முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...

புரட்சி நாளை வருகிறது!!

இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது. சில முக்கிய அம்சங்களாவன 1. திறந்தவூற்று மென்பொருள் 2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM ஒன்றை v8 எனும் புதிய இயங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்(மற்ற உலவிகளில் இதை வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம். 3. ஒரே ஒரு tabஐ மட்டும் மிகுந்த கட்டுப்பாடுடன் இயக்கமுடியும். அதாவது அதில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தொட்ர்பு கொண்ட வழங்கிக்கி மட்டுமே அறியமுடியும். இதனால் கடவுச்சொல் திருட்டு, உங்களுக்கு தெரியாமல் கணினியில் மென்பொருள் நிறுவுவது, கடனட்டை விவரத்தை திருடுவது போன்றவை திருடாமல் தடுப்படும். 4. மிகமுக்கியமாக ஒவ்வொரு tabம் ஒரு தனிஉலவிபோல் செயல்படும் அதாவது ஒரு tab சிதைந்தாலோ இயங்காமல் நின்று போனாலோ அல்லது மென்பொருள் இடியாப்பச்சிக்கலில் செயலிழந்தாலோ எல்லாம் சிதையாது. சுருங்கச் சொல்லின் முன்பு br...

VoIPக்கு கதவை திறக்குது இந்தியா!!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்லது நடக்கிறது. VoIP ஒரு வாய்ப்பு மிக்க நுட்பம். கூகிள் டாக் முதற்கொண்டு இணையத்தில் தொலைபேசும் பலரும் உபயோகிக்கும் நுட்பம். கடந்த பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு துறை தாதாக்களையும் தாத்தாக்களையும் பயப்பட வைத்த வித்தை. PSTN எனப்படும் பழைய தொலைத்தொடர்பு நுட்பத்தில் இன்றும் உலகத்தில் பெருமளவு 'பேச்சு' நடைபெறுகிது. இதை குறிப்பிடத்தக்க நுட்ப அளவில் மாற்ற முயன்றது 'செல்பேசி' எனப்படும் Cellular நுட்பமே. இதுவும் 'கடைசி மைல்' எனப்படும் உங்கள் வீட்டுக்கும் தொலைத்தொடர்பு பின்னலின் நுனியில் உள்ள அலுவலுகத்துக்குமான தொடர்பை மாற்றியது. VoIP அடுத்த அளவில் இந்த வலைப்பின்னலையே மாற்ற முயன்று பெருமளவு மற்ற நாடுகளில் மாற்றியது. இந்தியாவில் இதுவரை கணினி-கணினி பேச்சையும் கணினியிலிருந்து வெளிநாட்டு(VoIP அனுமதிக்கும் நாடுகளுக்கான) எண்களுக்கு பேச முடிந்தது. அதாவது முழுக்க இணையத்தில் 'பேச்சு' செல்வதாய் இருந்தால் அனுமதிக்கப்பட்டது. இந்தியாவிற்குள் ஒரு இணைய தொடர்பிலிருந்து நேரடியாக ஒரு தொலைபேசிக்கு பேச முடியாது.காரணம் இணைய சே...

பிடித்த இணையப்பக்கத்தை சேமித்து வைப்பது எப்படி?

மூன்றே படிகள் தான். 1. இங்கு போய் ஒரு பயனர்கணக்கை உருவாக்குங்கள். 2. அங்கு உங்கள் இணைய உலாவி( IE, Firefox ) எதுவோ அதுக்கு ஏற்றார்போல் பொத்தானை உங்கள் உலாவியில் இணைத்துக்கொள்ள நீட்சி( extension) கொடுப்பார்கள் அதை நிறுவிக்கொள்ளுங்கள்.உங்கள் உலாவியில் buttonகளும் menuவும் வந்துவிடும் step -2 ஐ நீங்கள் உபயோகப்படுத்தும் அனைத்து கணினிகளிலிலும் செய்துவிடுங்கள். ஆச்சா, அடுத்து 3. எப்படி உபயோகிப்பது... இப்போ ஒரு பிடித்த பக்கத்தை படிக்கிறீர்கள். படித்தவுடன், இந்த tag பொத்தானை ஒரு அமுக்... அடுத்து இப்படி ஒரு சின்ன சன்னல் வரும். அதில் நீங்கள் உங்களுக்கு ஏற்றமாதிரி tag போட்டு வைத்துக்கொள்ளலாம். இதில் நான் do not shareஐ check பண்ணி அடுத்தவர் நான் என்ன சேமித்திருக்கிறேன் என்று பார்க்காமல் இருக்க வழி பண்ணி இருக்கிறேன். உங்கள் நண்பர்களோடு பார்த்து பகிர default ஆக விட்டுவிட்டால் அடுத்தவர்களும் உங்களுடையதை பார்த்துக்கொள்ளலாம். என்ன பயன் 1. tagகள் மக்கள் எதை படிக்கிறார்கள் என்று trend analysis பண்ண உதவும் 2. உங்களுக்கேற்ற வகையில் வகைப்படுத்தி வைத்துகொள்ள. 3. நண்பர்களுடன் பகிர உங்களுக்குள்ளே குழுவாக பகிர...

