1.நண்பன் கூப்பிட்டு அவசரத் தேவையென 24 மணி நேரத்தில் என் சேமிப்பு முழுதையும் கேட்டால் கொடுப்பேனா?
2. பொய் சொல்லாமல் சோம்பேறித்தனத்தால் காலதாமதமானதை சொல்வேனா?
3.ஞானம் அதிகமில்லை, சரக்கு இவ்வளவு தான்னு உண்மையச் சொல்லி வேலைக் கேட்பேனா?
4.Treat என்ற பெயரில் ஓசிச்சாப்பாடுக்கு அலையாமல் இருப்பேனா?
5.ஒரு வருடத்திலாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவேனா?
6.ஒரு நாளாவது எடுத்த வேலையை முழுவதுமாய் செய்து முடிப்பேனா?
7.ஒரு விளையாட்டையாவது ஒழுங்காய் கற்பேனா?
8.அலுவலக சந்திப்புகளில் சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு அசட்டு சிரிப்பு சிரிக்காமல் இருப்பேனா?
9.மீட்டிங்குகளில் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடையை தடுமாறாமல் சொல்வேனா?
10.வீட்டிலிருந்தும் ஒரு நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பேனா?
11.ஒரு தடவையாவது அலுவலகத்திற்கு பொய் சொல்லி லீவு போடுவேனா?
12.நாளை பிள்ளை வளர்ந்து, சொல்லும் புதுமைக்கருத்துகளை தடுக்காமல் ஏற்பேனா?
13.மற்றவரிடம் பேசும் பொழுது எல்லாம் தெரிந்த மாதிரி நடிக்காமல் இருப்பேனா?
14.தெரிந்தவர்களிடம் பேசும் போது, என் எண்ணம் தான் உயர்ந்ததென மனதில் தோன்றாமல் இருப்பேனா?
15.காசும், பதவியும் வந்தாலும் ஆணவமில்லாமல் இருப்பேனா?
16.ஒரு நாலுப்பேருக்காவது உபயோகமாய், நல்ல நண்பனாய் இருப்பேனா?
17.என் பிள்ளையை தமிழ் படிக்கவைப்பேனா?
18.பிற்காலத்திலாவது கூலி வேலையை விட்டுவிட்டு மனதிற்கு பிடித்த எம் முன்னோர் செய்த விவசாயம் செய்வேனா?
19.ஊருக்கு உபதேசிப்பதை விட்டு விட்டு உருப்படியாய் இருப்பேனா?
20. வெட்டி அரட்டை, வீண்ணாண இணையமேயல் செய்யாமல் வாங்கும் கூலிக்கு வேலை செய்து கொடுப்பேனா?

கருத்துகள்
இது என்ன மொழி? French, Spanish, German மூணுத்துலையும் மொழிபெயர்த்து பாத்துட்டேன்.
தாரளமா போடுங்க ரவி!!
//11.ஒரு தடவையாவது அலுவலகத்திற்கு பொய் சொல்லி லீவு போடுவேனா?//
பொய் சொல்லி லீவு போட்டால், அது ஒரு தனி சுகம் தான். இப்படி உண்மையைச் சொல்லி லீவு போடுரீங்களே, உங்களுக்கே இது அடுக்குமா?
இது என்ன மொழி? Fரென்ச், ஸ்பனிஷ், Gஎர்மன் மூணுத்துலையும் மொழிபெயர்த்து பாத்துட்டேன். //
ROTFL.. என்னங்..னா? அவ்வளவு பேமஸா நீங்க?
என்னிடமும் இந்த மாதிரி னா? கேள்விகள் நிறைய இருக்கு...
அப்புறம் உங்களை நான் எட்டு போட அழைக்கிறேன். உங்களை நீங்களே நினைத்து பெருமைப் படும் 8 விஷயங்கள் எழுதவும். நன்றி..
முதல்ல வந்த ரோத்ரிகோ போர்டுகீஸ் பேசுறார்னு நினைக்கிறேன்.. அதில் மொழிபெயர்த்தால் புரியுறாப்புல இருக்கு... உங்க செல்வாக்க பயன்படுத்தி இலவசமாவே அந்த டீசர்ட்ட வாங்கிக் கொடுத்தீங்கன்னா.. ;)
//வீட்டுக்கு வீடு வாசப்படியா.. ;-)//
யேதான்........
//உங்களை நீங்களே நினைத்து
பெருமைப் படும் 8 விஷயங்கள் எழுதவும்//
இந்த வம்பே வேண்டாம் அப்பிடினுதான பின்னூட்டம் போடலைன்னு சொன்ன அப்புறம் கூட மாட்டி விடுறீங்களே இது ஞாயமா?
பொன்ஸ்,
போர்த்துகீசிய மொழினு சொன்னதுக்கு பரிகாரமா, 2 T shirt சொல்லி இருக்கேன். வந்து சேர்ந்த அப்புறம் சொல்லுங்க ;-)
உங்களின் பதிவை வாசித்ததும், நீங்கள் குறிப்பிட்டுள்ள பல கருத்துக்களில் என்னையே நான் நிலைக்கண்ணாடியில் பார்ப்பது போன்று உணர்ந்தேன்.
குறிப்பாக கீழுள்ளவை எனக்கு மிகவும் பொருந்தும்.
1. பொய் சொல்லாமல் சோம்பேறித்தனத்தால் காலதாமதமானதை சொல்வேனா?
2.ஞானம் அதிகமில்லை, சரக்கு இவ்வளவு தான்னு உண்மையச் சொல்லி வேலைக் கேட்பேனா?
3. ஒரு வருடத்திலாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவேனா?
4.அலுவலக சந்திப்புகளில் சிரிப்பே வராத ஜோக்குகளுக்கு அசட்டு சிரிப்பு சிரிக்காமல் இருப்பேனா?