கோபி(பெயர் குழப்பத்திற்கு மன்னிக்கவும், விவரம் பின்னூட்டத்தில்) இந்த பின்னூட்டத்தை ஆங்காங்கு சில இடங்களில் போட்டிருந்தார்.
Please take part in testing Tamil Domain
http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்
மிக்க மகழிச்சியாய் இருந்தது.சோதனை அனைத்தும் வேலை செய்கிறது.சரியான பக்கத்துக்கு எடுத்து செல்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் மாறித்தான் முகவரி வந்து கொண்டிருக்கிறது.
விக்கியில் கலந்துரையாடல் பக்கத்தில் என்முயற்சிகளை போட்டுவிட்டேன். இப்போதைக்கு புதிய பயனர் கணக்கு உருவாக்கித்தான் போடவேண்டுமென்கிறது. அவருக்கு தேவை பல்வேறு வகையான இணைய சார் மென்பொருளிலும் எவ்வாறு வேலை செய்கிறது என்று அறிவது என்று நினைக்கிறேன்.
புகுபதிகை செய்ய இயலாதவர்களுக்கு என்ன வழி என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.
உங்கள் சோதனைகளை இங்கு பின்னூட்டமிடுங்கள்.
கனவு மெய்ப்பட்டும்.

கருத்துகள்
நானும் விரிவாக இது குறித்து எழுத இருக்கிறேன்.
நன்றி. கோபி குழப்பத்தை மாற்றிவிட்டேன். கோபிகள் மன்னிப்பார்களாக.
எழுதுங்கள் ரவி, நிறைய பங்களிப்புகள் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி திட்டங்கள் வெற்றிபெரும்.
தகவலுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
http://ta.wikibooks.org/wiki/திருக்குறள் போன்றவை தமிழில் தானே உள்ளன?
நீங்கள் குறிப்பிட விரும்பும் தகவல் எனக்கு சரியாகப் புரியவில்லை.
முகவை மைந்தன் - இது வரை துணை அடைவு, பக்கப் பெயர், தளப் பெயர் ஆகியவை தான் தமிழில் சாத்தியமாக இருந்தன. இவற்றையே நீங்கள் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் குறிக்கின்றன. இனி .com, .net போன்ற மேல்நிலை ஆட்களப் பெயர்கள் (TLD எனப்படும் top level domain) கூட தமிழில் கிடைக்கும் சாத்தியம் உண்டு. அதற்கான சோதனை முயற்சியே இது.
அது தகடூர் கோபி இல்லீங்க. நூலகம் கோபி :-)
தகவலைப் பதிவாக இட்டுப் பலர் கவனத்தை ஈர்த்தமைக்கு நன்றிகள். உங்கள் சோதனை முடிவுகளை, குறிப்பாக அதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றை முதற்பக்கத்தின் discussion பக்கத்தில் ஆங்கிலத்தில் தெரிவிப்பது நல்லது. அதிக அளவானோர் சோதிப்பதும் கருத்துத் தெரிவிப்பதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நன்றி
இப்போ தான் பாத்தேன். அவரே 3 பதிவு வச்சு இருக்கறத அத்தவிர தனி டொமைன் வேற ;-)
நூலகம் கோபி மன்னிச்சுருங்கோ.
தகடூர் கோபி வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.
@முகவை மைந்தன் இனி top level domain சாத்தியம். இதனால் என்ன பயன்? தனிப்பதிவு இடவேண்டும். ரவி போடுவார் என்று எதிர்பார்க்கிறேன் . அங்கே மீண்டும் பேசலாம்.
மீண்டம் ரவிக்கு நன்றி.