முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுகுற்றம் பெருங்கேடு

முதலில் சொல்லிவிடுவது நலம்: பலருக்கு இது வெறும் நூறு ரூபாய் குற்றம்.

நாடோடி வாழ்க்கையில் இரண்டு மாதம் மின்கட்டணம் கட்டாமல் கிடந்த்து. அதை இன்று காலை கட்டிவிடலாம் என்று வீட்டருகில் இருக்கும் பெஸ்காம்(BESCOM) தன்னியக்க சேவை மையத்துக்கு சென்றேன். இந்த இயந்திரங்கள் வழக்கமாகவே சில ரூபாய் நோட்டுக்கள் பிடிக்காமல் துப்பிவிடும். சில தாள்களை இவை ஏற்காது துப்பிவிடுவது நேர்வதுதான். ஏற்றகாசுக்கு
ஒழுங்காக கணக்கு காட்டும். வழமையாக மின்கட்டணம் கட்டுவது இங்கேதான் என்பதால் கட்டவேண்டிய 626ரூபாய்க்கு கூடவே ஒரு நானுறு ஐநூறு ரூபாய் இருப்புடனே சென்றேன்.எனக்கு முன் வந்த ஒரே ஒருவர் மட்டும் ஒரு காசோலையை அதை ஏற்கவைக்க மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். வழக்கமாக காசோலைகளை உடனே ஏற்றுக்கொண்டுவிடும்( குறைந்தபட்டசம் இம்மைய இயந்திரம்). அவர் சரி வேலைக்காகாது என்று எனக்கு வழிவிட்டார்.

ஒரு நூறு ரூபாயைக்கூட ஏற்காமல் துப்பிக்கொண்டிருந்தது. மற்றவர் ஐநூறு ரூபாய்த்தாளை கடனாகக் கொடுத்தார்.அதையும் ஏற்கவில்லை. சிறிது நேரம் தாள்களை மாற்றி மாற்றி மல்லுக்கட்டியபோது ஒரு நூறுரூபாய்தாளை ஏற்றுக்கொண்டது. கதையை சுருக்க ஒரு ஐநூறு ரூபாய்த்தாளையும் ஏற்றுக்கொண்டு கணக்கு காட்டியது. அடுத்து ஒரு நூறு
ரூபாயை தின்றுவிட்டு கணக்கு காட்டவில்லை. காலையிலேயை ஆரம்பிச்சாச்சு விவகாரம் என்று நினைத்துக்கொண்டே மனம்தளரா விக்கரமாதித்தனாக அதோடு போராடி பத்து மற்றும் இருபது ரூபாயை ஏற்றிவிட்டு அலுவலைமுடித்தால் ரசீது வரவில்லை.


இவ்வியந்திரம் ஒரு சிறிய அறையின் முன்வாசலில் இருந்தது. அருகில் ஒரு கதவு தாழிடாமல் இருந்ததது. திறந்து உள்ளே சென்றால் இயந்திரத்தின் பின்பகுதியை மூடியவாறு ஒரு சிறு கண்ணாடி அறை. எதுவும் தெரியாமல் இருக்க உட்பக்கமாக Thermocol ஒட்டி வைத்து இருந்தது. கொஞ்சம் உற்று பார்த்தால் ஒரு மனிதனின் கைதெரிந்தது. அறையின் கதவு உட்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை இருமுறை தட்டினேன் பதிலில்லை. உள்ளிரந்தவன் ஒளிவது தெரிந்தது. வந்த கோபத்தில் விட்டேன் நான்கு உதை.
கதவை சிறிதாக திறந்து 'ஏனு பேக்கு' என்றான். இந்தியில் பில் வரவில்லை என்றேன்.திரும்பி இயந்திரத்தை திரும்பி பார்த்தான். கிடைத்த இடைவெளியில் பார்த்தால் இயந்திரம் முழுக்க பிய்த்துபோட்டு திறந்தமேனியாக இருந்தது. அமைதியாக அவன் உட்பக்கமாக கையை விட்டு பில்லை கிழித்து கொடுத்தான். சற்றே கிடைத்த கதவிடுக்கில் கையை வைத்துக்கொண்டு நூறு ரூபாயை தின்று விட்டது என்றேன். ஏனு ஏனு என்று புரியாதவனாக விழித்துவிட்டு இந்தி கொத்தில்லா என்றான்.
'நனகே கன்னடா பரத்தே' என்று கன்னடத்துக்கு தாவினேன். இதை முதலில் அவன் எதிர்பாக்க்கவில்லை. திரும்பவும் விளக்க 'ஒருமணி நேரம் கழித்து வா' வேறொருவர் வந்து பில்லை சரிபார்ப்பார் என்றான்.

உடனே கதவை விலக்கி அவன் சட்டையை கொத்தாக பிடித்தேன்.அடுத்து அருகிருத்த மின்சார ஸ்விட்சுகளை அணைக்க
முயன்றேன். நெற்றியில் விபூதி கீற்றுடன் அமைதியான முகத்துடன் இருந்தவன் சடக்கென்று சட்டையை பிடித்ததை அடுத்து எதிர்ப்பாக்கவில்லை. நெடுநெடு மாறன்களும் அழுக்கு குலையா ஐடி கம்பெனி காரர்களையும் மட்டுமே பார்த்தவனுக்கு மற்றோர் போலவே போனாப்போகுது என்று விட்டுவிட்டு போய்விடுவேன் என்று நினைத்தான் போலும். பதறிவிட்டான். மிக சிறிய அறையில் அவனை சுவற்றோடு அழுத்தி சட்டையையும் பிடித்ததால் அவனால் நகர முடியவில்லை. சுதாரித்து நான்
அரசாங்க ஊழியன் என்றான். ஐடி கார்டை காட்டு என்றேன். திரும்பவும் ஏதோதோ சொல்ல முயன்றான். அவனை விட்டுவிட்டு வெளியில் இருந்தவரை கூப்பிட்டு போலீசை கூப்பிடுங்கள் என்றேன். திரும்பவும் ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்தவனை ஒன்று நீ ஐடி கார்டை காட்டு அல்லது இயந்திரத்தை நான் அணைக்கப்போகிறேன் அடுத்து காவல்துறை வரும்
என்றேன்.

