முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எத்தனை கோடி அழகை வைத்தாய் இறைவா...

ஏதோ 4,5 விடயங்கள்சொல்லிக் கொடுத்ததற்காக ஞாபகம் வைத்து என்னையும் அழைத்தற்கு நன்றி அன்புத்தோழி!! அழகென்றால் எனக்கு உடற்கூறு அல்லது தோற்றம் தாண்டி மனதிற்கு இதமளிக்க கூடிய எதுவுமே அழகுதான். நம் ரசனையில் தான் இருப்பது அழகு. இவ்வுலகமே அழகுமயமானதுதான். சரி 6 மட்டும் சொல்லவேண்டுமென்பதால்...

மலை:
எல்லோரும் கடற்பெருமை பேசுகின்றனர். எனக்கென்னவோ மலை நிரம்பப் பிடிக்கும். கொல்லி மலை, ஜவ்வாது மலை, ஊட்டி, குற்றாலம், பாபநாசம் னு.. நம்ம ஊரு மலை தவிர இங்கே வெள்ளயங்கிரி(white mountainக்கு தமிழ்ல என்ன:-)) போய் இருக்கேன். மலையோட கம்பீர அழக ரசிக்கணும்னா நீங்க ஒரு பிரயாணத்துல ஜன்னலோரம் உக்காந்து பார்த்தால் தான் தெரியும்..

வானம்:
எல்லாரும் நிலவ ரசிப்பாங்க.. ஆனா எனக்கு நிலவையும் தாண்டி வானத்தோட அழகு தான் ரொம்ப பிடிக்கும். வானமும் நம்ம மனசு மாதிரி தான். அதில அலைபாயும் மேகங்கள் மாதிரி நினைவுகள் வந்து கிட்டே இருக்கும். வானத்துக்கும் முடிவு ஆரம்பம் எல்லாம் கிடையாது நம்ம மனசு மாதிரியே. வானமும் நம்ம கூடவே வரும்.. இதோட நிறுத்திக்கிறேன்.. ( ஒரு தனி பதிவே போடணும்... நான் வானத்த பத்தி எழுதணும்னா..)..

முருகன்: அதென்னவோ நினைவு தெரிஞ்ச நாள்லேந்து முருகனை எங்கு பார்த்தாலும் பக்தியையும் தாண்டி அவன் வடிவழகில் மனம் லயித்துவிடும். அது நம்ம VSK அய்யா பதி்வில் வரும் படமா இருந்தாலும் சரி அந்த கடற்கரையாண்டி ஆனாலும் சரி. திருப்பரங்குன்றம் முருகனை பாத்திருங்கீங்களா!!. முருகன் அல்லது அழகு... சும்மாவா சொன்னாங்க.

பனி: நம்ம மார்கழி மாச குளிர் பிச்சை வாங்கற வடமேற்கு அமரிக்காவின் கடும் பனியானுலும், பனி அப்பிடின்னாலே ஒரு அழகு இருக்கிறது. ஊருக்கே வெள்ளை அடிச்சு விட்டாமாதிரி ஏதோ சட்னு காலண்டார் படத்துல/screensaverல நுழஞ்சிட்டா உண்ர்வு வரும் பனிக்காலத்துல.. பிஞ்சு பிஞ்சு தேங்கா துருவல் மாதிரி முகத்தில விழற பனிய ஒரு கண்ணாடி ஜன்னல் வழியா பார்த்துகிட்டே இருக்கலாம்.

குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு... இதை விளக்க என் எழுத்தழகு போதாது..

பெண்: வாழ்க்கையில் சந்திக்ககூடிய எல்லா பெண்களும் அழகாகவே மனதில் பதிகிறார்கள்.. "அய்யா, ஊர்லேந்து வந்திருக்கே இன்னைக்காவது நேரத்துக்கு சாப்பிடக்கூடாதா" எனக்கேட்கும் தாய் தான் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை என்பதை மறந்துவிடுகிறாள்.. "மேல இருக்குற தோசய பொட்டுக்கோ கீழ இருக்கறது எனக்கு " எனும் மனையாள், அவள் பார்க்காத போது(குறுக்குபுத்தி:-)) அடியில் என்ன அப்படி இருக்கு என்று பார்த்தால் தீய்ந்து போனது பார்த்து சிரிக்கிறது.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அக்கா, தங்கை, சினேகிதி, சித்தி, பெரியம்மா, பாட்டி, அத்தை என்று மனதை வாஞ்சை செய்த தருணங்களை...
சமூகத்தில் எவ்வளவு தூரம் இழிவுசெய்யப்பட்டாலும் அவமான படுத்தபட்டாலும் சகிக்க கூடிய இரும்பு மனம் படைத்தவள் எப்படி அறிந்தமாத்திரத்தில் யாரோ ஒருவருக்கு எப்போதோ ஏற்பட்ட துயரத்துக்காக சட்டென்று மனம் வாடி விடுகிறாள்.. இப்படி தியாகமாகவே வாழும் பெண்களை விட அழகை எங்கே காணமுடியும்..


கருத்துகள்

காட்டாறு இவ்வாறு கூறியுள்ளார்…
//அய்யா, ஊர்லேந்து வந்திருக்கே இன்னைக்காவது நேரத்துக்கு சாப்பிடக்கூடாதா" எனக்கேட்கும் தாய் தான் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை என்பதை மறந்துவிடுகிறாள்.////மேல இருக்குற தோசய பொட்டுக்கோ கீழ இருக்கறது எனக்கு " எனும் மனையாள்,//

அழகுதாங்க!

//மலையோட கம்பீர அழக ரசிக்கணும்னா நீங்க ஒரு பிரயாணத்துல ஜன்னலோரம் உக்காந்து பார்த்தால் தான் தெரியும்.. //

ஆனா மலை மேல ஏறிப் போய், கீழ உள்ள ஊர், மக்கள் பாக்கும் போது மலையோட கம்பீரம் இன்னும் தெரியும் என்பது அடியேனுடைய சிறு கணிப்பு.

ரொம்ப அழகா சொல்லிட்டீங்க!
அன்புத்தோழி இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் கற்பனை கலந்த அழகு. சுற்றில் கலந்து கொண்டதிற்கு நன்றி திரு சத்யா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...