முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எச்சரிக்கை:இது ஒரு வெட்டி பதிவு

எனக்கும் சடப்பாண்டிக்கும் பலகால நட்பு. சடப்பாண்டி சென்னைத்தமிழ் காதலன். நான் அவன் காலைவாருவதும், அவன் என்னை தாக்குவதும், கருணாநிதி ராம்தாஸ் மாதிரி அப்படி ஒரு அதீத நட்பு. அரசியல் மீட்டிங்குகளில் திடீரென கேள்விப்படும் விஷயங்களில் சந்தேகம் வந்துவிடும் நம்ம சடபாண்டிக்கு, அல்லது ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்டு நம்மை மடக்குவதில் சடபாண்டிக்கு அலாதி இன்பம்.

'' நைனா, புயநானூறுன்னா இன்னாப்பா? ''என்பான், அவனுக்கு விளக்கி முடிப்பதிற்குள் நமக்கு தொண்டைத்தண்ணி வற்றிவிடும்.

எது சரி பாணி கேள்விகள் அதிகம் அவனிடமிருந்து வரும். கத்திரிக்காய் கரீட்டா, கத்தரிக்காய் கரீட்டா என்பான்.சேட்டை சேட்டுன்னு கூப்பிடணுமா, சேடுன்னு கூப்பிடணுமான்னான் இன்னொரு நாளைக்கு, தாகம் எடுக்குமா, தாகம் அடிக்குமான்னான்... ஒரு நாளைக்கு. விளக்கெண்ணைக்கு பேரு வச்சது யாருன்னான் ஒருநாளைக்கு.
அதுவாவது பரவாயில்லை, ஒரு தடவை 'எதிர்வூட்டு ஆயா, அயுகுது'ன்னான் கடைக்குள்ள வந்துகொண்டே. 'அடப்பாவி, பாட்டி போய்சேந்துட்டாங்களா'ன்னேன்.

'ஒன் வாய கழுவுடா... பாட்டி நல்லாதான் கீது... சீரியல் பாத்துட்டு அயுகுது'ன்னான்..

அய்யோ, சடப்பாண்டி!! பழம் காய்கறிதான் அழுகும்.. மனுசங்க அழுகணும்னா.. செத்தாத்தான் முடியும.. அழுகறதுன்னா கெட்டுப்போறதுன்னு விளக்கினா..

'தா.. இப்போ இன்னான்றே..தமிழ் தமிழ்ங்கறே.. அல்லாரும் இங்கிலீஷ் படிச்சுகினு போறாங்கோ.. இருக்கறதுக்கும் நொள்ள சொல்லினுகீற..அப்பிடின்னான்.

அப்படி தான் ''பஞ்சதந்திரம்'' படத்தை அவன் கடையில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்த போது திடீரென்று என்ன பார்த்து ''தமிழ் ஒரு லூசு மொழி அன்னாத்த'' என்றான்.
அதை கேட்ட நான், அடப்பாவி எல்லோரும் தமிழை செம்மொழி அப்படி இப்படினு சொல்லிக்கிட்டிருக்கும் போது, கொஞ்சம் கூட கவலையே படாம லூசு மொழினு சொல்லிட்டானேனு கோவமா எப்படி என்னடா உளர்றேன்னேன்.
இன்னொரு பக்கம் சொந்த வாயாலேயே சூனியம் வைக்கிறானேன்னு மனசுக்குள்ள புலம்பிட்டிருக்க சொல்ல....அடச்சீ....இருந்தேன்.

அப்போ நம்ம சடபாண்டிப்புலவர் தன் இதழ் மலர்ந்து தன் முதல் கணையை எய்தார்.
சடப்பாண்டி : பஸ்ஸூல பின்னாடி ஏறினா அதுக்கு நம்ம கண்டக்டர் இன்னா சொல்லுவான்னு சொல்லு

நான் : 'முன்னாடி போய்யா' ம்பார்

சடப்பாண்டி : முன்னாடி ஏறினா அதுக்கு இன்னா சொல்லுவாரு நம்ம ட்ரைவன்.

நான் : உள்ளே போய்யாம்பார்.

சடப்பாண்டி : உள்ளேனா, முன்னாடியா, பின்னாடியா?

