முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுவடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுகுற்றம் பெருங்கேடு

முதலில் சொல்லிவிடுவது நலம்: பலருக்கு இது வெறும் நூறு ரூபாய் குற்றம். நாடோடி வாழ்க்கையில் இரண்டு மாதம் மின்கட்டணம் கட்டாமல் கிடந்த்து. அதை இன்று காலை கட்டிவிடலாம் என்று வீட்டருகில் இருக்கும் பெஸ்காம்(BESCOM) தன்னியக்க சேவை மையத்துக்கு சென்றேன். இந்த இயந்திரங்கள் வழக்கமாகவே சில ரூபாய் நோட்டுக்கள் பிடிக்காமல் துப்பிவிடும். சில தாள்களை இவை ஏற்காது துப்பிவிடுவது நேர்வதுதான். ஏற்றகாசுக்கு ஒழுங்காக கணக்கு காட்டும். வழமையாக மின்கட்டணம் கட்டுவது இங்கேதான் என்பதால் கட்டவேண்டிய 626ரூபாய்க்கு கூடவே ஒரு நானுறு ஐநூறு ரூபாய் இருப்புடனே சென்றேன்.எனக்கு முன் வந்த ஒரே ஒருவர் மட்டும் ஒரு காசோலையை அதை ஏற்கவைக்க மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். வழக்கமாக காசோலைகளை உடனே ஏற்றுக்கொண்டுவிடும்( குறைந்தபட்டசம் இம்மைய இயந்திரம்). அவர் சரி வேலைக்காகாது என்று எனக்கு வழிவிட்டார். ஒரு நூறு ரூபாயைக்கூட ஏற்காமல் துப்பிக்கொண்டிருந்தது. மற்றவர் ஐநூறு ரூபாய்த்தாளை கடனாகக் கொடுத்தார்.அதையும் ஏற்கவில்லை. சிறிது நேரம் தாள்களை மாற்றி மாற்றி மல்லுக்கட்டியபோது ஒரு நூறுரூபாய்தாளை ஏற்றுக்கொண்டது. கதையை சுருக்க ஒரு ...

ஜெயாக்கா!!

ஊருக்கே அவர் ஜெயாக்கா தான்.4;30 க்கு எழுந்து டாக்டர் வீட்டுக்கு சொஸைட்டியில் பால் வாங்கி வருவதிலிருந்து பதிணொண்ணோ பன்னிரண்டோ அடிக்கும் வரை வாரம் ஏழு நாட்களும் ஊரெல்லாம் கால்கள் ஓடிக்கொண்டிருக்கும். நாலே நாலு மிக நீண்டதெருக்களுள்ள ஊரில் அவர் வேலை செய்யாத வீடு என்று எதுவும் கிடையாது. தாலுகாபீஸ் அம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவத்தின் போது செவிலி வேலை முதல் குழந்தைவளர்ப்பு வேலை. கடைக்காரர் வீட்டில் தினசரி வீட்டு வேலை. மைத்துனரின் ஓட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை இதைத்தவிர ஒரு அலுவலகத்தை பெருக்கும் வேலை இதைத்தவிர அவ்வப்போது அழைக்கும் வேலைகள் என்று வேலை ஓடிக்கொண்டிருக்கும். பொதுவில் ஊர் அவரிடம் மிகவும் அன்பாகவே நடந்துகொண்டது. அல்லது இளம்பருவத்தில அவ்வாறே எனக்குப்பட்டது. தேவையென்றால் கடன் வாங்கிச்செல்வார் வேறு ஒருவரிடம் கடன் பெற்றோ உழைப்புக்கு முனபணமோ பெற்று அந்தக் கடனை சில வாரங்களில் அடைப்பார். உழைப்பு மட்டுமே மூலதனம். ஒரே கனவு, குறிக்கோள் வகைக்கு இரண்டான தன் நான்கு குழந்தைகளையும் படிக்க வைக்கவேண்டும் என்பதே. பெரியவனுக்கு பத்து வயதிருக்கும். கடைசி பெண்ணுக்கு மூன்று நான்கு வயதிருக்கும்.கணவர் பெ...

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...

Reply All மற்றும் மின்னஞ்சல் குளறுபடிகள்

சக பதிவர் ஒருவர் ஏராளமான மின்னஞ்சல் முகவரிகளுடன் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துச்செய்தி அவர் கதறக்கதற இன்றும் வெற்றிகரமாய் நடைபோட்டு வரும் வேளையில் ஐயா ஆளைவிட்டுடுங்கன்னு அவர் கெஞ்சினாலும் விடாமல் வேறு அவதாரம் கொண்டு இன்றும் அலைகிறது எல்லா மென்பொருள் அலுவலகங்களிலும் இந்த IT department எனப்படும் வன்பொருள் பிரச்சனைகளை சரி பண்ண இருக்கும் துறையைக்கண்டாலே கடுப்பாக இருக்கும் அதுவும் கொஞ்சம் பெரிய நிறுவனமாய் இருந்தால் கேட்கவேண்டாம் அவர்கள் பண்ணும் தொல்லைகள் சொல்லி மாளாது( எல்லாம் நம்ம நல்லதுக்குதான் என்றாலும்..) சிறுது நாட்கள் முன்பு அந்த துறையில் இருந்து ஒருவர் ஒரு பெரிய குழுவுக்கு(தெரியாத்தனமாய்) ஒரு மின்னஞ்சலை தட்டிவிட்டார்.நல்ல உபயோகமான தகவல்தான். பார்த்தார்கள் மக்கள் இருந்த கடுப்பையெல்லாம் காட்டிவிட்டார்கள். எப்படி? எல்லா பதில் மின்னஞ்சலிலும் ஒரே வரி 'ஐயா என்னை இந்த தொடர் மின்னஞ்சலிலுந்து விலக்கவும்' Reply to All :-)) அலுவலகத்தில் நண்பர் ஒருவர் ஒரு தானியிங்கி மின்னஞ்சலில் குழுவில் இருக்கிறார்(சில சர்வர்கள் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை தானியங்கியாக இந்த குழுவுக்கு அனுப்பிவிடும்) அதை ...

