முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரட்சி நாளை வருகிறது!!

இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாக
கூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது.
சில முக்கிய அம்சங்களாவன
1. திறந்தவூற்று மென்பொருள்

2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM ஒன்றை v8 எனும் புதிய இயங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்(மற்ற உலவிகளில் இதை வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. ஒரே ஒரு tabஐ மட்டும் மிகுந்த கட்டுப்பாடுடன் இயக்கமுடியும். அதாவது அதில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் தொட்ர்பு கொண்ட வழங்கிக்கி மட்டுமே அறியமுடியும். இதனால் கடவுச்சொல் திருட்டு, உங்களுக்கு தெரியாமல் கணினியில் மென்பொருள் நிறுவுவது, கடனட்டை விவரத்தை திருடுவது போன்றவை திருடாமல் தடுப்படும்.

4. மிகமுக்கியமாக ஒவ்வொரு tabம் ஒரு தனிஉலவிபோல் செயல்படும் அதாவது ஒரு tab சிதைந்தாலோ இயங்காமல் நின்று போனாலோ அல்லது மென்பொருள் இடியாப்பச்சிக்கலில் செயலிழந்தாலோ எல்லாம் சிதையாது. சுருங்கச் சொல்லின் முன்பு browsers=> tabbed browsers என்று இருந்தது இனி browsers in tab என்றாகிறது.

5. webkitஐ அடிப்படையாக கொண்டு இயங்குவதால் வன்பொருள் சார்பின்றி கையடக்க கருவிகளிலும் வம்பின்றி இயங்கும்.

6. ஒரு தொடக்க பக்கத்தில் நீங்கள் அடிக்கடி செல்லும் பக்கங்களை நினைவில் வைத்து ஒரு சிறு சுவரொட்டி போல கொடுக்கப்போகிறது. (இதை operaவில் பார்த்திருக்கிறேன்.)

7. FF, Opera, IE போன்றவற்றின் நல்ல சங்கதிகளை உருவிய புதிய மொந்தை இது.

8. API களை இதோடு தருவதால் புதிய உலவிசார் மென்பொருட்களை உருவாக்க வழிவகுக்கிறது.

9. மிக அதிக வேகத்தில் இயங்கும் என்று கூகிள் உறுதி அளிக்கிறது.

10. உலவிகளுக்கென்று இதுவரை கட்டுப்பாடு கொண்ட வழிமுறைகள்(standards) இருந்ததில்லை இதன்மூலம் சில வழிமுறைகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

11. மெருகேறிய நினைவக குப்பை கூட்டலையும்(garbage collection :-)) சரி பண்ணி இருக்கிறது. கட்டாயம் நினைவக கசிவு இருக்காது என்று சத்தியம் செய்கிறது. பார்ப்போம்.

Geckoவிற்கும் Webkitக்கும் இருந்த போட்டி இந்த முறை webkitக்கு போகும் என்று நினைக்கிறேன். FFக்கு கடும் போட்டியை இது உருவாக்கப்போகிறது.
அடிப்படையில் இருந்த ஓட்டை உடசல்கள் சிலதை சரி செய்து இருக்கிறது.
சில புதிய சிக்கல்களை உருவாக்காமல் இருந்தால் சரிதான்
***
உரிமைத்துறப்பு மற்றும் இன்னபிற
* தலைப்பை வேறு எதோ பதிவில் எப்போதோ பாத்த நினைவு. யாராவது காப்புரிமை எடுத்திருந்தால் அடிக்க வராதீர்.
*மேலதிக விவரங்கள் இணையத்திலும், இங்கும், கூகிள் புத்தகத்திலும்.
*இன்னும் நிறைய சங்கதிகளை மற்ற பதிவுகளில் விவரமறிந்தோர் இன்னும் விவரமாக எழுதுவார்கள் ;-))

கருத்துகள்

முகவை மைந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள தகவல். இப்பவே தகவல் மேய வேண்டியது தான்.

