முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலவசகொத்தனாருக்கு சமர்ப்பணம் அல்லது படம் காட்டுதல்

நட்சத்திர வாரத்துல எல்லா பதிவையும் தீவிரமான பதிவா போட்டா இவன் தீவரவாதின்னு முத்திரை குத்தீடுவாங்கன்னு தமிழ் பதிவுலகின் மிக மிக முக்கியமான பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இருக்கற கொஞ்சநஞ்ச விஷயத்தையும் ஒரே வாரத்தில எழுத சொல்லீட்டாங்ளேன்னு கடுமையா சிந்தனை பண்ணிக்கிட்டு இருந்தப்போ, சிஷ்யன் தயாராகும் போது குரு தோன்றுவார் அப்படிங்கற மாதிரி இலவசக்கொத்தனார்
இந்த பதிவைப் போட்டார். கொத்தனார், கட்டைவிரலெல்லாம் கேட்கக்கூடாது, சொல்லிட்டேன்!!
அதனால் படம் காட்டறதுன்னு முடிவு பண்ணியாச்சு!!

சிலருக்கு கோடை காலமானால் சுற்றுலா போக வாய்ப்பும் நேரமும் கிடைக்கும். சிலருக்கு பணி நிமித்தம் வேறு இடங்களுக்கு போக வாய்ப்பு கிடைக்கும். அப்படி பணி நிமித்தம் வேறு இடங்களுக்குப் போக வாய்பும்,ஊர் சுற்ற நேரமும் கிடைத்தால்.... நான்தான் அந்த அதிர்ஷ்டசாலி.



சுருக்கமா சொல்லணும்னா, நான் தற்போது வசிக்கும் மாசூசட்ஸ் மாகாண Cape Cod வடகிழக்கு அமரிக்காவின் Goa மாதிரி. குளிர் காலத்தில் மனிதத்தலையை (மிருகத்தலையும் சேர்த்து தான்) காணக்கிடைக்காது. வெய்யில் காலத்துல அமரிக்க மக்கள் மட்டுமில்லாம பல்வேறு நாடுகளிலிருந்தும்(ரீல் சுத்தல, நிசமாத்தேன்) சுற்றுலா வாசிகள் இங்க வந்துடுவாங்க.



மாசூசட்ஸ் மாகாணத்துல விரல் மாதிரி நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு தீபகற்பம்(தீவு!!) தான் இந்த பகுதி. இது ஒரு காலத்தில் நிலத்தோடு சேர்ந்தே இருந்தது. எல்லா பக்கங்களிலும் கடல் சூழ்ந்து ஒரே ஒரு துண்டு பகுதி மட்டும் மாகாணத்தோட ஒட்டிக்கொண்டு இருந்ததை ஒரு பெரிய கால்வாயை வெட்டி இரண்டு பக்க கடலையும் சேர்த்து மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயிரம் ச.கிமீ ( கிட்டதட்ட சென்னை மாநகர அளவு) கொண்ட தீவாகி விட்டது. 115 கடற்கறைகளும், கிட்டதட்ட நிலப்பகுதியில் 50% காடுகளும் ஏரிகளும் நிறைந்தது. மக்கள தொகை; 2 லட்சம்.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் சுற்றுலாவுக்கும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுக்கும், வரலாற்று ஆராய்ச்சியாள்களுக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. வரலாற்றை பொருத்தவரை அமரிக்காவின் ஐரோப்பியாவுக்கு எதிரான Rebel கலாசாரத்திற்கு அடிநாதமாக விளங்கும் நிகழ்வுகள் ஆரம்பித்த இடமாக கருதப்படுகிறது. மேலதிக விவரங்களை இங்கு மற்றும் இங்க பார்க்கலாம்.



சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களை பொருத்தவரை இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் கடல் அரிமானத்தால் இந்த இடம் அழிந்துவிடும் என்கிறார்கள். கடல் சூழ்ந்திருப்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பஞ்சமே இல்லை. கடல்வாழ் உயிரினங்கள் குளிர் காலத்தில் தன் குஞ்சுகுளுவான்களோடு கரீபியன் கடலுக்கு சென்று விடும். கோடை காலத்தில் வட அட்லாண்டிக் பக்கம் வந்துவிடும்.


இவற்றில் முக்கியமானது திமிங்கிலங்கள். குட்டிகள் போட்டு பாலூட்டும் இனத்தைச் சார்ந்த இவை கடல் மிருகமாக கருதப்படுகிறது. வெய்யில் காலத்தில் பிரம்மாண்டமான உருவமுடைய இவை கடலில் விளையாடுவதை பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அதற்கென்றே தனியாக whale watching என்று நடத்துகிறார்கள். ஒரு பெரிய படகில் இரண்டு மணி நேரம் கடலுக்குள் போய் பின்பு நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தால் திமிங்கிலங்கள் விளையாடுவதை பார்க்க முடிகிறது. நான் பார்த்த காட்சிகள் சில.




