முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாண்புமிகு முதல்வருக்கு ஓர் கோரிக்கை மடல்

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,



பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! தங்கள் பிறந்த நாளுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்திருப்பார்கள். நான் வாழ்த்துக்களுடன் ஒரு சில கோரிக்கைகளையும் தங்கள் முன் வைக்கவிழைகிறேன். தமிழ் கூறும் நல்லுலகம், நடுவண் அரசிடம் போராடி தமிழை செம்மொழி ஆக்கியமைக்காக உங்களை என்றென்றும் வாழ்வாங்கு வாழ்த்தும்.

மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ், இணையத்தில் ஓரளவு வளர்ந்தே வருகிறது. மொழி சீர்திருத்தம் கொண்டு வந்து சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர வாயப்பு கிடைத்தது. இன்று நாம் அடுத்த கட்ட சீர்திருத்தமும் தனித்தமிழ் வளர்ச்சியும் தூண்டவேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழ் பெரும் தேக்க நிலை பெற்று இருக்கிறது.

இணையத்திலும் அறிவியலிலும் அதே வேகத்திற்கு மொழி ஈடுகொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. அவ்வாறு இல்லாத மொழிகள் ஆங்கில ஆதிக்கத்தால் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இதை நிர்வாக ரீதியில் அணுகுதற்கான வழிமுறையோ, செயல்முறையோ அல்லது அதிலுள்ள சிக்கல்களையோ அறியும் அளவிற்கு எனக்கு வயதுமில்லை அனுபவமும் இல்லை. கொச்சையான நேரிடையான மொழியில் சொல்லி விடுகிறேன். இதோ எனது கோரிக்கைகள்;

1. தமிழ் இணைய பல்கலைக்கழகமென்னும் தங்கச்சுரங்கம் ஒன்று தேவையில்லா அலங்காரங்களோடு கீழ்நிலை வடிவமைப்புகளோடு உள்ளது. இதை தொழில் நுட்ப ஆர்வலர் கொண்டு செப்பனிட வேண்டும்.

2. இதை முழுமையாக ஒருங்குறியில் மாற்றினால் பல்துறை தேடலுக்கும் பெருமளவில் பயன்படும். தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் தேடும் பலரும் இதனால் பயன்பெறுவர்.

3. இதே பல்கலை கழகத்தில் 100 ரூபாய்க்கு 1-6 வகுப்புவரை பாடங்களுக்கான குறுந்தகடு விற்கிறது. எவ்வளவோ விஷயத்திற்கு மானியம் வழங்கும் அரசு இதையும் இலவசமாக தரவிறக்க வழி தர வேண்டும்.

4. தமிழ்ப்படுத்தும் ஆர்வலர் பலரும் சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார்கள். ஒரு கட்டமைக்கப்பட்ட நிர்வாக வழிமுறையில்லாமல் தமிழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழ்ப்படுத்தபட்டுள்ளதா என்பதை அறிவதற்கு கூட வழி இல்லை. சொற்பரிந்துறைகளை இற்றைப்படுத்துவதற்கும் அதற்கான வழிமுறைகளையும் உருவாக்கி இதே இணையப்பல்கலைகழகத்தின் வாசலை திறந்து வைக்க வேண்டுகிறேன்.

5. இணைய பரப்பில் தன் கைக்காசையும் நேரத்தையும் போட்டு தமிழ் வளர்க்கும் மென்பொறியாளர்களுக்கும், சாதித்திருக்கும் நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்க வேண்டும். இவர்களுக்கு தேவை தமிழக அரசின் ஆதரவு மட்டுமே.

6. ஒருங்குறிக்கு திறந்த ஆதரவைக் கொடுத்து ஒருங்குறி அடிப்படை தளங்களுக்கு தமிழக அரசாங்கத்தின் தரச்சான்று கொடுக்கலாம். இதன் மூலம் இன்று தற்குறியாகத்திரியும் பல தமிழ் பத்திரிகைகளையும் ஒருங்குறிக்கு மாற்ற முடியும்.

7. வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும் தங்கள் பிள்ளைகளும் தமிழ் கற்கும் ஆர்வமிருப்பது ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கான
எளிதான வழிமுறைகளோ அடுக்கு முறையில் பரீட்சைகளோ இல்லை. இந்தி பிரச்சார சபா நடத்தும் தனிப்பட்ட மொழி கற்றுத் தேறும் வகையில் தனிப்பட்ட பரீட்சைகளை உருவாக்கி
கற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும். இதை இணைய வழி செய்வது சுலபம் மற்றுமல்ல இலவசமாகவே கொடுக்க முடியும்.

