முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்பட போட்டிக்கு-5

இதோ நம்ம இரண்டு படங்கள்

மத்தெலாம் தினமும் உபயோகிக்கும் பொருட்களில் சேத்துக்க முடியாது அப்படின்னா ஒண்ணும் பண்ண முடியாது ;-)புகைப்படங்கள்

Reply All மற்றும் மின்னஞ்சல் குளறுபடிகள்

சக பதிவர் ஒருவர் ஏராளமான மின்னஞ்சல் முகவரிகளுடன் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துச்செய்தி அவர் கதறக்கதற இன்றும் வெற்றிகரமாய்
நடைபோட்டு வரும் வேளையில் ஐயா ஆளைவிட்டுடுங்கன்னு அவர் கெஞ்சினாலும் விடாமல் வேறு அவதாரம் கொண்டு இன்றும் அலைகிறது

எல்லா மென்பொருள் அலுவலகங்களிலும் இந்த IT department எனப்படும் வன்பொருள் பிரச்சனைகளை சரி பண்ண இருக்கும் துறையைக்கண்டாலே கடுப்பாக இருக்கும்
அதுவும் கொஞ்சம் பெரிய நிறுவனமாய் இருந்தால் கேட்கவேண்டாம் அவர்கள் பண்ணும் தொல்லைகள் சொல்லி மாளாது( எல்லாம் நம்ம நல்லதுக்குதான் என்றாலும்..)
சிறுது நாட்கள் முன்பு அந்த துறையில் இருந்து ஒருவர் ஒரு பெரிய குழுவுக்கு(தெரியாத்தனமாய்) ஒரு மின்னஞ்சலை தட்டிவிட்டார்.நல்ல உபயோகமான தகவல்தான்.
பார்த்தார்கள் மக்கள் இருந்த கடுப்பையெல்லாம் காட்டிவிட்டார்கள். எப்படி? எல்லா பதில் மின்னஞ்சலிலும் ஒரே வரி 'ஐயா என்னை இந்த தொடர் மின்னஞ்சலிலுந்து விலக்கவும்'
Reply to All :-))

அலுவலகத்தில் நண்பர் ஒருவர் ஒரு தானியிங்கி மின்னஞ்சலில் குழுவில் இருக்கிறார்(சில சர்வர்கள் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை தானியங்கியாக இந்த குழுவுக்கு அனுப்பிவிடும்)
அதை மறந்து …