முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணதாசனும் கத்திரிக்காயும்

கண்ணதாசன். யாருக்கும் தெரியாமல் மனத்தால் இழிந்து, பொய்யாய் வாழ்ந்து மறைகிறோம். நல்லதையும் கெட்டதையும் ஒருங்கே பார்த்து, வியந்து, அனுபவித்து இன்னும் என்னவெல்லாம் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யமுடியுமோ அத்தனையும் செய்து அவன் இன்னமும் வாழ்கிறான்.

என்னைப்போன்றோருக்கு எப்படி அவனை உணர முடிகிறது. வெறும் 54 வருடம் தான் வாழந்திருக்கிறான். அதற்குள் எத்தனை சாதனை, சோதனை. என்னை விட வயதில் மூத்தோருக்கு அவனை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பழைய சினிமா பாடல்களின் மூலம் அறிமுகமான காலத்தில வெறும் சினிமா பாடல்களை மட்டுமே வைத்தே நினைத்திருந்ததை அவனிடம் மானசீகமாய் மன்னிப்புகேட்க வைத்தது அர்த்தமுள்ள இந்துமதம்.

தனக்குதானே பட்டம்சூட்டிக்கொள்ளும் மாக்கள் எங்கே, தன்னையே பகடி செய்துகொண்ட அவன் எங்கே.

சேர்கின்ற பொருள்களைச் செம்மையாய் எந்நாளும்
காக்கவும் திறமை இலையே
ஜெயிக்கின்ற கட்சியில் நுழைகின்ற வித்தையைத்
தேருமோர் அறிவு மிலையே.


காமராஜரைப்பற்றி மிகச்சுலபாக எப்படி எழுதமுடியும் என வியக்க வைத்த

சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த
அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.

தேடித்தட்டச்ச வைத்த கண்ணதாசனின் அனுபவப் பாடலொன்று..

முட்டை பட்டாணி மூளை
முருங்கைக் கீரை வெங்காயம்
தட்டைப் பயிறுகள் மொச்சை
சாகர எறாக்கள் நண்டு
கொட்டை உருளைக் கிழங்கு
கொடியதோர் வாய்வு காணும்
தொட்டுப் பாராதே ! என்றும்
சுவைக்காக நோய் பெறாதே !

முளைக்கீரை மணத்தக்காளி
முருங்கைக் காய், வெள்ளரிக்காய்
உளிப் பூண்டோடு அகத்திக்கீரை
உயர்ந்த தக்காளி, கோசு
களியோடு நெய் பருப்பு
கத்தரி, வெண்டை, பீட்ரூட்
நெளிகின்ற புடலை, நெல்லி
நீள் கொத்தவரரையோடு

பூசனி, சுரை, பரங்கி
பூக்கோசு, பசலைக் கீரை
பேசவோர் விலை லேல்லாத
பிஞ்சான பிரண்டை, வேலித்
தூசியில் முளைத்த கொவ்வை,
தொண்டங்காய், குப்பைக் கீரை
ஊசிபோல் கொத்தமல்லி
உண்ணுவாய் பொதினாவோடு !

சுவைக்க சுவைக்க திகட்டாத திரைப்படப்பாடல்கள் ஏகப்பட்டதை ஏகப்பட்டபேர் சொல்லி இருந்தாலும் என் பங்குக்கு எனக்கு பிடித்த எனக்கு தெரிந்தவரையில் தமிழ்திரைப்படத்தில் வந்த ஓரே அந்தாதிப் பாடல்.



வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் நீரினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடரந்து வந்தால்
நேரமெல்லாம கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலரகணைகள்

மலர்ககணைகள் பாயந்து விட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில முகம் புதைத்து
சரசமிடும் புதுகலைகள்
புதுக்கலைகள் பெருவதற்கு
பூமாலை மனவினைகள்

மன வினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்
விதி வகைகள் முடிவு செய்யும்
வசந்த கால நீரலைகள்...

கருத்துகள்

Kannabiran, Ravi Shankar (KRS) இவ்வாறு கூறியுள்ளார்…
அட, இங்கும் கண்ணதாசனா?
நன்று சத்தியா, நன்று!!

//முளைக்கீரை மணத்தக்காளி
முருங்கைக் காய், வெள்ளரிக்காய்//

நல்ல காலம்...நீங்க கண்ணதாசனும் முருங்கைக்காயும்-னு தலைப்பு வைக்கல :-))
Kannabiran, Ravi Shankar (KRS) இவ்வாறு கூறியுள்ளார்…
//சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்//

ஆகா...அருமை அருமை!
அன்னையையும் நாடார்...முத்தாய்ப்பு!

//நாடொன்றே நாடித் தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடு என்றார்//

வெண்பா, அதுவும் இன்னிசை வெண்பா பிச்சிக்கிட்டு போவுது!
கொத்ஸ், கவனிக்கவும்!

