முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கறுப்பு கூகிளும் சுற்றுச்சூழலும்

பொதுவாகவே வலையில் மிக அதிகமாக பார்வையிடப்படும் வலையகங்களை பார்த்தால் அதன் வார்ப்புரு மிக எளிமையாக, வெண்மையான பின்ணணியில் இருக்கும். இதே வெண்மை பின்னணிதான் நாம் உபயோகிக்கும் பல மென்பொருட்களிலும், மென்பொருள் உருவாக்குதளங்களிலும் காணக்கிடைக்கிறது. அச்சடித்த காகித பழக்கத்தின் நீட்சியே இவ்வாறு நமக்கு பழகிப்போனதாக கருதவேண்டியிருக்கிறது.

கணிணிதிரையை பொருத்தவரை ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு அளவு மின்சாரம் செலவழிவதாக இங்கு தெரிவிக்கிறார்கள்.
இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி ஓரு நாளைக்கு பல கோடி பார்வைகளை பெறும் கூகிளை கறுப்பு வண்ணத்தில் மாற்றினால் ஒரு வருடத்திற்கு 750 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கமுடியும் என்கிறார்கள் Blackle எனும் தளத்தை உருவாக்கி இருப்போர். இந்த எண்ண உருவாக்கத்திற்கு அவர்களுக்கு தூண்டுகோலாக அவர்கள் சுட்டுவது ஒரு பதிவை என்பது ஆச்சரியமாக இல்லை.

கண்ணை உருத்துமோ எனும் பயமிருந்தால் அலுவலகத்தில் முக்கால்வாசி கறுவண்ண பின்னணியை உபயோகிப்போன் என்ற அளவில் என்னைக்கேட்டால் கட்டாயம் உருத்தாது. உண்மையில் பல மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யும்போது ஏற்படும் கண்ணயர்ச்சியை ஏற்படுத்தாது.

கருத்துகள்

MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சோதனை பின்னுட்டம்
மா சிவகுமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக இருக்கிறது. இப்படியே கணினி திரையை வடிவமைத்துப் பார்க்க வேண்டும்.

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்
Machi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமாங்க வெள்ளை நிறம் கண்ணை உறுத்தற அளவுக்கு கருப்பு நிறம் கண்ணை உறுத்தவில்லை.
http://ecoiron.blogspot.com/2007/01/black-google-would-save-3000-megawatts.html
தளம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு.

என் தளத்தையும் மாற்றி பார்க்க வேண்டும்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அட, மாசியும், குறும்பனும் வார்ப்புருவை மாற்ற நான் காரணமாக இருக்க போகிறேனா? மாற்றி பாருங்கள் அதே போல் உங்கள் கணிணி themeஐயும் மாற்றிப்பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள். ஏதோ சுற்றுச்சூழலுக்கு நம்மால் ஆனது!!!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கணினி எழுத்து பிழை
கணணி தான் சரி
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி,
கணினி, கணிணி, கணணி எது சரி என்று தெரியவில்லை..தமிழ்ப்பதிவுகளில் அனைத்தையும் காணக்கிடைக்கிறது. விக்கியில் கணினி என்றே இருக்கிறது.

ஏதாவது ஆதாரம் இருப்பின் தெரிவிக்கவும்
சிறில் அலெக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
என்னொட டெஸ்க்டாப் கலரை கறுப்புக்கு மாற்றிவிட்டேன்.

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலருங்கோவ்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதாரம் இல்லை, நானும் என்கொ படித்த ஞாபகம்,
Better u Ask to Mr.Vairamuththu,
he he h e.....

by the by my name Nithi..
bye..
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள தகவல்.

உங்கள் முந்தைய பதிவுகளை அன்றாடம் தொகுக்காமல் மாத வாரியாகத் தொகுத்தால் நன்றாக இருக்கும்.

கணினி பெரு வழக்கு. கணனி ஈழத்தில் வழக்கில் இருக்கிறது. எது சரி என்பது அவரவர் முடிபு.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
Nithi,
வைரமுத்துவ கேக்கணுமா? முடிந்தவரை நற்றமிழ் எழுத அவா. அவர விட்டுவிடுவோம், பாவம்.

ரவி,
விளக்கத்திற்கு நன்றி.
மாதவாரியாக தொகுக்க முனைகிறேன்.

-சத்தியா
மா சிவகுமார் இவ்வாறு கூறியுள்ளார்…
சத்யா,

கேடீயி மேசைத் தளப் பின்னணி, ஃபயர்ஃபாக்சு, ஓப்பன் ஆபிசு பின்னணிகளைத் தனித்தனியாக மாற்றிக் கொண்டு விட்டேன். நன்றாகந்தான் இருக்கிறது :-)

இனிமேல் சாளர அலங்காரங்களையும் மாற்றி விட்டால பெரும்பான்மை கருப்புத்தான் பிடிச்ச கலரு என்று சொல்ல ஆரம்பித்து விடும்.

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சிவா (என்று விளிக்கலாம் தானே?),

மிக்க மகிழ்ச்சி.லினக்ஸில் ஓரளவு சுலபமாக மாற்ற முடியும். விண்டோஸில் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று தோன்றவில்லை.

-சத்தியா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...