இலவசமாய் அரிசி கொடுக்கிறார்கள், தொலைக்காட்சி பெட்டி தவிர சாப்பாடும் போடுகிறார்கள். இதெல்லாம் விட்டு இலவசமாய் கல்வி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும்.
அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா? கல்விக்கு Cess என்று ஒன்று போன வருடம் போட்டார்கள். என்ன ஆயிற்று அந்த பணம்? யாருக்காகவாது இலவசக்கல்வி கொடுப்பார்களா? கொடுத்தார்களா?.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போனால் Donation என்றும் வருடாந்திர கட்டணம் என்று இன்றும் கொடுக்கவேண்டி இருந்தது. இன்றும் இருக்கும். ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டுமென்றால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கேயே பிரிவினை. காசுள்ளவன் ஆங்கிலம் படிப்பான் காசில்லாதவன் தமிழ் படிப்பான் என்று. அரசாங்கப்பள்ளிகளிலேயே இந்த நிலைமை.
எனக்கு தெரிந்து என் நண்பனின் அம்மா வீட்டு வேலை செய்து தான் படிக்கவைத்தாள். அவளிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. அதற்காக நாயாய் பேயாய் அலைந்து அந்த தாய் பணம் கட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. கொடுமை என்னவெனில் மற்ற செலவுகளுக்கு அந்த அம்மா தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வேலை செய்து தான் 2 வருடம் மேல்நிலைக்கல்வி படிக்கமுடிந்தது என் நண்பனால்.
வியாபாரக் கல்வி, இட ஒதுக்கீட்டுக் கல்வி( பணம், சமூகம்) என்று என்ன என்ன வழி உண்டோ அவ்வளவிலும் பிரிந்து தான் கிடக்கிறோம். எல்லோரும் மறந்துவிடும் மற்றொரு பிரிவினை வட்டார அளவில் கல்வி. வடநாட்டு மக்களை கேளுங்கள், பாரதியாரை தவிர உருப்படியாய் ஒரு தமிழ்நாட்டு சுதந்திர போராட்டவீரர் பேர் தெரியாது.
அடுத்தது இந்த கல்வித்திட்டப்பிரிவினை. CBSE படித்தவனுக்கு IIT entrance சுலபம். மாநிலக்கல்வி படித்தவனுக்கு பொறியியல், மருத்துவம் சுலபம் என்று குழப்படியான கல்வி முறை. இதில் ஆங்கிலோ இந்தியன் என்று கல்வி முறை வேறு. தமிழ், ஊறுகாய் மாதிரி அந்த கல்வி முறையில் இருக்கிறது.
சுதந்திரம் வாங்கி 60 வருடம் ஆகிறது இன்னும் என்ன ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை. இதில் படித்த ஒரு நண்பனுக்கு தமிழ் படிக்க வராது. நம்பினால் நம்புங்கள், ஆங்கிலோ இந்தியன் கல்வி படித்த அவனால் ஒரு கட்டுரையோ கவிதையோ தமிழில் படிக்க இயலாது. நான் மிகவும் வருந்தி சொன்னதன் பேரில் பல முறை புத்தகத்தை திணித்து படி படி என்று படுத்தியதின் பேரில் என்னை திருப்திபடுத்த பொன்னியின் செல்வன் படித்தான் அவன், ஆங்கிலத்தில். ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் படித்த ஒரே(எனக்குதெரிந்து) தமிழன் அவனாகத்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும் வித்தகன் அவன். என்ன மாதிரியான் ஒரு கல்வி முறை இது?
அதற்கு நேர் எதிராக கிராமத்தில் எனக்கு மற்றொரு நண்பன். ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது. கடைசியில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்று காவல்துறையில் ரிப்போட்டராக போக வேலை கிடைத்த போது ஒரு முழு லிப்கோ அகரமுதிலியை நாம் பாட புத்தகம் படிப்பது மாதிரி படித்தான். ஏதாவது பக்கத்தை பிரித்து ஏதாவது சொல்லைக்கேள் அர்த்தம் சொல்கிறேன் என்று படுத்தி இருக்கிறான்.
