முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிடித்த இணையப்பக்கத்தை சேமித்து வைப்பது எப்படி?

மூன்றே படிகள் தான்.

1. இங்கு போய் ஒரு பயனர்கணக்கை உருவாக்குங்கள்.
2. அங்கு உங்கள் இணைய உலாவி( IE, Firefox ) எதுவோ அதுக்கு ஏற்றார்போல் பொத்தானை உங்கள் உலாவியில் இணைத்துக்கொள்ள நீட்சி( extension) கொடுப்பார்கள் அதை நிறுவிக்கொள்ளுங்கள்.உங்கள் உலாவியில் buttonகளும் menuவும் வந்துவிடும்

step -2 ஐ நீங்கள் உபயோகப்படுத்தும் அனைத்து கணினிகளிலிலும் செய்துவிடுங்கள்.
ஆச்சா, அடுத்து

3. எப்படி உபயோகிப்பது...


இப்போ ஒரு பிடித்த பக்கத்தை படிக்கிறீர்கள். படித்தவுடன், இந்த tag பொத்தானை
ஒரு அமுக்...

அடுத்து இப்படி ஒரு சின்ன சன்னல் வரும்.

அதில் நீங்கள் உங்களுக்கு ஏற்றமாதிரி tag போட்டு வைத்துக்கொள்ளலாம்.

இதில் நான் do not shareஐ check பண்ணி அடுத்தவர் நான் என்ன சேமித்திருக்கிறேன் என்று பார்க்காமல் இருக்க வழி பண்ணி இருக்கிறேன்.
உங்கள் நண்பர்களோடு பார்த்து பகிர default ஆக விட்டுவிட்டால் அடுத்தவர்களும் உங்களுடையதை பார்த்துக்கொள்ளலாம்.

என்ன பயன்
1. tagகள் மக்கள் எதை படிக்கிறார்கள் என்று trend analysis பண்ண உதவும்
2. உங்களுக்கேற்ற வகையில் வகைப்படுத்தி வைத்துகொள்ள.
3. நண்பர்களுடன் பகிர உங்களுக்குள்ளே குழுவாக பகிர்ந்து கொள்ள
4. rss ஓடையாக மாற்றி மற்றவர்களுடன் மொத்தமாகவோ tagவாரியாகவோ பகிர்ந்துகொள்ளலாம்
5. வீட்டில், வெளியில் எங்கும் உங்களுக்கான தொடுப்புகள் உங்களுடனே இருக்கும்.
6. del.icio.us போல ஏகப்பட்ட புத்தகக்குறிப்பான் பக்கங்கள் இருக்கின்றன. சில பதிவுகளில் இந்த மாதிரி
குட்டி குட்டி பொத்தான் பார்த்து இருப்பீர்கள். உங்களுடைய உலவி பொத்தானைக்கூட அமுக்கவேண்டாம் உங்களுடைய குறிப்பானின் பொத்தான் இருந்தால் அதை அழுத்தி இதே வசதிகளை பெறலாம்.

தொடர்புடைய விளக்கப்படம்


தொடர்புடைய ஒரு விவாதம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விசயம் ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. நேற்று தான் இதை நிறுவினேன். ஏற்கனவே இருக்கும் BookMark களையும் அதுவே del.icio.us கணக்கிலே Import செய்து கொள்ளும். இதை சொல்ல வேண்டும் என்றுதான் இந்த பின்னூட்டம். மீண்டும் நன்றி உங்களுக்கு
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
"on line book mark" வசதியாக பயன்படுவதா இது, இப்போது அந்த வலைப்பதிவை அழித்து விட்டாலும் பார்க்க இயலுமா இதில்.

நான் எக்ஸ்புலோரர், பைர்பாக்சில் உள்ள ஆப் லைன் பிரவ்சிங் வசதியை பயன்படுத்துவேன், சமிப காலமாக ஒர்பிட் என்ற ஒரு மென் பொருளையும் பயன் படுத்துகிறேன்.இதில் அந்த வலைபதிவர் அந்த பதிவை எடுத்து விட்டாலும் நாம் படிக்க முடியும், நேரடியாக நமது ஹார்ட் டிஸ்க்கில் சேமிக்கபட்டு விடும்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வழிப்போக்கன்,
ஆமாம், மறந்துவிட்டேன்.
நினைவூட்டலுக்கு நன்றி.

வவ்வால்,

வாங்க. தகவலுக்கு நன்றி.
ஆமாம் online book markingஆக பயன்படுத்தவே. மேலும், hard diskல் சேமித்துவைப்பது சமுதாய தேடலுக்கு அவ்வளவாக உதவாது. முக்கியமானது tagging. அதை மறந்துவிடலாகாது. பயன்பாடுகள் வெவ்வேறானவை. மீண்டும் தகவலுக்கு நன்றி
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
என் தெரிவு - Google Bookmarks
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி சத்யா சார். நான் கற்பூரமில்லை; கரிக்கட்டை தான். எனவே தான் இவ்வளவு நேரம் பிடித்தது உங்கள் உரித்த வாழைப்பழப்பதிவைப் புரிந்து என்னுடைய கணினியில் Install செய்து கொள்ள.

நான் எதிர்கொள்ளும் உங்கள் பெயர் கொண்ட எவருக்கும் அடுத்த பத்து வருடத்திற்கு என்னுடைய service உத்தரவாதம். (நல்லவேளையாக என் அலுவலகத்தில் உங்கள் பெயருடன் எவரும் இல்லை என்னிடம் advantage எடுத்துக் கொள்ள).

நீங்கள் செய்திருக்கும் உதவி என்னளவில், என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று இப்போதைக்கு என்னால் சொல்ல முடியவில்லை. நல்விளைவுகள் அனைத்தையும் தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.

Great Help. மீண்டும் நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ரத்னேஷ்,
உங்களுக்கு உபயோகமாய் இருந்ததில் மகிழ்ச்சி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4