திருதிருவென விழித்துவிட்டு நீங்க நெசமாவே நூறு ரூபா போட்டு பில் வரலையா என்றான்.உங்கிட்ட ஐடி கார்ட் இல்லை இனிமே கேள்வி கேட்டால் மண்டையை உடைத்துவிடுவேன் என்றேன். இருங்க வரேன் என்று கண்ணாடி அறையில் நுழைந்தவன் ஒரு நோட்டு புத்தகத்துடன் வந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை குடுத்துவிட்டு 'நான் இதுல உங்க பில் நம்பரை
எழுதிக்கிறேன். நாங்க அப்புறமா சரி பாக்கறோம். நெசமாவே பணம் இருந்துதுனா பரவாயில்லை இல்லைன்னா நீங்க திரும்பிவந்து இந்த நூறு ரூபாயை குடுங்க என்றான'. " என்னை இன்னுமாடா பயந்த சொங்கிப்பய என்று நினைச்சுகிட்டு இருக்க" என்ற நினைத்தவறே திரும்பி வந்தேன்.

1. மேல் நடவடிக்கை எடுக்காத காரணம். உள்ளே இருப்பவன் கட்டாயம் திருடன் இல்லை. இதில் யார் யாரோ சம்பந்தப்பட்ட ஒரு குற்ற வலை. பெங்களுரில் எந்த விதமான பின்புலமும் இல்லாத நான் இதை தட்டிக்கேட்பதை விட வேறு வழிகளை பார்ப்பது நலம்.

2. உள்ளூர் மொழி தெரியாமல் அதை கற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பல இந்திக்காரர்களை உள்ளூர் ஆட்கள் கொள்ளை அடிப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். இலக்கணப்பிழையுடனான சிலபல ஆங்கில மற்றும் இந்தி வார்த்தைகளுமான கன்னடமாக இருப்பினும் பேசத்தெரிந்து இருக்காவிடில் கட்டாயம் வேலைக்கு உதவாது

3. நூறு ரூபாய் தானே திரும்பிவிடலாம் என்றே உண்மையில் முதலில் நினைத்தேன். வெறும் ஐந்துக்கும் பத்துக்கும் சென்னை நகர சாலைகளை கால்களால் தேய்த்த பல நாட்கள் நினைவில் நிழலாடியது. விடத்தோன்றவில்லை.

4. இனிமேல் இணையவழி செலுத்துதலை மட்டுமே செய்வதாக உத்தேசம்.

5. இந்த தளத்தில் போய் அழுதாயிற்று.

கருத்துகள்

அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
களத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த அஞ்சா நெஞ்சன் அண்ணன் சத்தியா வாழ்க :)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
\\அஞ்சா நெஞ்சன்\\ வேண்டாம் சாமீ இந்த விளையாட்டு.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி.
புருனோ Bruno இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் கூறுவதை பார்த்தால் இது பெரிய கும்பல் போலிருக்கிறது
R. Prabhu இவ்வாறு கூறியுள்ளார்…
சத்யா

தங்கள் பின்னூட்டம் படித்ததில் மிக்க மகிழ்ச்சி மற்றும் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முதலில் நானும் அவ்வாறே பதிவு செய்ய எண்ணினேன். ஆனால் இரண்டு காரணங்களுக்காக நான் அவாறு செய்யவில்லை

- Browser Font rendering problems
- நம் தமிழ் பொக்கிஷங்கள் வெளி உலகிற்கு தெரிய வேண்டுமெனில் ஆங்கிலத்தில் பதிவு செய்தல் மட்டுமே முடியும். தமிழ் பற்றி உலகமும் அறியட்டும் என்ற நோக்கில் இதனை தொடர்ந்தேன். அதற்கு நல்ல வரவேற்ப்பும் கிடைத்தது. உதாரணத்திற்கு மலேசியா மற்றும் அமெரிக்காவில் இருந்து சில நண்பர்கள் என் பதிவுகள் மிகவும் அங்கு உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்க உதவியதாக சொன்னார்கள் ஆதலால் அவ்வாறே தொடர்ந்தேன்

இருப்பினும் தங்கள் தமிழ் ஆர்வமும் கருத்திற்கும் மிக்க நன்றி

அன்புடன்,
பிரபு
சிவா இவ்வாறு கூறியுள்ளார்…
அட்ரா சக்கை அட்ரா சக்கை,
செவுத்துல வச்சி மோதி, செவுள்ள நாலு வுட்டு...
நனகே கன்னடா கொத்து ம்ம்... கலக்கல். கடைசியா சொன்ன அந்த 2 வரி தொட்டது நெஞ்சை. இன்றைய (நிறைய) இளவட்டம் மற்றும் நடு வர்க்கம் 100 ரூபாய்தானே என்று நினைக்கிறார்கள் அது மாற வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...