ஒரு ஒழுங்குபட்ட கல்வி முறை இல்லை இதனால் பாதிக்கப்படுவது எல்லோருமே தான். ஏழைகளுக்கும், கிரமத்தானுக்கும் தமிழைவிட்டால் நாதி இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கு தெரிந்து பல பேர் நல்ல ஆங்கில அறிவில்லாத்தால் நேர்முகத்தேர்வில் தோற்றவர்கள் இருக்கிறார்கள். என்ன ஒரு குழப்படியான செயல்திட்டம் இது.
வருடம் போய் வருடம் வந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும், பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வு கோர்ட் கோர்ட்டாக போய்கொண்டிருக்கிறது ஒரு மராட்டிய மாநில கல்வி முறையில் 60 மதிப்பெண் வாங்கியவனையும் தமிழ்நாட்டில் 60 மதிப்பெண் வாங்கிவனையும் ஒரே நிகரில் வைக்கமுடியுமா? முதலில் எந்த சிஸ்டத்தில் படித்தவன் என்று கேள்வி அல்லவா வருகிறது!!!
இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம், ஒரே கல்லூரி நுழைவு முறை என்றல்லவா இருக்கவேண்டும். அப்படி இருந்தால் என்ன மாறிவிடும். அதில் சாதகம் என்ன, பாதகம் என்ன? வெறும் கேள்விகளாய் இருக்கிறதே அன்றி பதில் தான் இல்லை.

கருத்துகள்
இலவசக் கல்வி வந்தாலும் பல்வேறு காரணங்களால் நகரத்து பள்ளிகளில் நல்ல கல்வி, கிராமப்புறங்களில் நொல்லை கல்வி என்ற நிலை மாறாது என நினைக்கிறேன்.
நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம் என்பதும் சிந்திக்க கூடிய விஷயம்தான். ஆனால் அது ஒரு Monotony ஐ உருவாக்கி விடும் என்று நினைக்கிறேன்.
\\நகரத்து பள்ளிகளில் நல்ல கல்வி, கிராமப்புறங்களில் நொல்லை கல்வி என்ற நிலை மாறாத\\
இது பெரிய சாபக்கேடு. குறைந்தபட்சம் இலவசக்கல்வி இதை கொஞ்சமாவது குறைக்கலாம்.
\\நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம்\\
குறைந்தது மாநில அளவிலாவது ஒரே கல்வி முறை வேண்டும்.
கல்வியின் தரம் நிர்ணயிக்கப் படும் அளவுகோலும் பரிசீலனைக்குரிய ஒன்று. அதன் பின்னரே நகர்ப்புறக் கல்வியையும் கிராமப்புறக் கல்வியையும் தரநிர்ணயம் செய்யவேண்டும்.
ஏனெனில் தற்போதுள்ள கல்விமுறைப்படி பெரும்பாலானோர் எழுத்தறிவுயுடையவர்களேயன்றி கற்றோரல்ல.
கற்றபின் நிற்க அதற்குத் தக - என்பதை பெரும்பாலானவர்களால் படிக்க முடியும்.
\\ஏனெனில் தற்போதுள்ள கல்விமுறைப்படி பெரும்பாலானோர் எழுத்தறிவுயுடையவர்களேயன்றி கற்றோரல்ல.\\
அதெல்லாம் அடுத்த கட்டம் என்கிறீர்கள் ;-)
இருக்கட்டும் முதல் கட்டமே சரியில்லையே. அதையாவது ஒரு சீராக்க வழி உண்டா?
ஃஃ
இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம், ஒரே கல்லூரி நுழைவு முறை என்றல்லவா இருக்கவேண்டும். அப்படி இருந்தால் என்ன மாறிவிடும். அதில் சாதகம் என்ன, பாதகம் என்ன? வெறும் கேள்விகளாய் இருக்கிறதே அன்றி பதில் தான் இல்லை.
