முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூடா நட்பு

முகம் பார்த்து சிரிக்கும் நண்பா புறம் பார்த்து தூற்றுவதேன் உயிர்காப்பதாய் சபதஞ்செய்து சிறு உதவிக்கு ஓடுவதேன் துன்பம் வரும் வேளையிலே தோள் கொடுத்தேன் மாற்றாய் உடுக்கை இழக்கையிலே துன்பத்தை தருவதேன் மென்னிதயம் கொண்டோர் துயரங்கொள் வேளையிலே கலங்கிப்போன மனக்குளத்தில் கொடுஞ்சொற்கல் எறிந்துவிட்டு பிணக்கை உருவாக்கும் சினத்துக்குறியதாய் சிறுமை பலசெய்து மனத்துக்கினியவாய் வாய்மலர்ந்து புற அழகாய் நட்புமுகமேன் துன்பமுற்றோர் வாழ்வதனில் அன்பொழுகப் பேசாமல் வன்மனத்தால் சூதுசெய்து பழிபாவம் நோக்காமல் மனக்குரங்கின் தும்பைவிட்டு சுடுசொல்லால் தீங்கிழைக்கும் துன்மதியார் வாசலைத்தான் பேதையே நீ மிதிப்பதேன்?

.......னா?

1.நண்பன் கூப்பிட்டு அவசரத் தேவையென 24 மணி நேரத்தில் என் சேமிப்பு முழுதையும் கேட்டால் கொடுப்பேனா? 2. பொய் சொல்லாமல் சோம்பேறித்தனத்தால் காலதாமதமானதை சொல்வேனா? 3.ஞானம் அதிகமில்லை, சரக்கு இவ்வளவு தான்னு உண்மையச் சொல்லி வேலைக் கேட்பேனா? 4.Treat என்ற பெயரில் ஓசிச்சாப்பாடுக்கு அலையாமல் இருப்பேனா? 5.ஒரு வருடத்திலாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவேனா? 6.ஒரு நாளாவது எடுத்த வேலையை முழுவதுமாய் செய்து முடிப்பேனா? 7.ஒரு விளையாட்டையாவது ஒழுங்காய் கற்பேனா? 8.அலுவலக சந்திப்புகளில் சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு அசட்டு சிரிப்பு சிரிக்காமல் இருப்பேனா? 9.மீட்டிங்குகளில் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடையை தடுமாறாமல் சொல்வேனா? 10.வீட்டிலிருந்தும் ஒரு நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பேனா? 11.ஒரு தடவையாவது அலுவலகத்திற்கு பொய் சொல்லி லீவு போடுவேனா? 12.நாளை பிள்ளை வளர்ந்து, சொல்லும் புதுமைக்கருத்துகளை தடுக்காமல் ஏற்பேனா? 13.மற்றவரிடம் பேசும் பொழுது எல்லாம் தெரிந்த மாதிரி நடிக்காமல் இருப்பேனா? 14.தெரிந்தவர்களிடம் பேசும் போது, என் எண்ணம் தான் உயர்ந்ததென மனதில் தோன்றாமல் இருப்பேனா? 15.காசும், பதவியும் வந்தால

மங்கும் மின்மினி

ஒரு வாரமாக உங்கள் எல்லோரையும் படுத்தி வந்தது ஒரு வழியாக இன்று முடிவுக்கு வருகிறது. எல்லா நாளும் வலைபதிய வேண்டும் என்பது என்னைப்பொருத்த அளவில் சவாலாகவே இருந்தது. எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிட்டு சரிசெய்து குறிப்பெல்லாம் எடுத்துக்கொண்டு எழுத தொடங்கும் சில நாட்களிலேயே நான் எழுத நினைத்ததை வேறு சிலர் எழுதியதும் நடந்தது அடுத்த விஷயம் பின்னூட்டம் வந்து இருந்தால் பார்த்து பதில் சொன்னது. இவ்வளவு நாள் நான் கவலைப்படாமல் இருந்தது அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் இடாதது. எப்போதாவது ஒரு பின்னூட்டம் போடுவதோடு சரி. இப்போது புரிகிறது எந்த அளவுக்கு பின்னூட்டம் இடுவது அடுத்தவரை உற்சாகப்படுத்துகிறது என்று. தமிழ்மணத்தில் கடந்த ஒரு வாரத்தில் வந்த மொத்த இடுகைகள் ஆயிரத்தை தாண்டும் இதில் என்னுடைய ஏழே ஏழை மட்டும் தலைப்பில் நிலைக்க வைத்து மதிப்பு கொடுக்கும் அளவுக்கு தரமானதாக இருந்ததா என்று தெரியவில்லை. நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மணத்துக்கும் உற்சாகம் கொடுத்த சக பதிவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.