தமிழில் தளமுகவரி!! கனவு மெய்ப்படட்டும்!!

கோபி(பெயர் குழப்பத்திற்கு மன்னிக்கவும், விவரம் பின்னூட்டத்தில்) இந்த பின்னூட்டத்தை ஆங்காங்கு சில இடங்களில் போட்டிருந்தார். Please take part in testing Tamil Domain http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/ http://உதாரணம்.பரிட்சை/தமிழ் மிக்க மகழிச்சியாய் இருந்தது.சோதனை அனைத்தும் வேலை செய்கிறது.சரியான பக்கத்துக்கு எடுத்து செல்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் மாறித்தான் முகவரி வந்து கொண்டிருக்கிறது. விக்கியில் கலந்துரையாடல் பக்கத்தில் என்முயற்சிகளை போட்டுவிட்டேன். இப்போதைக்கு புதிய பயனர் கணக்கு உருவாக்கித்தான் போடவேண்டுமென்கிறது. அவருக்கு தேவை பல்வேறு வகையான இணைய சார் மென்பொருளிலும் எவ்வாறு வேலை செய்கிறது என்று அறிவது என்று நினைக்கிறேன். புகுபதிகை செய்ய இயலாதவர்களுக்கு என்ன வழி என்று தெரிந்தவர்கள் சொல்லவும். உங்கள் சோதனைகளை இங்கு பின்னூட்டமிடுங்கள். கனவு மெய்ப்பட்டும்.

Blogger, Wordpress, Blog, Webhosting, domain கேள்விகள்!!!!

முன்னுரை அல்லது உரிமைத் துறப்பு: *வித்தகர்களே!! எனக்கு HTML ஐத்தாண்டி இணையமொழி அறிவு கிடையாது. நான் கொஞ்சம் பழைய ஆள் (இணைய அறிவால்) CGI/PERL (இதல்லாம் இன்னும் ஆராவது பாவிக்கிறார்களா??) மற்றும் Apache அறிவும், கொஞ்சம் போல் Drupal அறிவும் மட்டுமே உண்டு. முட்டாள்தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டுகிறேன். * இந்த கேள்வியெல்லாம் யார் யாரிடம் கேட்டால், எங்கெங்கு கேட்டால் பதில் கிடைக்கும் என்று தெரியும். இருந்தாலும் நீளம் மற்றும் மின்னஞ்சல் தொல்லை வேண்டாம் என்று இங்கு போடுகிறேன். *கேள்விகளையெல்லாம் படித்துவிட்டு "முதலில் நீ எழுதுடா அப்புறம் பாக்கலாம்.. " என்று திட்டவெல்லாம் கூடாது. 1. Bloggerல் பாட்டு/கவிதையெல்லாம் தட்டச்சினா, எல்லாமே இடது பக்கம் போய்விடுவதை சரி செய்வது எப்படி. (left justify ஆகிவிடுவதை தடுப்பது எப்படி) பதில்1 - blockquote /blockquote மூலம் கதை கவிதைகளை இடப்புறமிருந்து விருப்பப்பட்ட இடத்துக்கு வலப்புறமாக நீக்கலாம்.இன்னும் நீக்கணும் என்றால் இருமுறை கொடுக்கலாம் பதில் 2- pre tag உபயோகப்படுத்தலாம். உ.ம் இங்கே இருக்கும் வரிகளாம் பதிவ...

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக...

