆனா எனக்கு நிலவையும் தாண்டி வானத்தோட அழகு தான் ரொம்ப பிடிக்கும். வானமும் நம்ம மனசு மாதிரி தான். அதில அலைபாயும் மேகங்கள் மாதிரி நினைவுகள் வந்து கிட்டே இருக்கும். வானத்துக்கும் முடிவு ஆரம்பம் எல்லாம் கிடையாது நம்ம மனசு மாதிரியே. வானமும் நம்ம கூடவே வரும்.. இதோட நிறுத்திக்கிறேன்.. ( ஒரு தனி பதிவே போடணும்... நான் வானத்த பத்தி எழுதணும்னா..).. முருகன்: அதென்ன