எச்சரிக்கை:இது ஒரு வெட்டி பதிவு

எனக்கும் சடப்பாண்டிக்கும் பலகால நட்பு. சடப்பாண்டி சென்னைத்தமிழ் காதலன். நான் அவன் காலைவாருவதும், அவன் என்னை தாக்குவதும், கருணாநிதி ராம்தாஸ் மாதிரி அப்படி ஒரு அதீத நட்பு. அரசியல் மீட்டிங்குகளில் திடீரென கேள்விப்படும் விஷயங்களில் சந்தேகம் வந்துவிடும் நம்ம சடபாண்டிக்கு, அல்லது ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்டு நம்மை மடக்குவதில் சடபாண்டிக்கு அலாதி இன்பம். '' நைனா, புயநானூறுன்னா இன்னாப்பா? ''என்பான், அவனுக்கு விளக்கி முடிப்பதிற்குள் நமக்கு தொண்டைத்தண்ணி வற்றிவிடும். எது சரி பாணி கேள்விகள் அதிகம் அவனிடமிருந்து வரும். கத்திரிக்காய் கரீட்டா, கத்தரிக்காய் கரீட்டா என்பான்.சேட்டை சேட்டுன்னு கூப்பிடணுமா, சேடுன்னு கூப்பிடணுமான்னான் இன்னொரு நாளைக்கு, தாகம் எடுக்குமா, தாகம் அடிக்குமான்னான்... ஒரு நாளைக்கு. விளக்கெண்ணைக்கு பேரு வச்சது யாருன்னான் ஒருநாளைக்கு. அதுவாவது பரவாயில்லை, ஒரு தடவை 'எதிர்வூட்டு ஆயா, அயுகுது'ன்னான் கடைக்குள்ள வந்துகொண்டே. 'அடப்பாவி, பாட்டி போய்சேந்துட்டாங்களா'ன்னேன். 'ஒன் வாய கழுவுடா... பாட்டி நல்லாதான் கீது... சீரியல் பாத்துட்டு அயுகுது'ன்னான

கண்ணதாசனும் கத்திரிக்காயும்

கண்ணதாசன். யாருக்கும் தெரியாமல் மனத்தால் இழிந்து, பொய்யாய் வாழ்ந்து மறைகிறோம். நல்லதையும் கெட்டதையும் ஒருங்கே பார்த்து, வியந்து, அனுபவித்து இன்னும் என்னவெல்லாம் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யமுடியுமோ அத்தனையும் செய்து அவன் இன்னமும் வாழ்கிறான். என்னைப்போன்றோருக்கு எப்படி அவனை உணர முடிகிறது. வெறும் 54 வருடம் தான் வாழந்திருக்கிறான். அதற்குள் எத்தனை சாதனை, சோதனை. என்னை விட வயதில் மூத்தோருக்கு அவனை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பழைய சினிமா பாடல்களின் மூலம் அறிமுகமான காலத்தில வெறும் சினிமா பாடல்களை மட்டுமே வைத்தே நினைத்திருந்ததை அவனிடம் மானசீகமாய் மன்னிப்புகேட்க வைத்தது அர்த்தமுள்ள இந்துமதம். தனக்குதானே பட்டம்சூட்டிக்கொள்ளும் மாக்கள் எங்கே, தன்னையே பகடி செய்துகொண்ட அவன் எங்கே. சேர்கின்ற பொருள்களைச் செம்மையாய் எந்நாளும் காக்கவும் திறமை இலையே ஜெயிக்கின்ற கட்சியில் நுழைகின்ற வித்தையைத் தேருமோர் அறிவு மிலையே. காமராஜரைப்பற்றி மிகச்சுலபாக எப்படி எழுதமுடியும் என வியக்க வைத்த சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடா

நூலினால் சுட்ட வடு...

