முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ்ப்பதிவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்படப் போட்டிக்கு - 6

இது போட்டிக்கு இதெல்லாம் சும்மா.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...

புரட்சி நாளை வருகிறது!!

இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது. சில முக்கிய அம்சங்களாவன 1. திறந்தவூற்று மென்பொருள் 2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM ஒன்றை v8 எனும் புதிய இயங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்(மற்ற உலவிகளில் இதை வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம். 3. ஒரே ஒரு tabஐ மட்டும் மிகுந்த கட்டுப்பாடுடன் இயக்கமுடியும். அதாவது அதில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தொட்ர்பு கொண்ட வழங்கிக்கி மட்டுமே அறியமுடியும். இதனால் கடவுச்சொல் திருட்டு, உங்களுக்கு தெரியாமல் கணினியில் மென்பொருள் நிறுவுவது, கடனட்டை விவரத்தை திருடுவது போன்றவை திருடாமல் தடுப்படும். 4. மிகமுக்கியமாக ஒவ்வொரு tabம் ஒரு தனிஉலவிபோல் செயல்படும் அதாவது ஒரு tab சிதைந்தாலோ இயங்காமல் நின்று போனாலோ அல்லது மென்பொருள் இடியாப்பச்சிக்கலில் செயலிழந்தாலோ எல்லாம் சிதையாது. சுருங்கச் சொல்லின் முன்பு br...

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக...

என் தொகுப்பிலிருந்து!!

ஒரு நல்ல விவாதம் சாதிச்ச எட்டு மற்றும் கலக்கல் எட்டு உச்சுகொட்டிவிட்டு வேலை பார்க்க போய்விடும் கையாலாகாதனத்தை சுட்டும் இது நான் எப்படி இந்த பாட்டை இதுவரை கேட்டதேயில்லை? இப்படியெல்லாம் நாம் தான் சண்டைபோடுவோம் என இதுவரை நினைத்திருந்தேன். ஊருக்கு போனபின்னால் வாங்கவேண்டிய மிக மிக முக்கியமான சாதனம் அணுவைப்பற்றி பதிவுலக சட்டங்கள் ரைம்ஸ் பற்றி என் எண்ணத்தை பிரதிபலிக்கும் தரமான ஒரு கட்டுரை. பசித்துப் புசிப்போம் மனுசன் மனசு எந்த வேலை செஞ்சாலும் போரடிக்குதா.. இதுல போய் பதில் சொல்லிப்பாருங்க. மனதை வருடும் இது . பலவீனமானவர்கள், சிறுவர்கள் இந்த சுட்டியை தொடாதீர்கள். மொழி,இனம், மதம், நிறம் மற்ற பிரிவினைகள் என்னெல்லாம் உண்டோ அதெல்லாம் சேர்த்துக்ககங்க. எல்லாம் இருந்தாலும் கடைசியில இவ்வளவு தாண்டா நீ!!! . நன்றி

கூடா நட்பு

முகம் பார்த்து சிரிக்கும் நண்பா புறம் பார்த்து தூற்றுவதேன் உயிர்காப்பதாய் சபதஞ்செய்து சிறு உதவிக்கு ஓடுவதேன் துன்பம் வரும் வேளையிலே தோள் கொடுத்தேன் மாற்றாய் உடுக்கை இழக்கையிலே துன்பத்தை தருவதேன் மென்னிதயம் கொண்டோர் துயரங்கொள் வேளையிலே கலங்கிப்போன மனக்குளத்தில் கொடுஞ்சொற்கல் எறிந்துவிட்டு பிணக்கை உருவாக்கும் சினத்துக்குறியதாய் சிறுமை பலசெய்து மனத்துக்கினியவாய் வாய்மலர்ந்து புற அழகாய் நட்புமுகமேன் துன்பமுற்றோர் வாழ்வதனில் அன்பொழுகப் பேசாமல் வன்மனத்தால் சூதுசெய்து பழிபாவம் நோக்காமல் மனக்குரங்கின் தும்பைவிட்டு சுடுசொல்லால் தீங்கிழைக்கும் துன்மதியார் வாசலைத்தான் பேதையே நீ மிதிப்பதேன்?

எச்சரிக்கை:இது ஒரு வெட்டி பதிவு

எனக்கும் சடப்பாண்டிக்கும் பலகால நட்பு. சடப்பாண்டி சென்னைத்தமிழ் காதலன். நான் அவன் காலைவாருவதும், அவன் என்னை தாக்குவதும், கருணாநிதி ராம்தாஸ் மாதிரி அப்படி ஒரு அதீத நட்பு. அரசியல் மீட்டிங்குகளில் திடீரென கேள்விப்படும் விஷயங்களில் சந்தேகம் வந்துவிடும் நம்ம சடபாண்டிக்கு, அல்லது ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்டு நம்மை மடக்குவதில் சடபாண்டிக்கு அலாதி இன்பம். '' நைனா, புயநானூறுன்னா இன்னாப்பா? ''என்பான், அவனுக்கு விளக்கி முடிப்பதிற்குள் நமக்கு தொண்டைத்தண்ணி வற்றிவிடும். எது சரி பாணி கேள்விகள் அதிகம் அவனிடமிருந்து வரும். கத்திரிக்காய் கரீட்டா, கத்தரிக்காய் கரீட்டா என்பான்.சேட்டை சேட்டுன்னு கூப்பிடணுமா, சேடுன்னு கூப்பிடணுமான்னான் இன்னொரு நாளைக்கு, தாகம் எடுக்குமா, தாகம் அடிக்குமான்னான்... ஒரு நாளைக்கு. விளக்கெண்ணைக்கு பேரு வச்சது யாருன்னான் ஒருநாளைக்கு. அதுவாவது பரவாயில்லை, ஒரு தடவை 'எதிர்வூட்டு ஆயா, அயுகுது'ன்னான் கடைக்குள்ள வந்துகொண்டே. 'அடப்பாவி, பாட்டி போய்சேந்துட்டாங்களா'ன்னேன். 'ஒன் வாய கழுவுடா... பாட்டி நல்லாதான் கீது... சீரியல் பாத்துட்டு அயுகுது'ன்னான...

