முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நூலினால் சுட்ட வடு...

சிறு வயதில் கோகுலமும் அம்புலிமாமாவும், பூந்தளிரும் பிடித்தது. கோகுலத்தில் வரும் 16 பக்க வண்ணப்படக்கதைக்காக காத்தருந்த நாட்களும், தேவனின் கதைகளும், மந்திரவாதி
மாண்டேரக்ஸ் போன்ற காமிக்ஸ் கதைகளும் இனிமையானவை. வாசித்த பல சிறுவர் புத்தகங்களைத்தாண்டி பொன்னியின் செல்வனை அம்மா அறிமுகப்படுத்தி வைத்தாள்.விளையாட்டாய் ஆரம்பித்த புத்தகம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு படிக்க வைத்தது. பின்பு நான் பல படித்தாலும் சில புத்தகங்கள் யாராவது குறுப்பிடும்போதோ, எங்காவது படிக்கும் போதோ ஒரு புன்முறுவலையோ, வருதத்தையோ, நெகிழச்சியையோ, சிரிப்பையோ வரவழைக்கும். அவ்வகையில் நான் படித்த சில (வித்தியாசமான?!) புத்தகங்கள்.

Yes Minister. இதை படித்தவர்கள் இந்நேரம் முறுவலித்திருப்பார்கள். படிக்காதவர்களுக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாவதற்கு நான் உத்தரவாதம். இது பிரிட்டிஷ் தொலைகாட்சியில் தொடராக வந்தது, எனக்கு புத்தகமாக படிக்க வாய்ந்தது. பின்பு சில பகுதிகளை நிகழ்படமாக பார்க்கவும் கிடைத்தது. ஒரு சின்ன அதிர்ஷ்டத்தில் மந்திரி ஆகிவிடும் நல்லவர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் மிக ஆர்வமாக இருப்பார். அதிகார வர்கத்தில் முதல் நிலை ஊழியரான பிரதம காரியதரிசி எப்படி அதிகாரத்துவ நலனுக்காகவே அரசாங்கத்தை நடத்துகிறார் என்ற தீவிரமான விஷயத்தை பயங்கர கேலியாகவும், கிண்டலாகவும் வர்ணித்திருப்பார் எழுத்தாளர்கள. தன் வேலையை சாதிப்பதற்காக மந்திரியை பல சிக்கல்களிலும் மாட்டி விட்டு எதுவுமே தெரியாத்து போல் செயலாற்றும் காரியதரிசியை நீங்கள் எந்த அரசு அலுவலகத்திலும் காணலாம். ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ''Yes Minister" என்று பவ்யமாய் முடிப்பார் காரியதரிசி. அதனாலேயே இந்த பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார் ஆசிரியர். பிரிட்டிஷ் ஆங்கிலத்தின் அழகை இரசிக்க இந்த புத்தகம் சிறந்த ஒன்று.

Hitch Hiker guide to Galaxy: Douglas Adams எழுதிய புத்தகம் இது. மா.சி கூட புரட்டிப்போட்ட புத்தகங்கள்
வரிசையில கூட எழுதியிருந்தார். 1978ல் BBC ரேடியோவில் வந்த தொடர் பின்பு புத்தகமாக வந்தது. நாமெல்லாம் ஏதோ பெரிய மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழ்வதை இருப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்ட அறிவியல் புனைவு. உலகப்பந்தை அழித்து விட்டு பாதை போட்டு விடுகிறார்கள் வேற்று கிரகத்தார், கேட்டால் பெரிய ரோடு போடும் போது இதெல்லாம் ரொம்ப சகஜம் என்கிறார்கள். ஒரே ஒரு மனிதன் மட்டும் தப்பித்து (தப்பிக்க வைக்கப்பட்டு) வேற்று கிரக வாசிகளோடு போகும் போது தான் அண்டத்தின் பிரம்மாண்டம் தெரிகிறது. அவருக்கு உபயோகமாக அண்டத்தை விளக்கும் கைடை (guide) கொடுக்கிறார்கள். மனிதர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று
ஆர்வத்தோடு பார்க்கிறார் ஹீரோ. ஏதோதோ கற்பனை செய்துகொண்டு பார்க்கையில் சொல்கிறது '' Mostly Harmless" என்று ஏதோ புழு பூச்சி மாதிரி இரண்டே வார்த்தைகளில் முடித்து விடுகிறது. பயங்கர லாஜிக்கான காமடியாக பல விஷயத்தை கிண்டலடிப்பார் ஆசிரியர்.

எனக்கு பிடித்த ஓர் வரி இதில், மனிதனை வர்ணிக்கும் ape-descendent life form who think digital watches are a neat ideaவும் ஒன்று. மனிதனைப் போலவே கதவை திறக்க
காவலாளியாய் பயன் படுத்தும் ஒரு இயந்திரர்(Robot) தன்னால் இத்தனை வேகமாக கணக்கு போடமுடியும்,அத்தனை வேகமாய் செயலாற்ற முடியும் என்னைப்போய் 'டீ கொண்டு
தருவதற்கு பயன்படுத்துகிறார்கள என்று தன் திறமை எல்லாவற்றையும் வீணடிக்கிறார்கள் என்று புலம்பிக்கொண்டே இருக்கும்.

ஒரு உரையாடல்
“The argument goes something like this: ‘I refuse to prove that I exist,’ says God, ‘for proof denies faith, and without faith I am nothing.’
“‘But,’ says Man, ‘The Babel fish is a dead giveaway, isn’t it? It could not have evolved by chance. It proves you exist, and so therefore, by your own arguments, you don’t. QED.’
“‘Oh dear,’ says God, ‘I hadn’t thought of that,’ and promptly vanished in a puff of logic.
“‘Oh, that was easy,’ says Man, and for an encore goes on to prove that black is white and gets himself killed on the next zebra crossing.