சிறு வயதில் கோகுலமும் அம்புலிமாமாவும், பூந்தளிரும் பிடித்தது. கோகுலத்தில் வரும் 16 பக்க வண்ணப்படக்கதைக்காக காத்தருந்த நாட்களும், தேவனின் கதைகளும், மந்திரவாதி மாண்டேரக்ஸ் போன்ற காமிக்ஸ் கதைகளும் இனிமையானவை. வாசித்த பல சிறுவர் புத்தகங்களைத்தாண்டி பொன்னியின் செல்வனை அம்மா அறிமுகப்படுத்தி வைத்தாள்.விளையாட்டாய் ஆரம்பித்த புத்தகம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு படிக்க வைத்தது. பின்பு நான் பல படித்தாலும் சில புத்தகங்கள் யாராவது குறுப்பிடும்போதோ, எங்காவது படிக்கும் போதோ ஒரு புன்முறுவலையோ, வருதத்தையோ, நெகிழச்சியையோ, சிரிப்பையோ வரவழைக்கும். அவ்வகையில் நான் படித்த சில (வித்தியாசமான?!) புத்தகங்கள். Yes Minister. இதை படித்தவர்கள் இந்நேரம் முறுவலித்திருப்பார்கள். படிக்காதவர்களுக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாவதற்கு நான் உத்தரவாதம். இது பிரிட்டிஷ் தொலைகாட்சியில் தொடராக வந்தது, எனக்கு புத்தகமாக படிக்க வாய்ந்தது. பின்பு சில பகுதிகளை நிகழ்படமாக பார்க்கவும் கிடைத்தது. ஒரு சின்ன அதிர்ஷ்டத்தில் மந்திரி ஆகிவிடும் நல்லவர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் மிக ஆர்வமாக இருப்பார்.

மாண்புமிகு முதல்வருக்கு ஓர் கோரிக்கை மடல்

மாண்புமிகு முதல்வருக்கு ஓர் கோரிக்கை மடல் முதலில் போட்ட நட்சத்திர பதிவு தமிழமண பக்கத்தில் காணமலே போய்விட்டது. நட்சத்திர வாரத்தில் நுட்ப பதிவு போட்டு மண்டைகாய வைத்த புரட்சிக்கு அடுத்து ஒரு வாரத்துக்குள்ளாகவே மீள் பதிவு பண்ணுகிற அடுத்த புரட்சி.

நிகழ்நேர இயங்குதளம் - ஓர் அறிமுகம்

இங்குதளம்(Operating System) என்பது ஒரு கணிணியின் வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இடையில் இயங்கும் நிரல்கட்டமைப்பு. CPU என்பதை ஒரு மூளையோடு ஒப்பிட்டால் இயங்குதளத்தை புத்தியோடு ஒப்பிடலாம். பிரபலமான சில இங்குதளங்களின் பெயரைக்கேட்டால் UNIX, XP,Linux என்பீர்கள். சரி கணிணி சார் பொருட்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து வைத்து அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் Windows, Linux , Mac OS போன்றவற்றால் இயங்கும் உபகரணங்களை மட்டும் பிரித்தால் எத்தனை சதவிகிதம் இருக்கும்? (விடை கடைசியில்) இயங்குதளம் சரி, அது என்ன நிகழ்நேர(Real-time OS) இயங்குதளம்? சுருங்கச் சொன்னால் இவை சிறப்பு வகையை சார்ந்த இயங்குதளம். பதிகணினியியலில்(embedded technology) அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளம். சாதாரணமாக நாம் உபயோகிக்கும் இயங்குதளங்கள் நேரக் கட்டுபாடு கொண்டவையல்ல. உதாரணம் MS WORD ஐ சொடுக்கும் போது தொடர்புடைய மற்றொரு நிரல் நினைவகத்தில் ஏறுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டாலோ அல்லது செயல்படவில்லையெனிலோ இயங்குதளம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கருதமுடியாது. ஆனால் விமானத்தின் இயக்கத்தில் இதே மாதிரி ஒரு பிழை நேர்ந்தால்.