இங்கு கடற்சிங்கங்களும்(Seal) இளைப்பாறுவதற்கு வரும். Seal watching என்றும் நடத்துகிறார்கள். சுற்றுலாவுக்கு, கடல் உணவு, கடல் சார் விளையாட்டுகளான water skiing, para sailing, boating, fishing, அழகான, ரம்யமான கடற்கரைகளில் சூரியக்குளியல், ஏகப்பட்ட குறுங்காடுகளில் camping, trail walking எனப்படும் இயற்கை நடைப்பயணங்கள், தேசிய பொழுதுபோக்கான Golfing என இரண்டு மூன்று வாரங்கள் தாராளமாக செலவிடலாம். கடற்புரத்தில் அமைந்தள்ள காடுகள் எழில்வாயந்தவை.



கலா ரசிகர்களுக்கும், திருநங்கையருக்கும் Province town என்னும் Capecod ன் விளிம்பு நகரம் ஒரு முக்கியமான இடம். இங்கிலாந்தின் மாற்று கலாசாரமாய் வாழ விரும்பிய Pilgrims கால் பதித்த இடம் இதுவே. மூன்று பக்கமும் கடல், மாலையில் சூரியன் மறைவதைக்காண்பதற்கும், இயற்கை எழிலை படமெடுப்பதற்கும் வரைவதற்கும் இங்கு ஏகப்பட்ட ஓவியர்களை காண முடியும்.

இங்கு வருபவர்களுக்கு நான் பரிந்துரைப்பவை Nobska Light house(இந்த பதிவின் தலைல இருப்பது), whale watching, Nickerson State Park, Provincetown sunset, Clam chowder( ஒருவகை கடல் உணவு)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வடுவூர் குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
வரும் போது சொல்கிறேன்.
இலவசக்கொத்தனார் இவ்வாறு கூறியுள்ளார்…
கேப் காட் போகணும். ரொம்ப நாளா பெண்டிங்கில் இருக்கும் ஒரு திட்டம். பாஸ்டன் வரை வந்து திமிங்கிலம் எல்லாம் பார்த்தாச்சு. நமக்கு கிளாம் சௌடர் எல்லாம் இறங்காது. மற்றபடி ஒரு வார இறுதிக்காவது இங்கு வந்து போக வேணும்.

உங்க லிஸ்டில் மார்த்தாஸ் வின்யார்ட் காணுமே! அதுவும் கேப் காட் பக்கம்தானே. பிரபலங்கள் செல்லும் கோவா இல்லையா அது?


பதிவு ஐடியாவுக்கு இல்லாட்டாலும் தலைப்பு ஐடியாவுக்கு கைவிரலைக் கேட்டே ஆகணும் அப்படின்னு எழுத வந்தா இங்க இருக்கும் முதல் பின்னூட்டத்தில் என்னைப் பற்றிச் சொன்னது உண்மையாகுமோ என்ற சந்தேகம். அதனால் கைவிரல் எல்லாம் வேண்டாம். :))
இலவசக்கொத்தனார் இவ்வாறு கூறியுள்ளார்…
//மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயிரம் ச.கிமீ ( கிட்டதட்ட சென்னை மாநகர அளவு) கொண்ட தீவாகி விட்டது. 115 கடற்கறைகளும், கிட்டதட்ட நிலப்பகுதியில் 50% காடுகளும் ஏரிகளும் நிறைந்தது. மக்கள தொகை; 2 லட்சம்.//

//With an estimated population of 7.06 million (2007),[2] the 368-year-old city is the 34th largest metropolitan area in the world.

According to http://en.wikipedia.org/wiki/Chennai//

ரெண்டு லட்சம் எங்க, 70 லட்சம் எங்க? தாங்காதுடா சாமி!!!
வல்லிசிம்ஹன் இவ்வாறு கூறியுள்ளார்…
கேப் காட் பற்றின பதிவுக்கு நன்றி.
அடுத்ததடவை வந்தால் பார்க்கிறோம்.
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
சத்யா அடுத்த பதிவு போடுறதுக்கு நான் ஒரு சூப்பர் ஐடியா கொடுக்கிறேன்.
அந்த மூனாவது, நாலாவது, ஐந்தாவது போட்டவுல இருக்குற "போட்" வித்தியாசமா
இருக்கு அதுல ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்து அந்த அனுபவத்த பத்தி ஒரு பதிவு போட்டுவிடுங்க...
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி,
உங்களை போன்றோறுக்கு விளக்கம் சொல்வது வீண். உங்கள் பின்னூட்டம் குப்பைத்தொட்டிக்கு :)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வடுவூர்,
வருகைக்கு நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
கொத்தனார்,
எல்லாரும் சொன்னாங்க, மறுமொழி மட்டுறுத்தி போடுங்கன்னு. நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் நம்பிக்கை வைக்கற ஆள். பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத பதிவுகளிலும் தங்கள் திருவிளையாடலை காட்டி நம்பிக்கையை தகர்கறாங்க. அனாவசியத்துக்கு உங்களுக்கு திட்டு வாங்கி குடுத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன்
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
\\நமக்கு கிளாம் சௌடர் எல்லாம் இறங்காது\\
இங்கேயும் அப்படியே. இங்க எல்லாரும் சாப்பிட்டா விசேஷமானதுன்னு சொல்லறாங்க. ருசிக்கு நான் உத்திரவாதம் தரமுடியாது :-)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வல்லியம்மா,
கட்டாயம் செய்யுங்கள். மே மாத்திலுருந்து அக்டோபர் வரை நல்ல நேரம்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
குசும்பன்,
பேர் சரியாத்தான் இருக்கு. அந்த போட்ல போகத்தான் முடியும். திரும்பி வரமுடியாது. அப்புறம் எப்படி பதிவெழுதறது...
தென்றல் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள தகவல்ங்க! இந்த முறையாவது போகணும் திட்டம் இருக்கு... பார்க்கலாம்!

