ஒரு வாரமாக உங்கள் எல்லோரையும் படுத்தி வந்தது ஒரு வழியாக இன்று முடிவுக்கு வருகிறது. எல்லா நாளும் வலைபதிய வேண்டும் என்பது என்னைப்பொருத்த அளவில் சவாலாகவே இருந்தது. எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிட்டு சரிசெய்து குறிப்பெல்லாம் எடுத்துக்கொண்டு எழுத தொடங்கும் சில நாட்களிலேயே நான் எழுத நினைத்ததை வேறு சிலர் எழுதியதும் நடந்தது அடுத்த விஷயம் பின்னூட்டம் வந்து இருந்தால் பார்த்து பதில் சொன்னது. இவ்வளவு நாள் நான் கவலைப்படாமல் இருந்தது அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் இடாதது. எப்போதாவது ஒரு பின்னூட்டம் போடுவதோடு சரி. இப்போது புரிகிறது எந்த அளவுக்கு பின்னூட்டம் இடுவது அடுத்தவரை உற்சாகப்படுத்துகிறது என்று.
தமிழ்மணத்தில் கடந்த ஒரு வாரத்தில் வந்த மொத்த இடுகைகள் ஆயிரத்தை தாண்டும் இதில் என்னுடைய ஏழே ஏழை மட்டும் தலைப்பில் நிலைக்க வைத்து மதிப்பு கொடுக்கும் அளவுக்கு தரமானதாக இருந்ததா என்று தெரியவில்லை. நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மணத்துக்கும் உற்சாகம் கொடுத்த சக பதிவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.

கருத்துகள்
பதிவர்களுக்கு இப்படி ஒரு கூடுதல் வெளிச்சம் கொடுக்கும் தமிழ்மணத்தைத்தான்
பாராட்டணும் நாமெல்லாம்.
\\பதிவர்களுக்கு இப்படி ஒரு கூடுதல் வெளிச்சம் கொடுக்கும் தமிழ்மணத்தைத்தான்
பாராட்டணும் நாமெல்லாம். \\
கட்டாயமா.
anyhow belated wishes sathiya
இலவச கொத்தானர் பெயர் போட்டு இருந்த பதிவை மட்டும் பார்த்தேன், படங்கள் அருமை....