மாண்புமிகு முதல்வருக்கு ஓர் கோரிக்கை மடல்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! தங்கள் பிறந்த நாளுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பார்கள். நான் வாழ்த்துக்களுடன் ஒரு சில கோரிக்கைகளையும் தங்கள் முன் வைக்கவிழைகிறேன். தமிழ் கூறும் நல்லுலகம், நடுவண் அரசிடம் போராடி தமிழை செம்மொழி ஆக்கியமைக்காக உங்களை என்றென்றும் வாழ்வாங்கு வாழ்த்தும். மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ், இணையத்தில் ஓரளவு வளர்ந்தே வருகிறது. மொழி சீர்திருத்தம் கொண்டு வந்து சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர வாயப்பு கிடைத்தது. இன்று நாம் அடுத்த கட்ட சீர்திருத்தமும் தனித்தமிழ் வளர்ச்சியும் தூண்டவேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழ் பெரும் தேக்க நிலை பெற்று இருக்கிறது. இணையத்திலும் அறிவியலிலும் அதே வேகத்திற்கு மொழி ஈடுகொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. அவ்வாறு இல்லாத மொழிகள் ஆங்கில ஆதிக்கத்தால் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இதை நிர்வாக ரீதியில் அணுகுதற்கான வழிமுறையோ, செயல்முறையோ அல்லது அதிலுள்ள சிக்கல்களையோ அறியும் அளவிற்கு எனக்கு வயதுமில்லை அனுபவமும் இல்லை. கொச்சையான நேரிடையான மொழியில் சொல்லி விடு...

இணைய வானொலி முடிவுக்கு வருமா?

ஆம். இணையத்தில் வானொலி கேட்கும் பலருக்கும் இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி. வாஷிங்டனில் இருந்து இயங்கும் காப்புரிமைக் கழகம் வானொலி வலைத்தளங்களுக்கான கட்டணத்தை 3 மடங்காக்கி இருக்கிறது. அதுவும் சும்மா இல்லை இது போன வருடம் (2006 ஜனவரி 1ல்) இருந்து பாக்கி சேர்த்து இந்த வருடம் மே 15ல் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் பல தளங்கள் திவாலாகும் அல்லது வானொலி சேவைகள் முடிவுக்கு வரும என செய்தித் தளங்களும் வானொலி சேவை தரும் தளங்களும் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்களுக்கு http://www.savenetradio.org/ http://www.kurthanson.com/archive/news/041607/index.shtml http://www.shoutcast.com/

தேன்கூட்டுக்கு என்ன ஆச்சு?

தேன்கூட்டில் பதிவு செய்து ஒரு மாதத்திற்க்கு மேலாகிறது. ஒரு எதிர்வினையையும் காணோம். Pending approval அப்பிடின்னே சொல்லிக்கிட்டு இருக்கு. மின்னஞ்சல் எல்லாம் அனுப்பி பாத்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. நம்ம feedல தான் பிரச்சனை அப்பிடின்னு ஆதம் ஓடைக்கு மாறிட்டேன். தமிழ்மணத்துக்கும் RSS பிடிக்கலை. feedvalidator.org ஆதம் பக்கவா இருக்குன்னு சொல்லுது. என்னோட வலைப்பூவுல பிரச்சனையா இல்லை தேன்கூட்ல பிரச்சனையா? யாராவது விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.

How to Post in Tamizh? தமிழில் பதிவு செய்வதெப்படி?

I will try to post the simplest way of posting and typing in emails in tamizh. 1. Check whether you have Windows XP Service Pack 2. If not atleast you should have Indic Fonts installed. Open Regional and Language Options in Control Panel. On the Languages tab, under Supplemental language support, select the Install files for complex script and right-to-left languages check box. (You may need CD or network where you have files) Click OK or Apply. After the files are installed, you must restart your computer. 2. Install Barahapad from Baraha I have used Murasu, Tavaultesoft's Keyman and dozens of other editors. I found Baraha to be simple and doesnt give much trouble. Keyman is the second best. 3. While Installing Baraha set it to Tamizh usage 4. Open BarahaPad after installation. Set the Font to BRH Tamil RN. This is useful when you type numerals. The keyboard id phonetic. Meaning you need not worry about the Tamizh Keyboard. type tha-mi-zh will display as தமிழ். sa-th-yaa will disp...