ஃஃ
இதில் தான் மிகுந்த சிக்கல் இருக்கிறது. இப்படி நாடு முழுவதும் ஓன்றாக கல்வி முறை என்ற குழப்படியை "இந்திரா காந்தி" யிடம் வைத்து உருவாக்கப்பட்டது தான் CBSE என்கிற கல்வித்திட்டம். அது உயர் சாதியினரின் கூடாரமாக்கப்பட்டது. அதன்மூலம் எல்லா மாநிலத்திலும் தங்களுடைய உயர் கல்வியை பாதுகாத்துக்கொண்டார்கள் உயர்சாதியினர்.
தமிழகத்தை பொருத்தவரை காமராஜர் அதன்பிறகு வந்த தி.மு.க அரசு இரண்டும் சரியான பாதையில் பயணிக்கத்தொடங்கினார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றவுடன் கல்வியை காசுக்கு விற்க தொடங்கினார். அதனால் தான் தமிழகம் முழுவதும் நர்சரிகள் புற்றீசல் போல் முளைக்க தொடங்கின. அதன் தொடர்ச்சியாக மெட்ரிக்குலேசன் என்கிற கல்விமுறையும் வந்தது.
தமிழகத்தில் கல்வி சீரழிவிற்க்கு முழு முதல் காரணம் எம்.ஜி.ஆரும் அதன் அமைச்சரவையும் தான். மக்களுக்கு சோறு என்பதை காட்டி முட்டாள்களாக வைத்துதிருந்தார். அவருடைய அடியாட்களாக இருந்த ஜேப்பியார், சாராய உடையார், ரமணிபாய், ஏ.சி.சண்முகம் அனைவரும் இப்போது கல்வி நிறுவன தலைவர்கள் என்பதிலிருந்து நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும் கல்வியை எவ்வளவு தூரம் சீரழித்திருக்கிறார்கள் என்று.
இதில் சாதி எங்கிருந்து வந்தது. CBSE எனக்கு தெரிந்து defense, bank என்று இந்தியா முழுக்க வேலை செய்யும் அலுவலர்களின் குழந்தைகள் படிப்பார்கள். மற்ற எல்லோரும் காசு கொடுத்துத்தான் அந்தக்கல்வி முறையில் படிக்கிறார்கள். உங்கள் வாதம் ஏதோ CBSE கல்விமுறை உயர்ந்தது என்றும் மற்றவை தாழ்வு என்றும் இருக்கிறது.
அடுத்து தமிழகத்தில் பின்பு வந்த கழக ஆட்சிகள் ஏன் அதே சரியான பாதையில் போகவேண்டியது தானே என்று பதில் கேள்வி கேட்கலாம். பிரச்சனை சாதியோ அல்லது எது சரி எது தவறு என்றோ அல்ல. ஒரே கல்விமுறை இருந்தால் என்ன பிரச்சனை?
இதில் சாதி எங்கிருந்து வந்தது. CBSE எனக்கு தெரிந்து defense, bank என்று இந்தியா முழுக்க வேலை செய்யும் அலுவலர்களின் குழந்தைகள் படிப்பார்கள். மற்ற எல்லோரும் காசு கொடுத்துத்தான் அந்தக்கல்வி முறையில் படிக்கிறார்கள். உங்கள் வாதம் ஏதோ CBSE கல்விமுறை உயர்ந்தது என்றும் மற்றவை தாழ்வு என்றும் இருக்கிறது.
ஃஃ
CBSE என்கிற கல்விமுறை உருவாக்கியதன் பின்னணி அரசியல் முழுக்க முழுக்க சாதியம் சார்ந்ததே. அதை பற்றி நிறைய எழுதப்பட்டு, பேசப்பட்டு, புத்தகங்களும் வந்து விட்டது. அவற்றை விளங்கிக்கொள்ளாமல் எங்கிருந்து வந்தது என்றுக்கேட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை?