நான் : .பின்னாடிதான்..

சடப்பாண்டி : சரி, கோவில்ல எப்படி சாமி கும்பிடுவன்னு சொல்லு

நான் : சாமியப்பார்த்து தான், என்னடா கேள்விக்கேக்குற சட

சடப்பாண்டி : இல்லடா, சாமி சிலே எங்க இருக்கும் உனக்கு?

நான் : முன்னாடி தான் இருக்கும்

சடப்பாண்டி : அப்ப நீ சாமிய கும்புடும் போது சாமிக்கு முன்னாடி இருப்பியா இல்ல பின்னாடி இருப்பியா?

நான் : அய்யோ சாமி உன் தொல்லை தாங்க முடியலை. சாமிக்கு முன்னாடி தான்

சடப்பாண்டி : சரி இப்போ பின்னாடிக்கு வரேன். ஒரு தெருல நடந்துனுக்கீர அப்ப நீ வேணுங்குற தெரு தாண்டி போய்ட்ட அப்புறம் இன்னும் முன்னாடி போவியா இல்ல பின்னாடி போவியா?

நான் : பின்னாடி தான். ''பயலுக்கு ஏதாவது கோளாறா இன்னைக்கு நிறைய கேட்டுக்கிட்டுருக்கானே ஏதோ பெரிய பாதாளத்துல இறங்குறானு தெரிஞ்சு போச்சுன்னு'' மனசுக்குள்ள நானே புலம்பிக்கிட்டேன்

சடப்பாண்டி : பேங்குல எதுக்கு காசு போடுற

நான் : பின்னாடி பயன் படும்னு தான்

சடப்பாண்டி : முன்னாடி எந்த ஊருல இருந்தே

நான் : பெங்களூர்ல இருந்தேன்

சடப்பாண்டி : முன்னோர்னா யாரு நைனா?

நான் : நமக்கு முன்னாடி இருந்தவங்க

சடப்பாண்டி : அப்ப உனக்கு முன்னாடி இருக்கறவங்கள முன்னோர்னு சொல்லுவியா? இதென்னயா கதயா கீது? நீ தாண்டி போன தெருவ பின்னாடி இருக்குங்குற, இருந்துட்டு வந்த ஊர முன்னாடிங்கர என்னய்யா பேசறே....

நான் : ஙே.......

சடப்பாண்டி : அப்ப தமிழ் லூசு மொழிதானே?

அவனுக்கு எப்படி space dimension, time dimension விளக்கறது, அது ரெண்டுத்தலை முன்னாடியையும், பின்னாடியையும் எப்படி எதிர்மறையா தமிழ்ல பயன் படுத்தரோம்னு எப்படி அவனுக்கு விளக்கறதுனு புரியாம ''ஆமாம் தமிழ், புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு லூசு மொழிதான்'னு சொலிவிட்டு பதிவழுத ஓடிவந்துவிட்டேன்.

கருத்துகள்

வெட்டிப்பயல் இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பரு...

சடப்பாண்டி நம்மல மாதிரியே திறமைசாலியா இருக்காரு :-)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வெட்டிப்பயல் வாங்க

\\சடப்பாண்டி நம்மல மாதிரியே திறமைசாலியா இருக்காரு :-)
\\
ஹா.. ஹா..
உண்மை இவ்வாறு கூறியுள்ளார்…
kalakkal :)
selventhiran இவ்வாறு கூறியுள்ளார்…
"அல்லாரும் இங்கிலீஷ் படிச்சுகினு போறாங்கோ.. இருக்கறதுக்கும் நொள்ள சொல்லினுகீற..அப்பிடின்னான்" பிரமாதமான சப்டெக்ஸ்ட்
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
"எச்சரிக்கை:இது ஒரு வெட்டி பதிவு"
ஐயா எல்லாம ஓடி வாங்க ஓடி வாங்க நமக்காக ஒருத்தர் பதிவு
போட்டு இருக்கார்...
ACE !! இவ்வாறு கூறியுள்ளார்…
நான் இந்த பதிவை முன்னாடியே படிச்சேன்.. ஆனா பின்னாடி தான் பின்னூட்டமிடறேன்.. :D :D

வாழ்த்துக்கள்///

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...