முகம் பார்த்து சிரிக்கும் நண்பா
புறம் பார்த்து தூற்றுவதேன்
உயிர்காப்பதாய் சபதஞ்செய்து
சிறு உதவிக்கு ஓடுவதேன்
துன்பம் வரும் வேளையிலே
தோள் கொடுத்தேன்
மாற்றாய் உடுக்கை இழக்கையிலே
துன்பத்தை தருவதேன்
மென்னிதயம் கொண்டோர்
துயரங்கொள் வேளையிலே
கலங்கிப்போன மனக்குளத்தில்
கொடுஞ்சொற்கல் எறிந்துவிட்டு
பிணக்கை உருவாக்கும்
சினத்துக்குறியதாய் சிறுமை பலசெய்து
மனத்துக்கினியவாய் வாய்மலர்ந்து
புற அழகாய் நட்புமுகமேன்
துன்பமுற்றோர் வாழ்வதனில்
அன்பொழுகப் பேசாமல்
வன்மனத்தால் சூதுசெய்து
பழிபாவம் நோக்காமல்
மனக்குரங்கின் தும்பைவிட்டு
சுடுசொல்லால் தீங்கிழைக்கும்
துன்மதியார் வாசலைத்தான்
பேதையே நீ மிதிப்பதேன்?
புறம் பார்த்து தூற்றுவதேன்
உயிர்காப்பதாய் சபதஞ்செய்து
சிறு உதவிக்கு ஓடுவதேன்
துன்பம் வரும் வேளையிலே
தோள் கொடுத்தேன்
மாற்றாய் உடுக்கை இழக்கையிலே
துன்பத்தை தருவதேன்
மென்னிதயம் கொண்டோர்
துயரங்கொள் வேளையிலே
கலங்கிப்போன மனக்குளத்தில்
கொடுஞ்சொற்கல் எறிந்துவிட்டு
பிணக்கை உருவாக்கும்
சினத்துக்குறியதாய் சிறுமை பலசெய்து
மனத்துக்கினியவாய் வாய்மலர்ந்து
புற அழகாய் நட்புமுகமேன்
துன்பமுற்றோர் வாழ்வதனில்
அன்பொழுகப் பேசாமல்
வன்மனத்தால் சூதுசெய்து
பழிபாவம் நோக்காமல்
மனக்குரங்கின் தும்பைவிட்டு
சுடுசொல்லால் தீங்கிழைக்கும்
துன்மதியார் வாசலைத்தான்
பேதையே நீ மிதிப்பதேன்?
கருத்துகள்
புது வார்ப்புரு நல்லா இருக்கு..என்னைப் பற்றியும் மின்மடல் பக்கமும் திறக்கல..என்னன்னு கவனிங்க
நல்ல கவிதை. அனுபவம் தந்த பாடமோ?-:))
நீங்கள் எல்லோர் சொல்வதும் உண்மை.
ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
ஏங்கோ கேள்விப்பட்டது
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன் இறைவா நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று. ;-)