முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மேலாண்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுனிப்புல்

எந்தத் துறையிலும் சாதிக்க ஆழமான அறிவு பெற்றிருக்க வேண்டியது அடிப்படை விஷயம். இன்றைய இந்திய மென்பொருள் மற்றும் தொழில் நுட்பச்சூழலை எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு பத்து வருடம் அனுபவமிக்க மென்பொறியாளரை காண்பியுங்கள் பார்ப்போம். ஒருவரும் கிடைக்க மாட்டார். ஐந்து வருடம் ஆனவுடனே மேலாளர் பதவிக்கு ஆசைப் படவும், மற்றவரை கட்டி மேய்க்க வேண்டிய பணியையும் விரும்புகின்றனர். மென்பொருள் சேவை நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் பெரும் தலைவலி நிரந்தரமான காலியிடங்கள். இந்திய மென்பொருள் துறை ஒரு சேவை சார்ந்த துறையாய் இருப்பதால், இதில் நம்மவர்கள் மேலோங்கி நிற்பதற்கு செயல் முறை (process) திறமை அதிக அளவில் தேவைப்படுகிறது. அதாவது மென்பொருள் பொறியியலில் (இது மென்பொருள் நுட்ப அறிவியல் அல்ல) மிக அதிக அளவில் ஆட்களின் தேவை இருக்கிறது. இன்று வளர்ச்சி பெருகும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமை தான். ஒரு ICICI வங்கியின் கிளையிலிருக்கும் மேலாளரையும், SBI வங்கி மேலாளரையும் ஒப்பு நோக்குங்கள், நான் சொல்ல வருவது புரியும். எந்த துறையிலும் நாம் நிலைத்து நிற்பதற்கு நமக்கு முதலில் நுட்பம் மற்றும துறை சார்ந்த அறிவ...