முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

May, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இளவேனிற் காலம்

Canon S3 IS.

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது.(வெர்ஷன் - 5)

ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

கறுப்பு கூகிளும் சுற்றுச்சூழலும்

பொதுவாகவே வலையில் மிக அதிகமாக பார்வையிடப்படும் வலையகங்களை பார்த்தால் அதன் வார்ப்புரு மிக எளிமையாக, வெண்மையான பின்ணணியில் இருக்கும். இதே வெண்மை பின்னணிதான் நாம் உபயோகிக்கும் பல மென்பொருட்களிலும், மென்பொருள் உருவாக்குதளங்களிலும் காணக்கிடைக்கிறது. அச்சடித்த காகித பழக்கத்தின் நீட்சியே இவ்வாறு நமக்கு பழகிப்போனதாக கருதவேண்டியிருக்கிறது.

கணிணிதிரையை பொருத்தவரை ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு அளவு மின்சாரம் செலவழிவதாக இங்கு தெரிவிக்கிறார்கள்.
இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி ஓரு நாளைக்கு பல கோடி பார்வைகளை பெறும் கூகிளை கறுப்பு வண்ணத்தில் மாற்றினால் ஒரு வருடத்திற்கு 750 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கமுடியும் என்கிறார்கள் Blackle எனும் தளத்தை உருவாக்கி இருப்போர். இந்த எண்ண உருவாக்கத்திற்கு அவர்களுக்கு தூண்டுகோலாக அவர்கள் சுட்டுவது ஒரு பதிவை என்பது ஆச்சரியமாக இல்லை.

கண்ணை உருத்துமோ எனும் பயமிருந்தால் அலுவலகத்தில் முக்கால்வாசி கறுவண்ண பின்னணியை உபயோகிப்போன் என்ற அளவில் என்னைக்கேட்டால் கட்டாயம் உருத்தாது. உண்மையில் பல மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யும்போது ஏற்படும் கண்ணயர்ச்சியை ஏற்படுத்தாது.

சபாஷ்.. சரியான போட்டி!!!

முதலில்...
அடுத்து....:-)

என்றும் பதினாறு - 1

கணிப்பொறியின் அடிப்படை தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விடயம் கணிப்பொறி ஒரு முட்டாள் பெட்டி அதற்கு தெரிந்ததெல்லாம் ஒன்றும் சுழியும் மட்டுமே என்று. ஆனால் பைனரி எனப்படும் இரும எண்ணில் கட்டளைகளை இடுவது நமக்கு மிகவும் கடினமானதும் மிக நீண்ட நிரல்களையும் உருவாக்க வேண்டியதுமாகிறது. இது மிகவும் பின்தங்கிய சில கணிணினுகளுக்கு மட்டுமே பொருந்தும். இன்று நாம் பல கருவிகளிலும் பயன்படுத்துவது Hex எனப்படும் 16ஐ அடிப்படையாக கொண்டியங்கும் கணிணித் தத்துவமே.

அதென்ன 16ன் அடிப்படை. அதற்கு முன் ஒரு குறுவரலாறு. நாம் உபயோகப்படுத்தும் எல்லா எண்களும் 10ஐ அடிப்படையாக கொண்டவை. நம் கைவிரல்கள் பத்து அதுவே நமது கணிதத்திற்கு இயற்கையான அடிப்படையாக அமைந்துவிட்டது. அதே போல் 8ஐ அடிப்படையாக கொண்ட octal முறையும் உபயோகத்தில் ஆதி காலத்தில் இருந்திருக்கிறது. எட்டு என்ற எண்ணிற்கு அவர்கள் கொண்ட அடிப்படையும் விரலகள் தான் சரியாகசொல்வதானால் விரல்கள் அல்ல விரலிடுக்குகள். இதே போல் 12 மற்றும் 60 ஆகிய அடிப்படைகளும் இருந்திருக்கறது. இதுவே இன்றும் நாம் பயன்படுத்தும் மணிக்கணக்கில் உபயோகப்படுகிறது.

எண் கணிதம், இடத்தை அடிப்படையாக கொண…