சத்யா!
கல்வி என்பது மனிதனை சிந்திக்க வைக்க என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி சிந்திக்க வைக்ககூடிய கல்வி வேண்டுமெனில் அது தாய்மொழி சார்ந்ததாக இருக்க வேண்டும். அதனாலேயே கல்வி என்பது அந்தந்த மாநில அரசுகளிடம் கொடுக்கப்பட்டு அவர்களிடம் கல்வி கொள்கை வகுக்கப்படுகிறது.
இந்தியா முழுமைக்கும் என்கிற வாதம் சிந்தனையை தூண்டக்கூடிய கல்வி என்கிற இடத்தில் அடிப்பட்டு போகிறது. நாளைக்கு உலகம் முழுமைக்கும் என்றா கேட்பீர்கள் :-).
கல்வி நிலத்தையும், மொழியையும்,சமூகத்தையும் சார்ந்தது.
எல்லா மாநிலங்களும் இன்றைக்கும் மெக்காலே கல்வித்திட்டத்தின் படி தான் இயங்குகின்றன.
அங்கீகரிக்கபடாமல் மான்டிஸ்சாரி(Montessori) கல்வித்திட்டத்தை நடைமுறையில் நாம் இன்றைக்கு வைத்திருக்கிறோம்.
(அங்கீகரிக்க பட்ட கல்வித்திட்டம்
மெக்காலே ஆனால் அனைத்து தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பின்பற்றுவது மான்டிஸ்சாரி கல்வித்திட்டம்.)
இதில் மிகப்பெரிய குழப்பமே CBSE என்பது என்ன மாதிரியான கல்வித்திட்டமென்பது.(ஏன் இதை உருவாக்கினார்கள் என்பதற்க்கு முழுக்க, முழுக்க சாதிய அரசியலே காரணம்)
நீங்கள் கல்வித்திட்டத்தையும், பாடத்திட்டத்தையும் குழப்பமால் பார்க்க வேண்டும்.
மாநிலத்திற்க்கு, மாநிலம் பாடத்திட்டங்கள் மாறலாம் ஆனால் என்ன கல்வித்திட்டம் என்பது இந்திய அளவில் ஓன்றாக இருக்க வேண்டும்.
நீங்கள் விவாதத்தில் பாடத்தில் படிக்கிற கருப்பொருளை பற்றி பேசினால்... அது அந்தந்த மாநிலத்தின் பாடத்திட்ட குழுவின் பொறுப்பு.
(நாகலாந்து (அ) பீகாரில் உருவாக்கும் பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் பின்பற்ற முடியாது)
கல்வி என்பது போட்டியாளர்களை உருவாக்குவதல்ல... சிந்தனையை மேம்படுத்துவது.. கற்றலுக்கு வழிவகை செய்வது...
மிக விரிவாக பேசலாம்... பின்னூட்டமே இடுகை அளவுக்கு வந்துவிடும் போலுள்ளது.
ஒரு நல்ல விவாதத்தை தொடங்கியதற்கு நன்றி.
1) என் கேள்வி கல்வித்திட்டத்தை பற்றியது மட்டுமே.
2)அடுத்து இலவச கல்வி. இதை ஏன் இன்னும் நாம் பெறவில்லை. எல்லாக்கட்டசிகளும் இதற்கு பொறுப்பு.
கல்வித்திட்ட மாறுபாட்டால் பாடத்திட்ட குழப்படிகளும், முறைகளும், (வரலாறு போன்ற) குறிப்பிட்ட contentகளும் மாறுகிறது. அதை குறிப்பிடவே வரலாறு பாடத்தை குறிப்பிட்டேன். நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என நினைக்கிறேன்.