பரபரப்பு தகவல்: இங்கிலாந்து ராணி இந்தியாவிடம் மன்னிப்பு!!

இங்கிலாந்து ராணி இந்தியாவிடம் பிரிவினைக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதை பிரிடிஷ் பிரதமர் இன்று பிரிடிஷ் நாடளுமன்றத்தில் அறிவித்தார். அந்தச் செய்தி பின்வருமாறு. 1947ல் விடுதலை சுதந்திரம் கொடுக்கும் போது தவறு விளைந்துவிட்டது. இதன் விளைவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகள் உருவாகி இன்று அது பல பிரச்சினைகளுக்கு ஆதாரமான விஷயமாகி விட்டது. பல்வேறு தரப்பிலிருந்தும் இன்று அடிவாங்கிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் முதல் தேர்தலே இல்லாமல் ராஜாவாக இருக்கும் முஷாராஃப் வரை பல பிரச்சினைகளுக்கும் இதுவே ஒரு பலத்த காரணமாக இருக்கிறது. ஒரு வேளை பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்திருக்காது. பின்பு இந்தியாவின் தயவில் பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உருவாகி உலககோப்பையில் போட்டு சாத்தி இருக்காது. பாகிஸ்தான் இல்லாமல் எப்படி அயர்லாந்து அதை வெற்றி பெறும், அதனால் பாவம் உல்மர் மரணம் சர்ச்சை வேறு உருவாகி இருக்காது. ஆகையால் இப்படி பல பிரச்சனைகளுக்கும் காரணமான பிரிவினை இங்கிலந்து அரசின் முட்டாள்தனத்தால் வந்தது. அதற்காக இங்கிலாந்து மக்களின் சார்பில் இந்தியாவிடம்...

தேன்கூட்டுக்கு என்ன ஆச்சு?

தேன்கூட்டில் பதிவு செய்து ஒரு மாதத்திற்க்கு மேலாகிறது. ஒரு எதிர்வினையையும் காணோம். Pending approval அப்பிடின்னே சொல்லிக்கிட்டு இருக்கு. மின்னஞ்சல் எல்லாம் அனுப்பி பாத்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. நம்ம feedல தான் பிரச்சனை அப்பிடின்னு ஆதம் ஓடைக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துக்கும் RSS பிடிக்கலை. feedvalidator.org ஆதம் பக்கவா இருக்குன்னு சொல்லுது. என்னோட வலைப்பூவுல பிரச்சனையா இல்லை தேன்கூட்ல பிரச்சனையா? யாராவது விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.

2007 வந்த பார்க்கவேண்டிய படங்கள் யாவை?

எனக்கும் படங்களுக்கும் ரொம்ப தூரம். ஆடிக்கு ஒண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணுனு மொத்தம் இரண்டு படம் பார்த்த வருடங்கள் எல்லாம் உண்டு. காரணங்கள் பல உண்டு. அதை வேறொரு பதிவில் பார்க்கலாம். நான் கேட்க வந்த விஷயம் வேறு. இந்த வருடம் வந்த தமிழ் படங்களில் பார்க்க வேண்டிய படம் என்று நீங்கள் நினைக்கும் படத்தை பற்றி இங்கு பின்னூட்டமிடவும். ஒரு 2 வரி அந்த படத்தை பற்றி போட்டால் மிக்க நலம். காமடி கீமடி பண்ணக்கூடாது. கட்டாயமாக வீராசாமி not allowed. இந்த பதிவை படித்தபிறகு மொழி ஏற்கனவே என் கணக்கில் உள்ளது. பின்னூட்டமிடும் பதிவர்களுக்கு என் நன்றிகள்.

உலகம் அழிந்துவிட்டால்

நாளை உலகம் அழிந்துவிட்டால் நாம் இன்று கண்டுபிடித்திருக்கும் பல விடயங்கள் அழிந்துவிடும். அறிவியலார் டைனசர் காலத்தில் ஒரு கோள் விழுந்து உயிரினங்கள் அழிந்துவிடடதாக கூறுகின்றனர். நாளை உலகம் அந்த மாதிரி அழிந்துவிட்டால் எஞ்சப் போவது என்ன? நாம் கட்டிய உயர்ந்த கட்டிடங்களும் மிஞ்சும் சில கிறுக்கல்களும் தான். யாருக்கு தெரியும் காதலன் காதலி பெயரை கிறுக்கி இருக்கும் பாறைகள் மிஞ்சினால் உண்டு. கொஞ்சம் சிந்தித்தால் நாம் அறிவால் உணர்ந்த விடயங்கள அடுத்து வரும் மனிதர்கள்(அவர்களும் மனிதனைப்பொன்ற ஒரு உயிரினம்) நம்மை பற்றி என்ன அளவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் இந்த சிந்தனையை நீட்டினால் ஏன் நாம் கூட நம் மூதாதையரின்(அப்படி அழிந்து போயிருந்தால்) அறிவை பற்றி நாம் ஏன் தவறான ஒரு கண்ணோடத்தை பெற்று இருக்க கூடாது?