எந்தத் துறையிலும் சாதிக்க ஆழமான அறிவு பெற்றிருக்க வேண்டியது அடிப்படை விஷயம். இன்றைய இந்திய மென்பொருள் மற்றும் தொழில் நுட்பச்சூழலை எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு பத்து வருடம் அனுபவமிக்க மென்பொறியாளரை காண்பியுங்கள் பார்ப்போம். ஒருவரும் கிடைக்க மாட்டார். ஐந்து வருடம் ஆனவுடனே மேலாளர் பதவிக்கு ஆசைப் படவும், மற்றவரை கட்டி மேய்க்க வேண்டிய பணியையும் விரும்புகின்றனர்.
மென்பொருள் சேவை நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் பெரும் தலைவலி நிரந்தரமான காலியிடங்கள்.
இந்திய மென்பொருள் துறை ஒரு சேவை சார்ந்த துறையாய் இருப்பதால், இதில் நம்மவர்கள் மேலோங்கி நிற்பதற்கு செயல் முறை (process) திறமை அதிக அளவில் தேவைப்படுகிறது. அதாவது மென்பொருள் பொறியியலில் (இது மென்பொருள் நுட்ப அறிவியல் அல்ல) மிக அதிக அளவில் ஆட்களின் தேவை இருக்கிறது. இன்று வளர்ச்சி பெருகும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமை தான். ஒரு ICICI வங்கியின் கிளையிலிருக்கும் மேலாளரையும், SBI வங்கி மேலாளரையும் ஒப்பு நோக்குங்கள், நான் சொல்ல வருவது புரியும்.
எந்த துறையிலும் நாம் நிலைத்து நிற்பதற்கு நமக்கு முதலில் நுட்பம் மற்றும துறை சார்ந்த அறிவில் முன்னேற்றம் இல்லையெனில் அதில் விழப்போவது உறுதி. இதை உணராமல் இன்று பலர் இரண்டு வருடத்திற்கு ஒரு பதவி உயர்வு, அதிக வருமானம், அலுவலகம் என்று மாறுவதைக் காணும் போது போகும் பாதை சரிதானா என்று யோசிக்க வைக்கிறது. முதலில் கைவசத்திறமை, பின்பு பலன்கள் என்றில்லாமல் முதலில் பலன் பின்பு மற்றவை அதற்காக தன் சுயமுன்னேற்றம், நுட்ப அறிவு, போராடி சாதிக்க வேண்டிய ஆற்றல் என்று எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மை அதிர வைக்கிறது. அதிக பணம், சொகுசான வாழ்வென்பது அனைவரின் கனவாக இருப்பதில் எந்த தவறும இல்லை. ஆனால் அதை இயக்குவது நம் சொந்த திறமையாக இருக்கவேண்டுமே அன்றி, peer pressureஆக இருக்கக்கூடாது. நிறுவனங்களும் ஒருவகையில் இதற்கு காரணம். பெறும் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை தக்கவைக்க சமரசங்களை செய்ய முனையும் போது தனி நபர்களின் பேராசையை பயன்படுத்திக்கொள்கின்றன.
அடுத்த கட்டத்தில் நுழையும் வணிகத்தை முன்னேற்ற, அடுத்த 5-10 ஆண்டுகளில் இத்துறைகள் பெரும் மாற்றத்தை(அது மேல்நோக்கியோ,கீழ்நோக்கியோ) காணும், அப்போது அந்த நேரத்தில் காசுக்கு நிரலடிக்கும், தரக்கட்டுபாடு செய்யும் மேலாளர்களை விட துறை சார்ந்த ஞானமும், அனுபவமும் உள்ளவர்கள், பெரிய அளவில் தேவைப்படுவர். அப்போது இதே நிறுவனங்கள் இந்த மாதிரி நுனிப்புல் மேய்பவர்களை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பவும் தயங்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்வது நலம்.
இப்போது இதைப்பற்றிய விழிப்புணர்வு நிறுவன அளவில் இருந்தாலும் தனி நபர் அளவில் வரவில்லை. நாம் கடந்த இருபத்தைந்து வருடங்களில் சாதித்திருக்க வேண்டியது இன்னும் அதிகம். இங்கே பாருங்கள் நாம் சாதிக்கும் வேகத்தை. சராசரியாக 10 லட்சம் மக்களுக்கு 7 காப்புரிமை கோரப்படுகிறது. தொழில்நுட்ப அளவில் நாம் எந்த அளவில் பின்தங்கி இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது. இந்த ஆமை வேகத்தால் நாம் இன்னும் இன்னும் அடுத்த நாட்டு தொழில்நுட்பத்திற்கு காசு கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலில் சேவைக்காக outsourcing செய்து வந்தார்கள். பின்பு அந்த நிறுவனங்கள் தாங்களே கடையை விரித்தாலும் சிறு நிறவனங்களால் நிலைக்க முடியவில்லை. காரணம் அதிக சம்பளம் மற்றும் கவலைக்குறிய நமது உள்கட்டமைப்பகள். இதை பற்றிய ஆய்வறிக்கையை இங்கு காணுங்கள். இதன் கருப்பொருள் இந்த வரியில அடங்கி இருக்கிறது 'numerous other studies, has clearly pointed to an imminent paucity of talent and infrastructure over the next five years.'
பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தால் அது தன் வெளிபிம்பத்திற்கு இழுக்கு என நினைப்போர் பலர். அலுவலக வாழ்க்கை மேற்கொள்வோர் மட்டுமன்றி பிற்காலத்தில் சுயதொழில் முனைவோருக்கும் அலுவலகம் ஒரு சிறு உலகம். அதிலுள்ள சட்டதிட்டங்கள், உருவாகிய விதம், வளர்ச்சியை, வீழ்ச்சியை சமாளிக்கும் திறன், தனித்தன்மையைக் கட்டிக்காக்கும் விதம், பண்பாடு, மேலாண்மையின் நோக்கம், வழிமுறை, தொலைநோக்கு, அடிநாதமாக இருக்கும் பண்புகள் என ஏகப்பட்ட விஷயங்களை புரிந்துணர முயலுவது சிறப்பு. அதே போல் நாம் பணிபுரியும் சேவைத்தளத்திலும் இயங்கும் கட்டமைப்பு, பின்னணியில் உள்ள வணிக விஷயங்கள், துறை சேர்ந்த தொலைநோக்கு, விஷய ஞானம் என ஒரு துறையில் குறைந்தது பத்து வருட அனுபவமில்லாமல், இரண்டு மூன்று பொருளாதார சுழற்சியை பார்க்காமல் ஒரு Delivery manager, Business manager என்று இன்றைய சேவை நிறுவனங்களில் பதவி அளிப்பதெல்லாம் " 21 நாளில் ஜாவா" படித்தவனை ஜாவா புலி என்று கூறுவதை போலத்தான் இருக்கிறது

கருத்துகள்
ஆனா பெரும்பாலும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவரை விட வேறு நிறுவனத்திலிருந்து வருபவருக்கு அதிக சம்பளமும், ப்ரோமஷனும் அந்த நிறுவனம் கொடுப்பது அங்கே வேலை செய்பவரை பெரிதும் பாதிக்கவே செய்கிறது.
கடமையை செய் பலனை எதிர்பாராதேனு இருக்க முடியலையே :-((
வெட்டி,
நீங்க சொல்வதைத் தான் அவரும் நிறுவனங்கள் உருவாக்கும் peer pressure என்று சொல்கிறார்னு நினைக்கிறேன்...
வருகைக்கு நன்றி.
Thanks for your feedback. will try to keep up!!
-Sathia
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
\\ஆனா பெரும்பாலும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவரை விட வேறு நிறுவனத்திலிருந்து வருபவருக்கு அதிக சம்பளமும், ப்ரோமஷனும் அந்த நிறுவனம் கொடுப்பது அங்கே வேலை செய்பவரை பெரிதும் பாதிக்கவே செய்கிறது\\
ஒரு விஷயம் இதில் நீங்கள் கவனிக்கவேண்டும். அப்படி வருபவரை அடுத்த இரண்டு அப்ரைசல் சைக்கிளில் தட்டி, average நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். கொஞ்சம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்யும். இது நிறுவனங்கள் உருவாக்கும் peer pressure. நீ இல்லைன்னா எனக்கு வேற ஆள் இருக்கான்னு காமிக்கறதுக்கும் projectகளின் அவசர தேவைக்கும் பயன்படுத்தும் வழி இருக்கறவன விட அதிக சம்பளம் கொடுக்கறது.
வருகைக்கு நன்றி.தொடரும் ஆதரவுக்கும் நன்றி ;-)
நட்சத்திர பதிவிற்காக என் வாழ்த்துக்கள்
(sorry i am not having tamil typing software)
21 நாளில் ஜாவா" படித்தவனை ஜாவா புலி என்று கூறுவதை போலத்தான் இருக்கிறது.
continue u r writings.
Thanks,
''development of a Complete software?''
What do you mean by this?
I think what meaning is end to end product development. Yes there are a few. Check Tejasnetworks.com I will write about this sometime.
For tamil typing http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
Use Tamil 99 very easy to use. takes couple of days to learn but after that it is easy.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து எழுத முயல்கிறேன்.