முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

VoIPக்கு கதவை திறக்குது இந்தியா!!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்லது நடக்கிறது. VoIP ஒரு வாய்ப்பு மிக்க நுட்பம். கூகிள் டாக் முதற்கொண்டு இணையத்தில் தொலைபேசும் பலரும் உபயோகிக்கும் நுட்பம். கடந்த பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு துறை தாதாக்களையும் தாத்தாக்களையும் பயப்பட வைத்த வித்தை. PSTN எனப்படும் பழைய தொலைத்தொடர்பு நுட்பத்தில் இன்றும் உலகத்தில் பெருமளவு 'பேச்சு' நடைபெறுகிது. இதை குறிப்பிடத்தக்க நுட்ப அளவில் மாற்ற முயன்றது 'செல்பேசி' எனப்படும் Cellular நுட்பமே. இதுவும் 'கடைசி மைல்' எனப்படும் உங்கள் வீட்டுக்கும் தொலைத்தொடர்பு பின்னலின் நுனியில் உள்ள அலுவலுகத்துக்குமான தொடர்பை மாற்றியது. VoIP அடுத்த அளவில் இந்த வலைப்பின்னலையே மாற்ற முயன்று பெருமளவு மற்ற நாடுகளில் மாற்றியது.

இந்தியாவில் இதுவரை கணினி-கணினி பேச்சையும் கணினியிலிருந்து வெளிநாட்டு(VoIP அனுமதிக்கும் நாடுகளுக்கான) எண்களுக்கு பேச முடிந்தது. அதாவது முழுக்க இணையத்தில் 'பேச்சு' செல்வதாய் இருந்தால் அனுமதிக்கப்பட்டது. இந்தியாவிற்குள் ஒரு இணைய தொடர்பிலிருந்து நேரடியாக ஒரு தொலைபேசிக்கு பேச முடியாது.காரணம் இணைய சேவை நிறுவனங்களும் தொலைபேசி நிறுவனங்களுக்குமான தொடர்பு அனுமதிக்கப்படவில்லை. அதற்கு கட்டுப்பாடு இருந்தது. இதுவே அகலப்பட்டை இணைப்பை வைத்து தொலைபேசி கட்டணத்தை குறைக்க முயன்ற பல நிறுவனங்களுக்கும் இடைஞ்சலாக இருந்தது. இப்போது இதை அனுமதிப்பதால் என்ன நடக்கும்.

1. புதிதாய் Vonage போன்ற நிறுவனங்கள் தொன்றலாம்.
2. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக்கு பேசும் கட்டணங்கள் பெருமளவு குறையும்.
3.இலவச (தரம்குறைந்த) மென்பொருள் பேச்சு வசதிகள் பெருகும்.
4. தொலைத்தூர தனிக்கட்டணம் என்ற தொல்லை ஒரேயடியாக ஒழியலாம்.
5. அலுவலங்களுக்குள்ளே தடையற்ற தொடர்பு கிடைக்க இது உதவும்.
6.குழப்பத்தை குறைக்க பத்து எண் தொடர்பு முறை பரவலாகும்.
7.BPO நிறுவனங்களுக்கு லாபம் பெருகும்.
8. கிராமங்களில் தொலைபேசித் தொடர்பு பரவலாகும்.
இன்னும் பல ..லாம்கள் நடக்கும்.

கருத்துகள்

கூடுதுறை இவ்வாறு கூறியுள்ளார்…
இது ஏற்கனவே செய்து இருக்கவேண்டிய ஒன்று 3ஜீ தொழில்நுட்பம் நமது அரசியல்வியாதிகள் கையில் சிக்கி சீரழந்துக்கொண்டுள்ளது போல் இல்லாமல் உடனடியாக செய்தால் நமது நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளம் கண்டிப்பாக பெருகும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன செய்வது? ஒரு பக்கம் பார்த்தால், துணிச்சலுடன் எக்கச்சக்க‌ பணம் போட்டு முதலீடு செய்து ஆரம்பித்த அதிக இலாபம் சம்பாதிக்கவேண்டும் என்று ஆரம்பித்த புதிய தொழிலதிபர்கள், அதில் வேலை செய்யும் குடும்பங்கள் போன்ற இவர்களின் வாழ்க்கையையும் நாம் ஒரு பக்கம் பார்க்கவேண்டும் அல்லவா?

மறுபக்கம், விஞ்ஞானம், தொழில்நுட்பமும் வெகு வேகமாக மாறிக்கொண்டே போகிறது. அதையும் நாம் தொடர்ந்தாக வேட்ணும்.

தகவலுக்கு மிக்க நன்றி.

மாசிலா
முகவை மைந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
அது ஏன் எப்பவுமே நம்ம நாட்ல மட்டும் ஆகக் கடைசியா முயற்சிக்கிறாங்கன்னு தெரியலை.

3G இந்தியாவுக்கு வர iphone தான் காரணம்னு எனக்குத் தோணுது ;-))))))

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4