http://www.fallingfifth.com/comics/20070311
நடராஜ் காலில் வெந்நீர் ஊற்றினார்போலவே ஓடும் பையன். காலையில் ஒன்பதரைக்கு நகரின் நடுவில் முக்கிய வேலை என்றால் 8;50க்கு தான் ரயில் பிடிக்கப் போவான். ரயிலைப்பிடித்து, பேருந்து பிடித்து, ஆட்டோ பிடிக்கவேண்டும். இதே வழக்கமாப் போச்சு என்று அவன் அம்மா ஒருநாள் காலையில், சிலர் ஐந்து பத்து நிமிடம் அதிகமாக கடிகாரத்தில் 'fast' ஆக வைத்துக்கொள்வாரே, அதேபோல் கடுப்பில் ஒருமணிநேரம் 'fast'ஆக கைப்பேசி நேரத்தை வைத்துவிட்டார்.
இது தெரியாமல் நடராஜ் நாள் முழுக்க எல்லா வேலைக்கும் ஒரு மணி முன்னதாகவே செல்வதை உணர்ந்தான். அப்போதுதான் கடிகாரத்திலும் போனிலும் வேறு வேறு நேரம் இருப்பதைப் பார்த்து அம்மாவின் சேட்டை என்று புரிந்து சரிசெய்துகொண்டான். ஆனால் அவனுக்கு அன்று எல்லாம் ஒரு மணிநேரம் முன்னதாகவே முடிந்துவிட மாலையிலும் விளையாட்டு, நடை என்று கொஞ்சம் நேரம் செலவிட்டான்.
இப்போது அந்த ஒருமணிநேரம் எங்கே வந்தது? எங்கே போச்சு? எதுவுமே ஆகவில்லை சரிதானே.
இதேதான் நடக்கிறது பகலொளி சேமிப்பு நேரம் எனப்படும் daylight saving time போது. ஆறு ஏழு மாதங்கள் தள்ளி 'சரிசெய்து' வைத்துக்கொள்வதால் குழம்புவதும் நியாயம்தான்.
அமரிக்கப் பகல்கள் ( பூமியின் 23.4° சாய்வினால் ) இளவேனிற் மற்றும் வேனிற் காலங்களில் நீளமானதாக இருக்கும். அதாவது கிட்டத்தட்ட காலை 5 மணியிலிருந்து மாலை 8 வரை. பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் இந்தியாவில் அதிகமாக உணரமுடியாது இதை. ஆகையால், மாலை வெயிலை வீணாக்கவேண்டாம் என்று ஏப்ரல் மார்ச் மாதங்களில் ஒரு ஞாயிறு அன்று ஒரு மணி fast-ஆக வைத்துக்கொள்வது பின் குளிர் ஆரம்பித்ததும் அதை சரிசெய்துகொள்வது.
இப்படி வெயில் காலத்தில் அதிகப்படுத்தி வைத்துக்கொள்வதால் காலையில் சீக்கிரம் எழுந்து வேலைகளை முடித்து மாலையில் சீக்கிரம் வீடு வந்தால் வெயிலும் இருக்கும். பிள்ளைகளோடு விளையாட, மற்ற பொழுதுபோக்க ஏதுவாக இருக்கிறது. மின்சாரமும் சேமிக்கப்படுவதாக தகவல்கள் சொல்கின்றன. அதாவது daylightஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
குளிர்காலத்தில் சரியாக வைத்துக்கொள்ளும் ஒரே ஒரு நாள் நீங்கள் தூங்கி எழும்போது ஒரு மணிநேரம் அதிகம் தூங்கி இருப்பீர்கள். மற்ற நாட்கள் எல்லாம் அதேதானே.
இந்த கடிகார நேரத்தைக் கூட்டுவதா குறைப்பதா என்று புரிவதற்கு Spring Forward Fall Back என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். மாற்றி வைத்த நேரத்தை மட்டும் daylight Saving Time என்றும்(savings என்று எழுதக்கூடாது). DST : Starts on Summer. Ends on Winter. மாற்றாத நேரத்தை standard time என்பது சரிதானே.
கருத்துகள்