\\CBSE என்கிற கல்விமுறை உருவாக்கியதன் பின்னணி அரசியல் முழுக்க முழுக்க சாதியம் சார்ந்ததே. அதை பற்றி நிறைய எழுதப்பட்டு, பேசப்பட்டு, புத்தகங்களும் வந்து விட்டது. அவற்றை விளங்கிக்கொள்ளாமல் எங்கிருந்து வந்தது என்றுக்கேட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை?\\
இதைப்பற்றி அதிகம் தெரியாது அதனால் இதை ஒருதனி இடுகை போடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
என் ஆதங்கம் இதுதான்;
இந்தியா முழுக்க குழப்படி இல்லா ஒரே கல்வித்திட்டம். இதை முன்னெடுப்பதில்/மாற்றுவதில் என்ன பிரச்சனை? இருப்பதில் இன்று உருப்படியான கல்வித்திட்டம் எது?
இலவசமாய் கல்வி.
பேதமில்லா வேலைவாய்ப்பைத்தரும் கல்வி. அது ஆங்கிலம் சார்பானதாயினும்.
தொடர்புடைய ஒரு சுட்டி
கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளை விளங்கிக்கொள்ளுங்கள் -
1. Educational System/pattern - கல்வித்திட்டம்
2. Educational Boards - கல்விக்கழகங்கள்
3. lesson content - பாடத்திட்டம்
இதில் முதல் இரண்டுப்பற்றி பேச இப்போது எனக்கு நேரமின்மை, பிறிதொரு நேரத்தில் விரிவாக எழுதுகிறேன்.
கல்விக்கான பாடத்திட்டம் ஏன் மாநில அளவில் இருக்கிறது என்பதற்க்கு ஏற்கனவே நான் விளக்கம் சொல்லியிருக்கிறேன். மீண்டுமொருமுறை "கல்வி நிலத்தையும், மொழியையும், சமூகத்தையும் சார்ந்திருக்கிறது"
நாம் எப்படி தமிழில் கல்வி வேண்டும் என்று கேட்கிறோமோ அதே போல ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆங்கில வழியில் பயில ஏற்பாடுச்செய்ய பட்டதுதான் ஆங்கிலோ - இந்திய பள்ளிகள். இது அவர்களின் உரிமை. இங்கே என்ன சிக்கல் எழுந்தது என்றால்... ஆங்கிலோ இந்திய பள்ளியில் படித்தால் அறிவாளி என்று நினைத்துக்கொண்டு தமிழர்களும் அங்கே தங்கள் பிள்ளைகளை சேர்த்தது தான் முட்டாள்தனமே!
நீங்கள் நினைக்கலாம் நான் கேட்பது என்ன? நீ ஏன் எங்கெங்கேயோ போயிட்டிருக்கே என்று?
இப்ப நேரிடையாக விசயத்துக்கு வருவோம்...
நான் ஓன்றாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு "அ, ஆ....தான் " நடத்தினார்கள். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் ஓன்றாம் வகுப்பில் அகரவரிசையை நடத்தினால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து நகைப்பார்கள் :)
அதற்க்கு காரணம் மாணவர்களின் கற்றல் திறன் புள்ளி உயர்ந்திருக்கிறது என்று உணர வேண்டும்.
அதே நேரத்தில் இந்தியாவின் "வட கிழக்கு மாநிலம் உட்பட 15 மாநிலங்களில் இன்னும் மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வருவதிலேயே தோல்வியை தழுவிக்கொண்டிருக்கிறோம்"
அவர்களுக்கு ஓன்றாம் வகுப்பிலல்ல, மூன்றாம் வகுப்பில் தான் "அ,ஆ...வே " நடத்த முடியும்.
சமூகத்தின் கற்றல் திறன் மற்றும் அறிவு சுற்றுப்பாதை, சூழல், அரசியல் காரணிகள் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொண்டே கல்விக்கான பாடத்திட்டம் வகுக்க படுகிறது.
14 வயது வரை நாம் கற்பது பொதுக்கல்வி, அது முழுக்க, முழுக்க நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்பதை அறிவிக்க அல்ல. உங்களுக்கு சிந்தனையை உருவாக்க, அறிவியலை, கணிதத்தை, வரலாறை அறிய தருவதற்க்கான அறிமுக பகுதியே.