8. நமது அண்டை நாடுகளிலும் தமிழ் புழக்கம் இருப்பதால் நாடு தாண்டி தமிழ் வளர்ச்சிக்கான கூட்டு முயற்சிகளில் நாம் எந்த அளவுகளில் ஈடுபடுகிறோம் என்று தெரியவில்லை.
இதிலெல்லாம் தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறையின் முனைப்பும் வழிகாட்டுதலும் இருக்கவேண்டும்.

9. அறிவியல் தமிழில் அனைத்து பல்கலைகழங்களின் பங்களிப்பும் இருத்தல் அவசியமாக்க வேண்டும். இதை இணையத்தில் திறந்த முறையில் செயல்படுத்துவது அவசியம். தமிழில் புது முயற்சி செய்யும் மாணவர்களுக்கும் அவர்களின் செயற்றிட்டங்களுக்கும்(project) கூடுதல் மதிப்பெண் கொடுத்து ஊக்குவிக்கலாம்.

மேற்கூறிய அனைத்தும் நான் அவதானித்தை வரை எனக்கு தோன்றிய கோரிக்கைகள் மட்டுமே. இதன் பின் ஒப்பமிடும் பதிவர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு ஆவனசெய்யுமாறு வேண்டுகிறேன்.

பணிவன்புடன்
சத்தியா.

கருத்துகள்

வெட்டிப்பயல் இவ்வாறு கூறியுள்ளார்…
நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

இந்த வாரமும் கலக்கல் தான்...
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
கோரிக்கைகளை வழிமொழிகிறேன்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. முதல்வரின் கவனத்திற்கு சென்றால், நல்லது நடக்க வாய்ப்புள்ளது

அன்புடன்
இராசகோபால்
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சத்யா.. நல்ல யோசனைகளை முன்வைத்திருக்கிறீர்கள்.. முதல்வர் கவனிப்பார் என்று நம்புவோம்..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Good suggestion and hope that the people concerned will place this request before the Chief Minister for doing the needful
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல யோசனைகள்....முதல்வரின் முகவரிக்கு அனுப்பவும்...
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கோரிக்கைகள், "உங்கள் முயற்சி திருவினையாக்கும்"
மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவரே !

உங்கள் கோரிக்கைகள் நம் அனைவரின் எண்ணங்களையும் எதிரொலிக்கிறது. ஆயிரம் பிறைகள் கண்ட தமிழர் தலைவர் இதனை கண்ணுற்றால் நிச்சயம் நம் எண்ணங்கள் ஈடேறும்.
வல்லிசிம்ஹன் இவ்வாறு கூறியுள்ளார்…
தெளிவான கருத்துகளை முன் வைத்து இருக்கிறீர்கள்.

பயன் கிடைத்தால் அனைவருக்கும் நல்லது.
நட்சத்திர வாழ்த்துக்கள்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வெட்டிபயல், சிவபாலன், rajagopal, பொன்ஸ், குசும்பன், மணியன், வல்லியம்மா, செந்தழலாரே,
வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி!!

வேறு பல யோசனைகளையும் அளிக்க வேண்டுகிறேன்.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
என்னடா சின்னச் சின்ன இடுகைகள் போடும் சத்தியா பெரிசா எழுதி இருக்காரேன்னு பார்த்தேன்..நட்சத்திர இடுகையா..வலைப்பதியத் தொடங்கி குறுகிய காலத்தில் நட்சத்திரக் கவனம் பெறுவதற்கு வாழ்த்துக்கள்.

இந்தக் கடிதத்தில் என் கையெழுத்தையும் சேர்த்துக் கொள்ளவும் :)

முதல்வருக்கு நான் எழுதிய மடலைப் பார்க்க - http://blog.ravidreams.net/?p=172
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ரவி,யாராவது உண்மையாகவே ஏதாவது மின்மடல் முகவரியோ, தொடர்போ கொடுத்தா அனுப்பி வைத்துவிடுவேன். நீங்களும் இந்த மாதிரி பதிவு போட்டிருக்கீங்களா ;-)
great minds... சரி.. சரி...
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
மணியான யோசனைகள். ஓட்டு மொத்த தமிழினத்தின் தலைவராக அறியப்படும் கலைஞர் இதனை செவிமடுக்கவும், நிறைவேற்ற முயற்சிக்கவும் அவரது கவனத்திற்கு இதனை கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
அறிஞர். அ இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழின் மீது பற்று கொண்ட இந்த முதல்வரே செய்யாட்டி பிறகு யார் தான் செய்வாங்க?
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழூற்று மாஹிர்,
வாங்க ;-) பாப்போம் யாராவது செய்யறாங்களான்னு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...