அறிவியல் தொடர்பான பதிவுகள் மட்டுமே இடுவது என்று உறுதி எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது;-)
Sathia இவ்வாறு கூறியுள்ளார்…
\\அறிவியல் தொடர்பான பதிவுகள் மட்டுமே இடுவது என்று உறுதி எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது;-)\\
அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை. அரசியல், சினிமா எழுதுவதில்லை என்று மட்டுமே முடிவு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிந்தாநதி - அஞ்சலி

நேற்று டிவிட்டரில் சிந்தாநதி மறைந்துவிட்டார் என்ற செய்தியைப் பார்த்தபோது மிகவும் அதிர்ந்துபோனேன். சிந்தாநதி என்னும் பெயரைக்கேட்ட உடனே எனக்கு நினைவுக்கு வருவது அவரின் 'எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்' என்னும் கவித்துவமான வரிகள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் மிகவும் துடிப்போடு தமிழ்ப்பதிவுலகில் இயங்கிக்கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டார். பதிவுலகில் மிக மிகச்சிலருடன் மட்டுமே மின்னரட்டையில் பேசுவதுண்டு.அவர்களில் ஒருவர் சிந்தாநதி. இரண்டு மாதங்கள் முன் திடீரென ஒருநாள் வந்தவரைக்கண்டு மகிழ்ந்தேன். சில நிமிடங்கள் பேசியதிலேயே, எதோ பிரச்சனைகள் வரமுடியவில்லை என்றார். அவரின் இயர்பெயர் என்ன எனபது கூட தெரியாது.பல இடங்களிலும் அவரே இயர்பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது கண்டு நாகரிகம் கருதி கேட்காமலே இருந்துவிட்டேன். இப்போது கேட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்னும் சில நிமிடங்கள் பேசி இருக்கலாம்.ஏதாவது உதவி தேவையா என்று கூட கேட்டிருக்கலாம். இப்போது வருந்துகிறேன்.

முன்பெல்லாம் அடிக்கடி அரட்டையில் வருவார்.மிகவும் பின்னரவாகக்கூட இருக்கும்.அமரிக்க பகல் நேரத்தில் என்ன இந்த …

பகலொளி சேமிப்பு நேரம்

http://www.fallingfifth.com/comics/20070311


   நடராஜ் காலில் வெந்நீர் ஊற்றினார்போலவே ஓடும் பையன். காலையில் ஒன்பதரைக்கு நகரின் நடுவில் முக்கிய வேலை என்றால் 8;50க்கு தான் ரயில் பிடிக்கப் போவான். ரயிலைப்பிடித்து, பேருந்து பிடித்து, ஆட்டோ பிடிக்கவேண்டும். இதே வழக்கமாப் போச்சு என்று அவன் அம்மா ஒருநாள் காலையில், சிலர் ஐந்து பத்து நிமிடம் அதிகமாக கடிகாரத்தில் 'fast' ஆக வைத்துக்கொள்வாரே, அதேபோல் கடுப்பில் ஒருமணிநேரம் 'fast'ஆக கைப்பேசி நேரத்தை வைத்துவிட்டார்.

    இது தெரியாமல் நடராஜ் நாள் முழுக்க எல்லா வேலைக்கும் ஒரு மணி முன்னதாகவே செல்வதை உணர்ந்தான். அப்போதுதான் கடிகாரத்திலும் போனிலும் வேறு வேறு நேரம் இருப்பதைப் பார்த்து அம்மாவின் சேட்டை என்று புரிந்து சரிசெய்துகொண்டான். ஆனால் அவனுக்கு அன்று எல்லாம் ஒரு மணிநேரம் முன்னதாகவே முடிந்துவிட மாலையிலும் விளையாட்டு, நடை என்று கொஞ்சம் நேரம் செலவிட்டான்.

  இப்போது அந்த ஒருமணிநேரம் எங்கே வந்தது? எங்கே போச்சு? எதுவுமே ஆகவில்லை சரிதானே.

  இதேதான் நடக்கிறது பகலொளி சேமிப்பு நேரம் எனப்படும் daylight saving time போது. ஆறு ஏழு மாதங்கள் தள்ளி …
@kaalpandhu ஒரு வேடிக்கையான போட்டி வைத்தார்.

இந்தத் தளத்தில் மேல் விவரங்கள் உள்ளன
http://kaalpandhu.tumblr.com/post/53088124709

போட்டியில் பங்கேற்று பதிவு செய்தது.

இங்கே.