கலைஞரும் இது போல ஒரு முறை பேசியதாகக் கேள்வி...யாதவர் கல்லூரியில்...
நான் சூதும் வாதும் தெரி யாதவன்
சூழ்ச்சிகள் புரி யாதவன்...
...ன்னு லைன்னா சொல்லி,
கடைசியில்...
ஆகவே நானும் ஒரு "யாதவன்"-ன்னு சொன்னாராம் :-))
உண்மைத்தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை சத்யா.. கவியரசர் இன்று நம்மோடு வாழ்ந்திருக்க வேண்டியவர்.. இறைவன் போதும் உனது திருவிளையாடல் என்று கூறி அழைத்துக் கொண்டான். ஆனாலும் அவர் விட்டுச் சென்றவைகள்தான் எத்தனை.. எத்தனை.. இன்று வரையிலும் உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடித் தமிழர்களை தூங்க வைப்பவர் அவர்தானே.. இந்தப் பாக்கியம் யாருக்கு வரும்.. நான் எந்தத் திருமணத்திற்குச் சென்றாலும் மணமக்களுக்குப் பரிசாகக் கொடுப்பது கவியரசரின் அர்த்தமுள்ள இந்து மதம் நூலைத்தான்.. நீங்களும் கொடுத்துப் பாருங்கள்.. வாழ்த்துக்களும், புண்ணியமும் தானாக உங்களைத் தேடி வரும்..
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
சாரி சத்யா...

காக்க உக்கார பனம் பழம் உழுந்த கதையா நான் இந்த பதிவ போடும் பொழுது நீங்க நச்சத்திரம்.
சாரி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அட குசும்பன் என்ன < a href = "http://kusumbuonly.blogspot.com/2007/06/blog-post_09.html"
>இதுக்கெல்லாம் <\a> போய் மன்னிப்பெல்லாம் கேக்கறீங்க. உங்க நல்ல எண்ணம் இதிலிருந்து தெரிகிறது. மன்னிப்பெல்லாம் ஏத்துக்க முடியாது ;-)
VSK இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணதாசனை எங்கு படித்தாலும் இனிமைதான்.

பல அருமையான பாடல்களை அளித்து மகிழ வைத்து விட்டீர்கள்!

நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
KRS, உணமைத்தமிழன், VSK,
வருக.

\\இன்று வரையிலும் உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடித் தமிழர்களை தூங்க வைப்பவர் அவர்தானே.. \\

\\கண்ணதாசனை எங்கு படித்தாலும் இனிமைதான்.\\
உண்மை.

\\நான் எந்தத் திருமணத்திற்குச் சென்றாலும் மணமக்களுக்குப் பரிசாகக் கொடுப்பது\\ கவியரசரின் அர்த்தமுள்ள இந்து மதம் நூலைத்தான்.. \\

நல்ல யோசனை.
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
"அட குசும்பன் என்ன < a href = "http://kusumbuonly.blogspot.com/2007/06/blog-post_09.html"
>இதுக்கெல்லாம் <\a> போய் மன்னிப்பெல்லாம் கேக்கறீங்க. உங்க நல்ல எண்ணம் இதிலிருந்து தெரிகிறது. மன்னிப்பெல்லாம் ஏத்துக்க முடியாது ;-)"

மன்னிப்பு கேட்க்க தெரிஞ்சவன் மனுசன், மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுசன். அதுவும் நச்சத்திரம் என்னுடைய பதிவு url யை அவருடைய பதிவில்
கொடுத்து இருக்காரு என்றால் அவர் இன்னும் பெரிய பெரிய மனுசன்ப்பா!!!

"உங்க நல்ல எண்ணம் இதிலிருந்து தெரிகிறது." டேய் குசும்பா உன்னையும் ஒருத்தர் நல்ல மனசுகாரன்னு சொல்லிட்டார்...இவர் சூதுவாது தெரியாத நல்லவர் போல இருக்கே!
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா,
மிகவும் அருமையான பதிவு.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்றுள்ளவர் கவியரசர்.

அவருக்கு நிகர் அவரே தான்.
முகவை மைந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தாதி - நான் ஒரு முறை கூட அவதானிக்கவில்லை.

வேறு ஏதேனும், எவரேனும்?
Geetha Sambasivam இவ்வாறு கூறியுள்ளார்…
நேற்றுத் தான் விஜய் டி.வி.யிலே வாணிஜெயராம் இந்த "வசந்த கால நினைவுகளிலே" பாட்டைப் பாடும்போது கண்ணதாசனின் கவித்துவத்தைப் பற்றியும் ஒரு அந்தாதியாக எழுதி இருப்பதையும் பற்றி வியந்து கொண்டிருந்தேன். இன்று இங்கே உங்கள் பதிவில் அதே பாட்டு!
அது சரி, "கற்றது கைம்மண் அளவு"க்கு ராயல்டி நீங்க கேட்க முடியாதே! :)))))))))))

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக