முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகம் அழிந்துவிட்டால்

நாளை உலகம் அழிந்துவிட்டால் நாம் இன்று கண்டுபிடித்திருக்கும் பல விடயங்கள் அழிந்துவிடும். அறிவியலார் டைனசர் காலத்தில் ஒரு கோள் விழுந்து உயிரினங்கள் அழிந்துவிடடதாக கூறுகின்றனர். நாளை உலகம் அந்த மாதிரி அழிந்துவிட்டால் எஞ்சப் போவது என்ன? நாம் கட்டிய உயர்ந்த கட்டிடங்களும் மிஞ்சும் சில கிறுக்கல்களும் தான். யாருக்கு தெரியும் காதலன் காதலி பெயரை கிறுக்கி இருக்கும் பாறைகள் மிஞ்சினால் உண்டு. கொஞ்சம் சிந்தித்தால் நாம் அறிவால் உணர்ந்த விடயங்கள அடுத்து வரும் மனிதர்கள்(அவர்களும் மனிதனைப்பொன்ற ஒரு உயிரினம்)
நம்மை பற்றி என்ன அளவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் இந்த சிந்தனையை நீட்டினால்
ஏன் நாம் கூட நம் மூதாதையரின்(அப்படி அழிந்து போயிருந்தால்) அறிவை பற்றி நாம் ஏன் தவறான ஒரு கண்ணோடத்தை பெற்று இருக்க கூடாது?

கருத்துகள்

கலை இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கேள்வி? சிந்திக்கணும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...