முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி நாளை வருகிறது!!

இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது. சில முக்கிய அம்சங்களாவன 1. திறந்தவூற்று மென்பொருள் 2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM ஒன்றை v8 எனும் புதிய இயங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்(மற்ற உலவிகளில் இதை வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம். 3. ஒரே ஒரு tabஐ மட்டும் மிகுந்த கட்டுப்பாடுடன் இயக்கமுடியும். அதாவது அதில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தொட்ர்பு கொண்ட வழங்கிக்கி மட்டுமே அறியமுடியும். இதனால் கடவுச்சொல் திருட்டு, உங்களுக்கு தெரியாமல் கணினியில் மென்பொருள் நிறுவுவது, கடனட்டை விவரத்தை திருடுவது போன்றவை திருடாமல் தடுப்படும். 4. மிகமுக்கியமாக ஒவ்வொரு tabம் ஒரு தனிஉலவிபோல் செயல்படும் அதாவது ஒரு tab சிதைந்தாலோ இயங்காமல் நின்று போனாலோ அல்லது மென்பொருள் இடியாப்பச்சிக்கலில் செயலிழந்தாலோ எல்லாம் சிதையாது. சுருங்கச் சொல்லின் முன்பு br...

VoIPக்கு கதவை திறக்குது இந்தியா!!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நெடுநாளைக்குப் பிறகு ஒரு நல்லது நடக்கிறது. VoIP ஒரு வாய்ப்பு மிக்க நுட்பம். கூகிள் டாக் முதற்கொண்டு இணையத்தில் தொலைபேசும் பலரும் உபயோகிக்கும் நுட்பம். கடந்த பத்தாண்டுகளாக தொலைத்தொடர்பு துறை தாதாக்களையும் தாத்தாக்களையும் பயப்பட வைத்த வித்தை. PSTN எனப்படும் பழைய தொலைத்தொடர்பு நுட்பத்தில் இன்றும் உலகத்தில் பெருமளவு 'பேச்சு' நடைபெறுகிது. இதை குறிப்பிடத்தக்க நுட்ப அளவில் மாற்ற முயன்றது 'செல்பேசி' எனப்படும் Cellular நுட்பமே. இதுவும் 'கடைசி மைல்' எனப்படும் உங்கள் வீட்டுக்கும் தொலைத்தொடர்பு பின்னலின் நுனியில் உள்ள அலுவலுகத்துக்குமான தொடர்பை மாற்றியது. VoIP அடுத்த அளவில் இந்த வலைப்பின்னலையே மாற்ற முயன்று பெருமளவு மற்ற நாடுகளில் மாற்றியது. இந்தியாவில் இதுவரை கணினி-கணினி பேச்சையும் கணினியிலிருந்து வெளிநாட்டு(VoIP அனுமதிக்கும் நாடுகளுக்கான) எண்களுக்கு பேச முடிந்தது. அதாவது முழுக்க இணையத்தில் 'பேச்சு' செல்வதாய் இருந்தால் அனுமதிக்கப்பட்டது. இந்தியாவிற்குள் ஒரு இணைய தொடர்பிலிருந்து நேரடியாக ஒரு தொலைபேசிக்கு பேச முடியாது.காரணம் இணைய சே...

நிகழ்நேர இயங்குதளம் - ஓர் அறிமுகம்

இங்குதளம்(Operating System) என்பது ஒரு கணிணியின் வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இடையில் இயங்கும் நிரல்கட்டமைப்பு. CPU என்பதை ஒரு மூளையோடு ஒப்பிட்டால் இயங்குதளத்தை புத்தியோடு ஒப்பிடலாம். பிரபலமான சில இங்குதளங்களின் பெயரைக்கேட்டால் UNIX, XP,Linux என்பீர்கள். சரி கணிணி சார் பொருட்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து வைத்து அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் Windows, Linux , Mac OS போன்றவற்றால் இயங்கும் உபகரணங்களை மட்டும் பிரித்தால் எத்தனை சதவிகிதம் இருக்கும்? (விடை கடைசியில்) இயங்குதளம் சரி, அது என்ன நிகழ்நேர(Real-time OS) இயங்குதளம்? சுருங்கச் சொன்னால் இவை சிறப்பு வகையை சார்ந்த இயங்குதளம். பதிகணினியியலில்(embedded technology) அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளம். சாதாரணமாக நாம் உபயோகிக்கும் இயங்குதளங்கள் நேரக் கட்டுபாடு கொண்டவையல்ல. உதாரணம் MS WORD ஐ சொடுக்கும் போது தொடர்புடைய மற்றொரு நிரல் நினைவகத்தில் ஏறுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டாலோ அல்லது செயல்படவில்லையெனிலோ இயங்குதளம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கருதமுடியாது. ஆனால் விமானத்தின் இயக்கத்தில் இதே மாதிரி ஒரு பிழை நேர்ந்தால்....