நான் நிறைய படிக்கிறேன் ஆனால் மகராஷ்டிரா காரன் குறைவா படிக்கிறான் என்பது கல்விக்கு முரணானது. கல்வி இரண்டு இடத்தில் இருக்கும் மனிதர்களுக்கு அறிவை, சிந்தனையை தருகிறது. அதிலிருந்து வளர்வது அவரவர் சுய திறன்.
(கொஞ்சம் வேடிக்கையாக சொன்னால் சாய்ஸ்ல கேள்விக்கு பதில் அடிச்சு 100 மார்க் வாங்கிய நண்பர்களும் உண்டு, நிறைய படித்து 60 மார்க் வாங்கிய அறிஞர்களும் உண்டு)
வரலாற்றிலும், அறிவியலிலும் சரியாக நிருப்பிக்கபடாத வற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க கூடாது என்று ஓரு மரபு இருக்கிறது. ஆனால் இந்திய வரலாறு அப்புறம் பாடத்திட்டத்தில் வராமல் போய்விடும் (ஏனென்றால் அவ்வளவு குளறுபடி)
அதனால அவன் இத படிக்கிறான், நாங்க இத படிக்கிறோம் என்பது அடிப்படை கல்வியில் தேவையற்ற விவாதம்.
நான் பத்தாம் வகுப்பில் படித்த கணிதம், சிங்கையில் பல்கலைகழகத்தில் "இன்ஞ்சியனரிங் மேத்ஸ்" என்று நடத்துகிறார்கள்.
(ஆனால் நம்மைவிட சிங்கப்பூரர்கள் தொழி்ல்நுட்பத்தில் மேலோங்கியே இருக்கிறார்கள்)
வெவ்வேறு கற்றல் திறன் கொண்ட இந்திய சமூக சூழல் மற்றும் இனங்களுக்கிடையே, அவரவருக்கு ஏற்ற மாதிரியான பாடத்திட்டம் மிக முக்கியம்.
தமிழ்நாடு அளவுக்கு பாடத்திட்டத்தை கொண்டு போய் பீகாரில் வைத்தால் பள்ளிக்கு வருகிற மாணவர்கள் மிரண்டு விடுவார்கள்.
அதே நேரத்தில் தமிழகத்தின் பாடத்திட்டத்தை பீகார் அளவுக்கு சமன் செய்தால், தமிழகத்தில் இருப்பவர்களின் கற்றல் திறன் வீணாவதுடன், சமூகத்தில் வேறு பிரச்சினைகள் கிளம்பும்.
(இங்கே ஓப்பீடு என்பது பொத்தாம் பொதுவானது, தனி ஓரு தமிழக மாணவனை விட ஓரு பீகார் மாணவனின் கற்றல் திறன் அதிகமாக இருக்கலாம் அது விதிவிலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.)
தற்பொழுது தமிழகத்தல் நகர மாணவர்களுக்கும், கிராம மாணவர்களுக்குமான வேறுபாடுகள் ஆய்வு நிலையில் இருக்கிறது. இதுவும் ஓரு முக்கியமான செய்தி.
ஆக எல்லா இடங்களிலும் அடிப்படை கல்வி என்பது அந்தந்த சமூகத்தின் கற்றல்திறனுக்கு ஏற்றவாறே இருக்கும்.
பிறகு உயர்கல்விக்கு வரும் போது, அவர்களை அவர்கள் கற்ற அடிப்படை கல்வியின் படியே சோதித்தறிய வேண்டும். சரியான அடிப்படை கல்வி இருக்கிற மாணவர்களுக்கு (அது எந்த பாடத்திட்டமாக இருந்தாலும்) உயர் கல்வி என்பது பிரச்சினையின்றி இருக்கும்.
வழக்கம் போல நானும், அவனும் ஓன்னா என்றால்... நகைப்புதான் மிஞ்சும்.