/ரொம்ப நாளா பெண்டிங்கில் இருக்கும் ஒரு திட்டம். /

வர்றப்ப... சொல்லுங்க கொத்ஸ்! ;)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
தென்றல். நன்றி,
எல்லாரும் வரும் போது சொல்லுங்க. முடிந்தால் சந்திக்கலாம்.
ACE !! இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா தான் இருக்கு உங்க படமெல்லாம் :D :D

கிழக்கு கரை இல்லனா மேற்கு கரையோரம் இருந்தா என்சாயோ என்சாய் தான் போலிருக்கு :D :D..

எங்கள மாதிரி தென் - மத்திய பகுதில இருக்கவங்க படத்துல பாத்து தான் சந்தோஷ பட்டுகனும்.. :(((
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சிங்கம்,
என்ன இப்படி வருதப்படுறீங்க. சிங்கமே வருத்தப்பட்டா எப்படி? ஃப்ளோரிட பக்கத்துல தானே. ஒரு நடை போய்டுவாங்க.
ACE !! இவ்வாறு கூறியுள்ளார்…
நம்ம இருக்கறது டெக்ஸாஸ்.. south-central. இத தான் தென் - மத்தியனு மாங்கா மாதிரி மொழிபெயர்ப்பு செஞ்சேன்.. ஹி ஹி ஹி.. florida ரொம்பவே தூரம் தான்.. பறந்தாலே 3 மணி நேரம் :((
பிச்சைக்காரன்வாந்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நம்ம சரக்க பத்தி எழுதுப்பா.

http://www.capecodchips.com/
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
பிச்சை ஐயா,
இங்கு தான் உள்ளது அந்த தொழிற்சாலை. திங்கள் முதல் வெள்ளி வரை வாசல் திறந்தே இருக்கும். ஒரு மணி நேரம் சுற்றக் காண்பித்துவிட்டு, ஒரு பாக்கெட் சிப்ஸ் தருவார்கள்..
போதுமா...
பிச்சைக்காரன்வாந்தி இவ்வாறு கூறியுள்ளார்…
அட இன்னாப்பா நீயி நமக்கு உருளைக்கிழங்கு வறுவல் என்றால் கொல்லை பிரியம்.

//ஒரு பாக்கெட் சிப்ஸ் தருவார்கள்..
போதுமா... //

அப்ப நான் வரல்ல !
சேதுக்கரசி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு நண்பியும் அவள் கணவரும் கேப் காடில் உள்ள வுட்ஸ் ஹோல் ஓஷனோகிராபிக் இன்ஸ்டிடியூட்டில் (Woods Hole Oceanographic Institute) பணிபுரிகின்றனர். இப்போது அவர்களோட தொடர்பில்லை. அவர்கள் பரிந்துரையில் முதன்முதலில் கேப் காட் போய் whale watching செய்தோம், இதற்காக அந்தக் கடைசியில் இருக்கும் Provincetown வரை சென்று! போகும் வழியிலேயே ஸ்பீடிங் டிக்கெட். (Truro எல்லாம் காத்து வாங்கற ஊர் போலருக்கு, நம்மளைப் போட்டு தீட்டிடறாங்க! அப்புறம் அதுக்கு இன்னொரு முறை அங்கே போய் கோர்ட்டில் ஆஜர் ஆகி முழுப் பணமும் அழாமல் ஓரளவு தள்ளுபடி வாங்கினோம்!) கேப் காடில் பல பகுதிகள் பார்த்ததுண்டு, மார்த்தாஸ் வின்யார்ட் உட்பட. யப்பா.. என்னா விலைவாசி மார்த்தாஸ் வின்யார்டில் :-( வருடந்தோறும் Falmouth போவதுண்டு... கடற்கரைக்கு. (கேப் காட் பத்தி ஒரு பதிவு பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.. ஹிஹி)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4