ஜெயமோகன் 2கோடி தமிழர்கள் தமிழகத்துக்கு வெளியே வாழ்வதாக ஒரு கணக்கைச் சொல்கிறார்.இத்தனை பேரும் அடுத்த தலைமுறை அதற்கடுத்த தலைமுறை என்று அவரவர் சமூகம் சார்த்த அறக்கோட்பாடுகளையும் வழக்கங்களையும் மொழியையும் சேர்த்துக்கொண்டும் சிதைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி ஒரு தலைமுறை, கடைக்கு போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அமர்ந்திருக்கும் விருந்தாளியைப்போல்,சடக்கென உங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு வருகிறது அரசூர் வம்சத்தை படிக்கும்போது. பனியன் சகோதரர்கள் வருகிறார்கள், வயசன் பறக்கிறார், முடிந்துகொண்டு நலங்குப்பாடல்களை மூத்தகுடிப்பெண்டுகள் பாடுகிறார்கள் நட்ட நடுவே ஒன்றும் புரியாமல் நீங்களும் அமர்ந்திருக்கிறீர்கள். மாய எதார்த்த நாவல்கள்(magical realism) வகை நாவல்கள் காலக்கயிற்றில் மாட்டிக்கொண்ட காத்தாடிப்பட்டம் போல் இல்லை இல்லை.. ஊடுநூலும் பாவு நூலும் போல.. வேண்டாம் ஒரு Pendulum போல உங்களை முன்னும் பின்னும் இன்னும் கொஞ்சம் முன்னும் என்று மாற்றி மாற்றி கொஞ்சம் தலைசுற்ற வைக்கிற கதைசொல்லும் வடிவம். காபரியேல் மார்க்யூசு சொல்வது போல் கொஞ்சம் அசந்தால் விவரணைகளிலிலேயே ...
முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையுடன்...