மேலாண்மை படித்த பொழுது என்னுடைய Strategic Management professor சொன்னது ''Art of War" படிக்காதவன் ''Strategic Idiot". Art of war அப்பொழுது(1வருடத்திற்கு முன்) வாங்கியது இன்னமும் படித்துக் கொண்டே....யிருக்கிறேன். திருக்குறள் மாதிரி சின்ன வரிகளில் ''சண்டையே போடாமல் போரில் வெல்வது எப்படி'' ங்கற விஷயத்தை விவரிக்கும் புத்தகமிது. Sun Tzu என்ற சைன படைத்தளபதியின் பொன்மொழிகளே இவை. படைக்காகவும், போருக்காகவும் எழுதப்பட்ட புத்தகமிது. இன்று ராணுவத்தைத் தாண்டி மேலாண்மை, விளையாட்டு என்று எவ்விடத்திலும் தன் திறமையை பயன் படுத்த தரும் முத்து. அன்றைய நெப்போலியன் முதல் இன்றைய முஷாரப் வரை ராணுவ தளபதிகளாலும் இதை பயன் படுத்தியதாக தெரிகிறது. பல நாடுகளிலும் அலுவலகங்களின் பெருந்தலைகள் பயன்படுத்தும் புத்தகம். ஒரு பொன்னான வரி
Carefully study the well-being of your men, and do not overtax them. Concentrate your energy and hoard your strength. Keep your army continually on the move, and devise unfathomable plans.

Rich dad Poor dad எனும் உங்கள் பர்சை குறிவைக்கும் புத்தகம்(விலையால் அல்ல விஷயத்தால்) பணம் என்றால் என்ன, பணத்தை எப்படி சேமிப்பது, என்று அடிப்படை விஷய ஞானத்தை போதிக்கும் புத்தகம். கடன் அட்டையில் மூழ்கி தவிப்பரெனில், நான் கட்டாயம் பரிந்துரைக்கும் புத்தகம். நம் தாய் தந்தையர் சொல்லித் தந்த ''சேமிக்க பழகு'' விஷயத்தை இன்றைய காலகட்டத்தில் எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை விளக்கி 'பணத்தால் பணம் பண்ணும் வித்தையை கற்க வலியுருத்துகிறது. இதை எதிர்த்து பல எதிர்வின்களை இணையத்தில் காணக்கிடைத்தாலும் இன்றும் இது சக்கை போடும் புத்தகமாகவே இருக்கிறுது.

ஆங்கிலத்தில் புதிதாய் வார்த்தை சேர்த்த Catch-22. இப்புதகத்தை படித்தேன் என்று சொல்பவர்களை நான் உடனடியாய் கேட்கும் கேள்வி இந்த புத்தகத்தை தொடர்ந்து வாசித்து முடித்தீர்களா என்றுதான். எதிர்மறை என்பதை புத்தகம் முழுதும் தெளித்திருப்பார் ஆசிரியர். பயங்கரமாய் மண்டைகாய வைக்கும் புத்தகம். ஒரே குழப்படியாகவும் பகடியாகவும், எதிர்மறையாகவும், பயித்தக்காரதனமாகவும், சிரிப்பாகவும் மொத்தத்தில் நம் வாழ்க்கை போலவே இருக்கும். இந்த புத்தகத்தில் ஒரு அதீத விஷயம் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். யோசாரின் என்ற ஒருவன் எப்படி போரிலிருந்து(போரிட்டு அல்ல, போர் பிடிக்காமல், சாவுக்கு அஞ்சி) தப்பித்து வீட்டுக்கு திரும்பி செல்ல முயலுகிறான் என்பதே அடிநாதம். போரினால் வீரர்களுக்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதிலிருந்து அதிகாரவர்க்கத்தின் எதேச்சதிகார திட்டங்கள் வரை உணர முடியும். ஒரு வரையரைக்குள் கொண்டு விளக்கமுடியாத புத்தகம் அல்லது எனக்கு அந்த அளவுக்கு இலக்கிய அறிவில்லை.

Love in the time of cholera மற்றும் Mind of the strategist போன்ற புத்தகங்களையும் மேலே உள்ளவற்றையும் விரிவாக எழுத ஆசை. தனிஇடுகைகளாகவோ, புரட்டிப்போட்ட புத்தகங்கள் மாதிரி தனிப்பதிவாகவோ போடவேண்டியதுதான். இத்தோடு இப்போதைக்கு The End.

கருத்துகள்

Navaneetha இவ்வாறு கூறியுள்ளார்…
Very useful post. Was searching for exactly the same kind of books. Thanks for this useful info.
வல்லிசிம்ஹன் இவ்வாறு கூறியுள்ளார்…
அறிமுகப் படுத்திய புத்தகங்கள் அனைத்தயும் படிக்க முடியாவிட்டாலும் டக்ளஸ் ஆடம்ஸாவ்து படிக்க வேண்டும்.
விளக்க உரைக்கு நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நவா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
இங்கே போய் தமிழ்விசை தரவிறக்கி, தமிழ் பாவிக்கலாமே.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வல்லியம்மா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Love Storyஐயும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
This is very useful post. It gave me some basic idea to select and read good books. Thanks sathia.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி,
நன்றி. அந்தளவுக்கு வாசிப்பு இல்லை.தெரிந்ததை சொன்னேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4