முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

VoIPக்கு கதவை திறக்குது இந்தியா!!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்லது நடக்கிறது. VoIP ஒரு வாய்ப்பு மிக்க நுட்பம். கூகிள் டாக் முதற்கொண்டு இணையத்தில் தொலைபேசும் பலரும் உபயோகிக்கும் நுட்பம். கடந்த பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு துறை தாதாக்களையும் தாத்தாக்களையும் பயப்பட வைத்த வித்தை. PSTN எனப்படும் பழைய தொலைத்தொடர்பு நுட்பத்தில் இன்றும் உலகத்தில் பெருமளவு 'பேச்சு' நடைபெறுகிது. இதை குறிப்பிடத்தக்க நுட்ப அளவில் மாற்ற முயன்றது 'செல்பேசி' எனப்படும் Cellular நுட்பமே. இதுவும் 'கடைசி மைல்' எனப்படும் உங்கள் வீட்டுக்கும் தொலைத்தொடர்பு பின்னலின் நுனியில் உள்ள அலுவலுகத்துக்குமான தொடர்பை மாற்றியது. VoIP அடுத்த அளவில் இந்த வலைப்பின்னலையே மாற்ற முயன்று பெருமளவு மற்ற நாடுகளில் மாற்றியது. இந்தியாவில் இதுவரை கணினி-கணினி பேச்சையும் கணினியிலிருந்து வெளிநாட்டு(VoIP அனுமதிக்கும் நாடுகளுக்கான) எண்களுக்கு பேச முடிந்தது. அதாவது முழுக்க இணையத்தில் 'பேச்சு' செல்வதாய் இருந்தால் அனுமதிக்கப்பட்டது. இந்தியாவிற்குள் ஒரு இணைய தொடர்பிலிருந்து நேரடியாக ஒரு தொலைபேசிக்கு பேச முடியாது.காரணம் இணைய சே