இலவசகொத்தனாருக்கு சமர்ப்பணம் அல்லது படம் காட்டுதல்

நட்சத்திர வாரத்துல எல்லா பதிவையும் தீவிரமான பதிவா போட்டா இவன் தீவரவாதின்னு முத்திரை குத்தீடுவாங்கன்னு தமிழ் பதிவுலகின் மிக மிக முக்கியமான பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இருக்கற கொஞ்சநஞ்ச விஷயத்தையும் ஒரே வாரத்தில எழுத சொல்லீட்டாங்ளேன்னு கடுமையா சிந்தனை பண்ணிக்கிட்டு இருந்தப்போ, சிஷ்யன் தயாராகும் போது குரு தோன்றுவார் அப்படிங்கற மாதிரி இலவசக்கொத்தனார் இந்த பதிவைப் போட்டார். கொத்தனார், கட்டைவிரலெல்லாம் கேட்கக்கூடாது, சொல்லிட்டேன்!! அதனால் படம் காட்டறதுன்னு முடிவு பண்ணியாச்சு!! சிலருக்கு கோடை காலமானால் சுற்றுலா போக வாய்ப்பும் நேரமும் கிடைக்கும். சிலருக்கு பணி நிமித்தம் வேறு இடங்களுக்கு போக வாய்ப்பு கிடைக்கும். அப்படி பணி நிமித்தம் வேறு இடங்களுக்குப் போக வாய்பும்,ஊர் சுற்ற நேரமும் கிடைத்தால்.... நான்தான் அந்த அதிர்ஷ்டசாலி. சுருக்கமா சொல்லணும்னா, நான் தற்போது வசிக்கும் மாசூசட்ஸ் மாகாண Cape Cod வடகிழக்கு அமரிக்காவின் Goa மாதிரி. குளிர் காலத்தில் மனிதத்தலையை (மிருகத்தலையும் சேர்த்து தான்) காணக்கிடைக்காது. வெய்யில் காலத்துல அமரிக்க மக்கள் மட்டுமில்லாம பல்வேறு நாடு

நுனிப்புல்

எந்தத் துறையிலும் சாதிக்க ஆழமான அறிவு பெற்றிருக்க வேண்டியது அடிப்படை விஷயம். இன்றைய இந்திய மென்பொருள் மற்றும் தொழில் நுட்பச்சூழலை எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு பத்து வருடம் அனுபவமிக்க மென்பொறியாளரை காண்பியுங்கள் பார்ப்போம். ஒருவரும் கிடைக்க மாட்டார். ஐந்து வருடம் ஆனவுடனே மேலாளர் பதவிக்கு ஆசைப் படவும், மற்றவரை கட்டி மேய்க்க வேண்டிய பணியையும் விரும்புகின்றனர். மென்பொருள் சேவை நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் பெரும் தலைவலி நிரந்தரமான காலியிடங்கள். இந்திய மென்பொருள் துறை ஒரு சேவை சார்ந்த துறையாய் இருப்பதால், இதில் நம்மவர்கள் மேலோங்கி நிற்பதற்கு செயல் முறை (process) திறமை அதிக அளவில் தேவைப்படுகிறது. அதாவது மென்பொருள் பொறியியலில் (இது மென்பொருள் நுட்ப அறிவியல் அல்ல) மிக அதிக அளவில் ஆட்களின் தேவை இருக்கிறது. இன்று வளர்ச்சி பெருகும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமை தான். ஒரு ICICI வங்கியின் கிளையிலிருக்கும் மேலாளரையும், SBI வங்கி மேலாளரையும் ஒப்பு நோக்குங்கள், நான் சொல்ல வருவது புரியும். எந்த துறையிலும் நாம் நிலைத்து நிற்பதற்கு நமக்கு முதலில் நுட்பம் மற்றும துறை சார்ந்த அறிவ

மாண்புமிகு முதல்வருக்கு ஓர் கோரிக்கை மடல்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! தங்கள் பிறந்த நாளுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பார்கள். நான் வாழ்த்துக்களுடன் ஒரு சில கோரிக்கைகளையும் தங்கள் முன் வைக்கவிழைகிறேன். தமிழ் கூறும் நல்லுலகம், நடுவண் அரசிடம் போராடி தமிழை செம்மொழி ஆக்கியமைக்காக உங்களை என்றென்றும் வாழ்வாங்கு வாழ்த்தும். மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ், இணையத்தில் ஓரளவு வளர்ந்தே வருகிறது. மொழி சீர்திருத்தம் கொண்டு வந்து சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர வாயப்பு கிடைத்தது. இன்று நாம் அடுத்த கட்ட சீர்திருத்தமும் தனித்தமிழ் வளர்ச்சியும் தூண்டவேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழ் பெரும் தேக்க நிலை பெற்று இருக்கிறது. இணையத்திலும் அறிவியலிலும் அதே வேகத்திற்கு மொழி ஈடுகொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. அவ்வாறு இல்லாத மொழிகள் ஆங்கில ஆதிக்கத்தால் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இதை நிர்வாக ரீதியில் அணுகுதற்கான வழிமுறையோ, செயல்முறையோ அல்லது அதிலுள்ள சிக்கல்களையோ அறியும் அளவிற்கு எனக்கு வயதுமில்லை அனுபவமும் இல்லை. கொச்சையான நேரிடையான மொழியில் சொல்லி விடு