முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுற்றுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலவசகொத்தனாருக்கு சமர்ப்பணம் அல்லது படம் காட்டுதல்

நட்சத்திர வாரத்துல எல்லா பதிவையும் தீவிரமான பதிவா போட்டா இவன் தீவரவாதின்னு முத்திரை குத்தீடுவாங்கன்னு தமிழ் பதிவுலகின் மிக மிக முக்கியமான பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இருக்கற கொஞ்சநஞ்ச விஷயத்தையும் ஒரே வாரத்தில எழுத சொல்லீட்டாங்ளேன்னு கடுமையா சிந்தனை பண்ணிக்கிட்டு இருந்தப்போ, சிஷ்யன் தயாராகும் போது குரு தோன்றுவார் அப்படிங்கற மாதிரி இலவசக்கொத்தனார் இந்த பதிவைப் போட்டார். கொத்தனார், கட்டைவிரலெல்லாம் கேட்கக்கூடாது, சொல்லிட்டேன்!! அதனால் படம் காட்டறதுன்னு முடிவு பண்ணியாச்சு!! சிலருக்கு கோடை காலமானால் சுற்றுலா போக வாய்ப்பும் நேரமும் கிடைக்கும். சிலருக்கு பணி நிமித்தம் வேறு இடங்களுக்கு போக வாய்ப்பு கிடைக்கும். அப்படி பணி நிமித்தம் வேறு இடங்களுக்குப் போக வாய்பும்,ஊர் சுற்ற நேரமும் கிடைத்தால்.... நான்தான் அந்த அதிர்ஷ்டசாலி. சுருக்கமா சொல்லணும்னா, நான் தற்போது வசிக்கும் மாசூசட்ஸ் மாகாண Cape Cod வடகிழக்கு அமரிக்காவின் Goa மாதிரி. குளிர் காலத்தில் மனிதத்தலையை (மிருகத்தலையும் சேர்த்து தான்) காணக்கிடைக்காது. வெய்யில் காலத்துல அமரிக்க மக்கள் மட்டுமில்லாம பல்வேறு நாடு...