கறுப்பு கூகிளும் சுற்றுச்சூழலும்

பொதுவாகவே வலையில் மிக அதிகமாக பார்வையிடப்படும் வலையகங்களை பார்த்தால் அதன் வார்ப்புரு மிக எளிமையாக, வெண்மையான பின்ணணியில் இருக்கும். இதே வெண்மை பின்னணிதான் நாம் உபயோகிக்கும் பல மென்பொருட்களிலும், மென்பொருள் உருவாக்குதளங்களிலும் காணக்கிடைக்கிறது. அச்சடித்த காகித பழக்கத்தின் நீட்சியே இவ்வாறு நமக்கு பழகிப்போனதாக கருதவேண்டியிருக்கிறது. கணிணிதிரையை பொருத்தவரை ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு அளவு மின்சாரம் செலவழிவதாக இங்கு தெரிவிக்கிறார்கள். இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி ஓரு நாளைக்கு பல கோடி பார்வைகளை பெறும் கூகிளை கறுப்பு வண்ணத்தில் மாற்றினால் ஒரு வருடத்திற்கு 750 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கமுடியும் என்கிறார்கள் Blackle எனும் தளத்தை உருவாக்கி இருப்போர். இந்த எண்ண உருவாக்கத்திற்கு அவர்களுக்கு தூண்டுகோலாக அவர்கள் சுட்டுவது ஒரு பதிவை என்பது ஆச்சரியமாக இல்லை. கண்ணை உருத்துமோ எனும் பயமிருந்தால் அலுவலகத்தில் முக்கால்வாசி கறுவண்ண பின்னணியை உபயோகிப்போன் என்ற அளவில் என்னைக்கேட்டால் கட்டாயம் உருத்தாது. உண்மையில் பல மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யும்போது ஏற்படும் கண்ணயர்ச்சியை ஏற்படுத்தாது.

என்றும் பதினாறு - 1

கணிப்பொறியின் அடிப்படை தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விடயம் கணிப்பொறி ஒரு முட்டாள் பெட்டி அதற்கு தெரிந்ததெல்லாம் ஒன்றும் சுழியும் மட்டுமே என்று. ஆனால் பைனரி எனப்படும் இரும எண்ணில் கட்டளைகளை இடுவது நமக்கு மிகவும் கடினமானதும் மிக நீண்ட நிரல்களையும் உருவாக்க வேண்டியதுமாகிறது. இது மிகவும் பின்தங்கிய சில கணிணினுகளுக்கு மட்டுமே பொருந்தும். இன்று நாம் பல கருவிகளிலும் பயன்படுத்துவது Hex எனப்படும் 16ஐ அடிப்படையாக கொண்டியங்கும் கணிணித் தத்துவமே. அதென்ன 16ன் அடிப்படை. அதற்கு முன் ஒரு குறுவரலாறு. நாம் உபயோகப்படுத்தும் எல்லா எண்களும் 10ஐ அடிப்படையாக கொண்டவை. நம் கைவிரல்கள் பத்து அதுவே நமது கணிதத்திற்கு இயற்கையான அடிப்படையாக அமைந்துவிட்டது. அதே போல் 8ஐ அடிப்படையாக கொண்ட octal முறையும் உபயோகத்தில் ஆதி காலத்தில் இருந்திருக்கிறது. எட்டு என்ற எண்ணிற்கு அவர்கள் கொண்ட அடிப்படையும் விரலகள் தான் சரியாகசொல்வதானால் விரல்கள் அல்ல விரலிடுக்குகள். இதே போல் 12 மற்றும் 60 ஆகிய அடிப்படைகளும் இருந்திருக்கறது. இதுவே இன்றும் நாம் பயன்படுத்தும் மணிக்கணக்கில் உபயோகப்படுகிறது. எண் கணிதம், இடத்தை அடிப்படையாக கொண்...