செல்லா இந்த பதிவை போட்டு ஒரு குறு வாக்குப்பதிவு நடத்திக்கொண்டு இருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே படங்களை இணைத்தேன். அதாவது படங்களே கறுப்பு வெள்ளையில் எடுத்தது. இல்லையென்றால் ஒப்புமைக்கு உதவும்.
Post Processing செய்ததில்லை. அதென்ன சரியா படமெடுக்காமல் கடைசில அத மாத்திக்கறது என்று ஒரு கேள்வி எனக்கு. அது அழுகுணி ஆட்டம் என்று ஒரு எண்ணம். இதே படச்சுருளில் எடுத்தால் இந்த மாதிரி சரி செய்ய முடியுமா என்று ஒரு துணைக்கோபம் வேறு. இதனாலேயே எந்த மென்பொருளும் இல்லாமல் இதுவரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.
சமீபத்தில் அதுவும் எல்லோரும் photoshopல் கலக்கும்போது (எங்க போனாலும் காசு கேக்குது) நான் மட்டும் கட்டற்ற மென்பொருள் அபிமானத்தில் GIMPஐ வைத்தும் picasaவை வைத்தும் கொஞ்சம் விளையாடலாம் என்று தரவிறக்கி வைத்திருந்தேன். மேல சொன்ன பதிவை பார்த்ததும் கொஞ்சம் விளையாடியதின் விளைவு இங்கே.
படத்தை உபயோகிக்க அனுமதி தந்ததற்கு வி. ஜெ. சந்திரனுக்கு நன்றி. அவரின் ஒரிஜினல் இங்கே.
அப்புறம் ஒரு கறுப்புவெள்ளையாக்கல்
இதில் சொல்லுங்கள் உங்கள் ஓட்டு எதுக்கு?
கறுப்பு வெள்ளையில் உங்கள் கவனம் முகத்தில் இருக்கும் வண்ணத்தில் உங்கள் கவனம் சிதறும். இதே காரணத்தால் தான் பழைய திரைப்படங்களை பார்த்தால் எல்லோருமே நல்ல நடிகர்களாக\அழகாக இருப்பார்கள் அல்லது தோன்றுவார்கள். எல்லா கவனமும் கதைமாந்தரின் முகத்தில் இருக்கும். ஒரு சின்ன மேக்கப் கூட போதுமாயிருந்துருக்கும். (உ.ம். விகேராமசாமி,பாலையா) இன்னும் சொல்லப்போனால் நம்ம வண்ணமயமான ராமராஜன் கூட கறுப்பு வெள்ளையில நடிச்சிருந்தா பெரியா ஆள் ஆயிருப்பாருன்னு நினைச்சுப்பேன்.

கருத்துகள்
////
ஏன் முடியாது ? இப்போது photoshop உபயோகப்படுத்தும் அனைத்து முறைகளும் படச்சுருள் காலக்தில் இருந்து வந்தவைதான். என்ன நம்மை போல எல்லோராலும் எளிதாகச் செய்து விடமுடியாது, கொஞ்சம் காசுப் போட்டு dark room/ studio ஏற்பாடு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
check the online tamil radios list
www.tamilradio.co.nr