முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2007 வந்த பார்க்கவேண்டிய படங்கள் யாவை?

எனக்கும் படங்களுக்கும் ரொம்ப தூரம். ஆடிக்கு ஒண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணுனு மொத்தம் இரண்டு படம் பார்த்த
வருடங்கள் எல்லாம் உண்டு. காரணங்கள் பல உண்டு. அதை வேறொரு பதிவில் பார்க்கலாம். நான் கேட்க வந்த
விஷயம் வேறு. இந்த வருடம் வந்த தமிழ் படங்களில் பார்க்க வேண்டிய படம் என்று நீங்கள் நினைக்கும்
படத்தை பற்றி இங்கு பின்னூட்டமிடவும். ஒரு 2 வரி அந்த படத்தை பற்றி போட்டால் மிக்க நலம். காமடி கீமடி பண்ணக்கூடாது. கட்டாயமாக வீராசாமி not allowed. இந்த பதிவை படித்தபிறகு மொழி ஏற்கனவே என் கணக்கில் உள்ளது.


பின்னூட்டமிடும் பதிவர்களுக்கு என் நன்றிகள்.

கருத்துகள்

இலவசக்கொத்தனார் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆடிக்கு ஒண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணுனு மொத்தம் இரண்டு படம் பார்த்த
வருடங்கள் எல்லாம் உண்டு.//

ஒவ்வொரு அமாவாசைக்கும் படமுன்னா ரெண்டை விட அதிகம் வருதுங்களே. ஹிஹி :)

படத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லைங்க. ஏன்னா நானும் உங்க கேஸ்தான்! :))
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
இலவசக்கொத்தனார்,
வாங்க வாங்க!!. அட ஆமாம், பொருள் குத்தமாயிருச்சு. மன்னிச்சுக்குங்க.
பாப்போம். நம்ம மாதிரி ஆளூங்களுக்குன்னு யாரவது வந்து 4 படம் சொல்லாம போய்டுவாங்களா, என்ன?
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
பார்க்க வேண்டாத படங்கள்ன்னா நிறையச் சொல்லலாம்:-)))))

அடைக்கலம்

ரெண்டு ( தலையைக் கழட்டி வச்சுட்டுப் பார்க்கலாம்)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் 2007 பார்க்க வேண்டிய படமா?

என்னங்க இது, இப்போ தான் மார்ச் நடக்குது, எப்டி டிசம்பர் வரைக்கும் சொல்றது?

Ok Trying..

CountDown Starts....

1. Thalivar - super Star - Rajini in - SIVAJI
2. Kamalhasan in - DASAVADARAM
3. Vijayin - ALAGIYA TAMIL MAGAN
4. Altimate star - ajit in - BILLA (not sure)

இந்த படம் எல்லாம் நல்ல இருக்கும் அதுனால போய் பாருங்கனு சொல்லலே.

பார்த்துட்டு நல்ல இல்லைனா... நல்ல இல்லைனு ஒரு பதிவ போட்டா நாங்க யாரும் போய் பார்க்க மாட்டோம் அது தான் ஹி ஹி ஹி ஹி
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I saw "Mozhi" Trailer it good. Jyothika has improved her acting talent in this picture she is acted as Deaf and dumb. The songs are also melodious.
Arun's Thoughts இவ்வாறு கூறியுள்ளார்…
மொழியைத் தவிர சிவாஜி படம் பார்க்கலாமுனு நினைக்கிறேன், மத்தப்படி படங்களைப் பார்த்த பின் தான் சொல்ல முடியும்
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
http://blog.ravidreams.net/?p=41

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4