நம் கல்விமுறை உருப்படுமா?

இலவசமாய் அரிசி கொடுக்கிறார்கள், தொலைக்காட்சி பெட்டி தவிர சாப்பாடும் போடுகிறார்கள். இதெல்லாம் விட்டு இலவசமாய் கல்வி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும். அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா? கல்விக்கு Cess என்று ஒன்று போன வருடம் போட்டார்கள். என்ன ஆயிற்று அந்த பணம்? யாருக்காகவாது இலவசக்கல்வி கொடுப்பார்களா? கொடுத்தார்களா?. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போனால் Donation என்றும் வருடாந்திர கட்டணம் என்று இன்றும் கொடுக்கவேண்டி இருந்தது. இன்றும் இருக்கும். ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டுமென்றால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கேயே பிரிவினை. காசுள்ளவன் ஆங்கிலம் படிப்பான் காசில்லாதவன் தமிழ் படிப்பான் என்று. அரசாங்கப்பள்ளிகளிலேயே இந்த நிலைமை. எனக்கு தெரிந்து என் நண்பனின் அம்மா வீட்டு வேலை செய்து தான் படிக்கவைத்தாள். அவளிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. அதற்காக நாயாய் பேயாய் அலைந்து அந்த தாய் பணம் கட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. கொடுமை என்னவெனில் மற்ற செலவுகளுக்கு அந்த அம்மா தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வேலை செய்து தான் 2 வருடம் மேல்நிலைக்கல்வி...

என் தொகுப்பிலிருந்து!!

ஒரு நல்ல விவாதம் சாதிச்ச எட்டு மற்றும் கலக்கல் எட்டு உச்சுகொட்டிவிட்டு வேலை பார்க்க போய்விடும் கையாலாகாதனத்தை சுட்டும் இது நான் எப்படி இந்த பாட்டை இதுவரை கேட்டதேயில்லை? இப்படியெல்லாம் நாம் தான் சண்டைபோடுவோம் என இதுவரை நினைத்திருந்தேன். ஊருக்கு போனபின்னால் வாங்கவேண்டிய மிக மிக முக்கியமான சாதனம் அணுவைப்பற்றி பதிவுலக சட்டங்கள் ரைம்ஸ் பற்றி என் எண்ணத்தை பிரதிபலிக்கும் தரமான ஒரு கட்டுரை. பசித்துப் புசிப்போம் மனுசன் மனசு எந்த வேலை செஞ்சாலும் போரடிக்குதா.. இதுல போய் பதில் சொல்லிப்பாருங்க. மனதை வருடும் இது . பலவீனமானவர்கள், சிறுவர்கள் இந்த சுட்டியை தொடாதீர்கள். மொழி,இனம், மதம், நிறம் மற்ற பிரிவினைகள் என்னெல்லாம் உண்டோ அதெல்லாம் சேர்த்துக்ககங்க. எல்லாம் இருந்தாலும் கடைசியில இவ்வளவு தாண்டா நீ!!! . நன்றி

கூடா நட்பு

முகம் பார்த்து சிரிக்கும் நண்பா புறம் பார்த்து தூற்றுவதேன் உயிர்காப்பதாய் சபதஞ்செய்து சிறு உதவிக்கு ஓடுவதேன் துன்பம் வரும் வேளையிலே தோள் கொடுத்தேன் மாற்றாய் உடுக்கை இழக்கையிலே துன்பத்தை தருவதேன் மென்னிதயம் கொண்டோர் துயரங்கொள் வேளையிலே கலங்கிப்போன மனக்குளத்தில் கொடுஞ்சொற்கல் எறிந்துவிட்டு பிணக்கை உருவாக்கும் சினத்துக்குறியதாய் சிறுமை பலசெய்து மனத்துக்கினியவாய் வாய்மலர்ந்து புற அழகாய் நட்புமுகமேன் துன்பமுற்றோர் வாழ்வதனில் அன்பொழுகப் பேசாமல் வன்மனத்தால் சூதுசெய்து பழிபாவம் நோக்காமல் மனக்குரங்கின் தும்பைவிட்டு சுடுசொல்லால் தீங்கிழைக்கும் துன்மதியார் வாசலைத்தான் பேதையே நீ மிதிப்பதேன்?

தொடரும் நட்பு

மீண்டும் அமரிக்கா வந்துள்ளேன். போன வாரம் சனிக்கிழமை வந்தடைந்த நான் கல்லூரி நண்பர் வட்டத்துடன் மீண்டும் தொடர்புகொள்ள ஆரம்பித்துள்ளேன். இன்று அன்பு நண்பர் மெல்வின் பேசினார்.