வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...
முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையுடன்...
கருத்துகள்
Pmt.
நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்.
திவா,
நன்றி. நியூயார்க் நகர கட்டிடங்கள் நிறைய இருக்கு. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கட்டும் என்றே ஒரு அழகான கலங்கரை விளக்கை பிடித்தேன்.
pmt,
நானும் இரண்டாவது முழுதாய் இருந்தால் அனுப்பி இருப்பேன். இதையொட்டிய 3-4 படங்கள் அனைத்தையுமே crop பண்ணவேண்டியதாய் போய்விட்டது.
முதல் படம் உங்களுக்கு பிடிக்கலையோ?
தமிழ்பிரியன்.
சத்தியா
இந்த சும்மாவே கண்ண கட்டுதே...
ஐயா சத்தியா.. படத்த மொதல்லே போட்டா எங்கள மாதரி கத்துக்குட்டிங்க ல்லாம் கொஞ்சம் சைடு வாங்கிக்குவோமில்ல. powershot powerful shot.
சூப்பர் அப்பு...
வாசி
வாழ்த்துக்கள் !!!
மொத படத்துல காட்சி அமைப்பு கொஞ்சம் மாத்துன இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் :)
இரண்டாவது படம் அரோரா கோவில்ல எடுத்ததா ? அந்த கோவில் படத்தை தான் நான் போட்டிக்கு அனுப்பி இருக்கேன்.
நன்றி.
\\எங்கள மாதரி கத்துக்குட்டிங்க ல்லாம் கொஞ்சம் சைடு வாங்கிக்குவோமில்ல\\
நீங்க கத்துக்குட்டி? ம்... நேரம்.
கேமரா பத்தி பாதி விவரம் கூட எனக்குத்தெரியாது. சரி நம்ம அப்புறம் வச்சுக்கலாம் இத.
இந்த படத்துக்கே மெனக்கெட வேண்டியதா போச்சு. வலது பக்கம் நெருக்கமா ஒரு எலக்கட்ரிகல் டவர் இடது பக்கம் இடைஞ்சலா ஒரு கொடின்னு. கிராப்பிங்க்ல இன்னும் கொஞ்சம் சரி பண்ணி இருக்கலாமோ?
\\இரண்டாவது படம் அரோரா கோவில்ல எடுத்ததா ? அந்த கோவில் படத்தை தான் நான் போட்டிக்கு அனுப்பி இருக்கேன்.\\
இல்லைங்க இது பாஸ்டன்(framingham) லஷ்மி கோயில்
நாதஸ்க்கு விளக்கம் சொல்லி இருக்கேன் பாருங்க.