//பேதமில்லா வேலைவாய்ப்பைத்தரும் கல்வி//
இதை உயர்கல்வி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அடிப்படை கல்வி என்பது வேலைவாய்ப்பிற்க்கான கல்வியல்ல. அங்கே வேலைவாய்ப்பை பற்றியெல்லாம் பேசுவது கல்விக்கே முரணானது.
இலவச கல்வி என்பதை பிறகு எழுதுகிறேன்.
தெளிவான வாதத்திற்கும், விளக்கத்திற்கும் நன்றி.
இப்போதைக்கு கல்வித்திட்டம் சம்பந்தபட்ட அனைத்தையும் விட்டுவிடுவோம்.
பாடத்திட்டம் இடம், சமூகம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் விளங்குகிறது. இரண்டு துணைக்கேள்விகள் அதோடு இதை விட்டுவிடுகிறேன் ;-)
இந்தியா போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ள நாடுகள் எந்த அளவுக்கு இதை பிரிக்க முடியும். மேலும் இடியாப்பச்சிக்கலையல்லவா உருவாக்கும். உ.ம், கன்யாகுமரி, நெல்லை, தென் கேரளா போன்றவை ஒரே இடம் மற்றும் சமூகம மதிப்பீடுகளை கொண்டது(வட தமிழகத்தை ஒப்பிடும்போது). இதற்கான வரையரையெல்லாம் பெரும் பிரச்சனையை அல்லவா உருவாக்கும். அதை விட்டு எல்லோரையும் ஒரே மட்டத்திறுக்கு எடுத்துவர ஏன் சாத்தியமில்லை. இன்று பீகார் போன்றவை பின்தங்கி இருக்கலாம், ஒரு வாதத்திற்கு தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை பீகாரில் வைத்தால் பத்து ஆண்டுகளில் அவர்களும் அதே நிலைக்கு வந்துவிடமாட்டார்களா?
மேலும் முன்னேற்றுவது தான் வழிமுறையாய் இருக்குமே தவிர அதற்காக levelஐ குறைப்பது எந்த அளவுக்கு சரி?
\\இலவச கல்வி என்பதை பிறகு எழுதுகிறேன்.\\
நேரம் கிடைக்கும் போது விரிவாய் எழுதுங்கள் பாரி.
உங்கள் அயராத உழைப்பினால் கிடைத்ததே உங்கள் இன்றைய நிலை வாழ்த்துக்கள். மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
ஆசிரியர்களின் தரம் பற்றி இங்கு பேச விழையவில்லை. அது தனிக்கதை, பெருங்கதை. மிக மிக மோசமான ஆசிரியர்களையும் வாழ்க்கையில் விடிவெள்ளியாய் வந்த ஆசிரியர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆசிரியர்கள் மாணவர்கள் போன்ற மனித விடயங்களை விட்டு கல்விக்கான கட்டமைப்புகளே சரியாக இருந்திருக்கவேண்டிய நாட்டில் ஏன் இப்படி சிதைந்து கிடக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள நினைக்கிறேன்
மிக அதிகமான பணிச்சூழல் மற்றும், இடமாற்றம் தொடர்பான பணிகளில் இருப்பதால் நேரடியான தொடரப்புக்கு இன்னும் சில காலத்துக்கு வழியில்லை.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதிவாகவே போடுங்களேன். இதைப்பற்றிய தொடர்ச்சியாகவும் மேலும் பலருக்கும் அது சென்றடைய உதவும்.
Yes, and it is a must for the future (this elimates most of known and unknown problems)
Implementation is a bit complex and long process. Especially, none of politicians would like to.
Assume syllabus is prescribed being same (apart from 1st Lang), there are other things to be improved, infrastructure, quality of education, basic teaching aids,
I believe everyone can agree that same syllabus can be taught worst & best! The measure from Govt should be improving poor schools first (like setting target for high end schools to improve govt schools quality) and slowly getting rid of Metric concept atleast during initial days of children.
Sorry its going too big, and this is possible only when educational researchers gather and submit a analysis report on the same.
I'm confused, please clarify.
Don't we have free education in our govt schools(tn)???
(exluding a water pot donation demanded by most of the head masters)....
You are echoing my thoughts. Thanks,
-Sathia
Dandanakka,
I agree there are schools where education is free but only till certain level( i think only primary) Beyond 8th standard govt schools also charge something especially for english medium. also those schools are very few and you have to pay donation/yearly fees or some sort of additional fees to join english medium or anyother pattern of education.
The infrastructure and staffs(either ill equipped, understaffed) etc., makes it worse.
If you have more money you get better education whereas a single system and making it free will bring more equality than anything else.
உள்ள இரண்டாவது செய்தியைப் பார்க்கவும்
I'm going to comment only on the line of free education concern brought up in your article, neglecting the quality & uniformity.
Correct me if I'm wrong...I'm commenting based on my experience back in 10 yrs ago, may changed recent years.
1. Education in Govt. Schools, till 12th grade is free for all. Though, the headmasters run the school demand infrastructure supplies (i.e.water pot, office chair, etc) at the time of admission (i guess due to lack of adequate fund from govt.), the tuition/education fee is absolute free & no donation. I seen Govt. schools have only tamil medium, no english mediums.
2. There is another set of schools - Govt. Aided Schools, run by private management. These schools get govt aid, but run by private management with fancy names like private schools, and have english mediums along with tamil mediums. For the reason of funding, govt enforce some operations on these school (i.e.)having tamil medium, staff recruiting, etc.
My understanding is govt. does not run english medium schools and all govt. schools, till 12th grade provide FREE EDUCATON (from kamaraj period) (including free meal). And the density of govt. school (primary,secondary, higher secondary) are pretty decent and way ahead in TN compare to rest of india. So, I guess accessibility of free education pretty/very decent in tamil nadu.
/*
அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா....
2)அடுத்து இலவச கல்வி. இதை ஏன் இன்னும் நாம் பெறவில்லை. எல்லாக்கட்டசிகளும் இதற்கு பொறுப்பு.
*/
So, politicians did/do provide free education(atleast in tn as of my awareness).
Apart from free education, if you have things to say around english medium, quality, uniformity, etc...I may share your concerns (with reservation).
Rgds.
தகவலுக்கு நன்றி. அதுக்குள்ளே யாருக்கோ கேட்டிருச்சா? ;-)
Dandanakka,
Thanks for elaborating on your points and I agree that we do have free education but not totally reacheable to everyone. I am not going into the comparison mode on within TN outside TN etc., You had mentioned about Only Tamil Vs Tamil+English Vs Tamil+English+Quality+infrastrucre, right. Why is this differential ? Education is not a product to sell based on cost. It justifies the same point which I made on தமிழ் இலவசமா கிடைக்கும், ஆங்கிலம் படிக்க காசு தரணும், மேலும் தரம் வேணுமென்றால் இன்னும் அதிகம் காசு தரணும் என்று. I myself have studied in Govt schools which is totally run by govt and they used to charge yearly fees for english medium. Another bigger factor is there, the so called "special tutions". Many schools dont function but they are just facilitate "tution teachers".
Sidenote question: Are you facing difficulty typing in tamil, I feel odd to type in english in tamil blogs :-(
பிபிசி சுருக்கமான செய்திக்குறிப்பு என்பதால், உள்ளடக்கம் தெளிவாகயில்லை என்று நினைக்கிறேன்.
தமிழக அரசின் இந்த சாதனைக்கு வாழ்த்துச்சொல்கிற... நேரத்தில்...
கல்வியாளர்களின் விவாதத்திற்க்கு அதன் உள்ளடக்கம் வர வேண்டும். அப்பொழுதுதான் அதில் உள்ள நிறை, குறைகளை எல்லோருக்கும் எளிதாக விளக்க முடியும்.
இடஒதுக்கீடு
இடப்பங்கீடு
கல்வி