முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

@kaalpandhu ஒரு வேடிக்கையான போட்டி வைத்தார். இந்தத் தளத்தில் மேல் விவரங்கள் உள்ளன http://kaalpandhu.tumblr.com/post/53088124709 போட்டியில் பங்கேற்று பதிவு செய்தது. இங்கே.
சமீபத்திய இடுகைகள்

பகலொளி சேமிப்பு நேரம்

    http://www.fallingfifth.com/comics/20070311    நடராஜ் காலில் வெந்நீர் ஊற்றினார்போலவே ஓடும் பையன். காலையில் ஒன்பதரைக்கு நகரின் நடுவில் முக்கிய வேலை என்றால் 8;50க்கு தான் ரயில் பிடிக்கப் போவான். ரயிலைப்பிடித்து, பேருந்து பிடித்து, ஆட்டோ பிடிக்கவேண்டும். இதே வழக்கமாப் போச்சு என்று அவன் அம்மா ஒருநாள் காலையில், சிலர் ஐந்து பத்து நிமிடம் அதிகமாக கடிகாரத்தில் 'fast' ஆக வைத்துக்கொள்வாரே, அதேபோல் கடுப்பில் ஒருமணிநேரம் 'fast'ஆக கைப்பேசி நேரத்தை வைத்துவிட்டார்.     இது தெரியாமல் நடராஜ் நாள் முழுக்க எல்லா வேலைக்கும் ஒரு மணி முன்னதாகவே செல்வதை உணர்ந்தான். அப்போதுதான் கடிகாரத்திலும் போனிலும் வேறு வேறு நேரம் இருப்பதைப் பார்த்து அம்மாவின் சேட்டை என்று புரிந்து சரிசெய்துகொண்டான். ஆனால் அவனுக்கு அன்று எல்லாம் ஒரு மணிநேரம் முன்னதாகவே முடிந்துவிட மாலையிலும் விளையாட்டு, நடை என்று கொஞ்சம் நேரம் செலவிட்டான்.   இப்போது அந்த ஒருமணிநேரம் எங்கே வந்தது? எங்கே போச்சு? எதுவுமே ஆகவில்லை சரிதானே.   இதேதான் நடக்கிறது பகலொளி சேமிப்பு நேரம் எனப்படும் daylight saving...

அரசூர் வம்சம்

ஜெயமோகன் 2கோடி தமிழர்கள் தமிழகத்துக்கு வெளியே வாழ்வதாக ஒரு கணக்கைச் சொல்கிறார்.இத்தனை பேரும் அடுத்த தலைமுறை அதற்கடுத்த தலைமுறை என்று அவரவர் சமூகம் சார்த்த அறக்கோட்பாடுகளையும் வழக்கங்களையும் மொழியையும் சேர்த்துக்கொண்டும் சிதைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி ஒரு தலைமுறை, கடைக்கு போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அமர்ந்திருக்கும் விருந்தாளியைப்போல்,சடக்கென உங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு வருகிறது அரசூர் வம்சத்தை படிக்கும்போது. பனியன் சகோதரர்கள் வருகிறார்கள், வயசன் பறக்கிறார், முடிந்துகொண்டு நலங்குப்பாடல்களை மூத்தகுடிப்பெண்டுகள் பாடுகிறார்கள் நட்ட நடுவே ஒன்றும் புரியாமல் நீங்களும் அமர்ந்திருக்கிறீர்கள். மாய எதார்த்த நாவல்கள்(magical realism) வகை நாவல்கள் காலக்கயிற்றில் மாட்டிக்கொண்ட காத்தாடிப்பட்டம் போல் இல்லை இல்லை.. ஊடுநூலும் பாவு நூலும் போல.. வேண்டாம் ஒரு Pendulum போல உங்களை முன்னும் பின்னும் இன்னும் கொஞ்சம் முன்னும் என்று மாற்றி மாற்றி கொஞ்சம் தலைசுற்ற வைக்கிற கதைசொல்லும் வடிவம். காபரியேல் மார்க்யூசு சொல்வது போல் கொஞ்சம் அசந்தால் விவரணைகளிலிலேயே ...

சிந்தாநதி - அஞ்சலி

நேற்று டிவிட்டரில் சிந்தாநதி மறைந்துவிட்டார் என்ற செய்தியைப் பார்த்தபோது மிகவும் அதிர்ந்துபோனேன். சிந்தாநதி என்னும் பெயரைக்கேட்ட உடனே எனக்கு நினைவுக்கு வருவது அவரின் ' எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள் ' என்னும் கவித்துவமான வரிகள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் மிகவும் துடிப்போடு தமிழ்ப்பதிவுலகில் இயங்கிக்கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டார். பதிவுலகில் மிக மிகச்சிலருடன் மட்டுமே மின்னரட்டையில் பேசுவதுண்டு.அவர்களில் ஒருவர் சிந்தாநதி. இரண்டு மாதங்கள் முன் திடீரென ஒருநாள் வந்தவரைக்கண்டு மகிழ்ந்தேன். சில நிமிடங்கள் பேசியதிலேயே, எதோ பிரச்சனைகள் வரமுடியவில்லை என்றார். அவரின் இயர்பெயர் என்ன எனபது கூட தெரியாது.பல இடங்களிலும் அவரே இயர்பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது கண்டு நாகரிகம் கருதி கேட்காமலே இருந்துவிட்டேன். இப்போது கேட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்னும் சில நிமிடங்கள் பேசி இருக்கலாம்.ஏதாவது உதவி தேவையா என்று கூட கேட்டிருக்கலாம். இப்போது வருந்துகிறேன். முன்பெல்லாம் அடிக்கடி அரட்டையில் வருவார்.மிகவும் பின்னரவாகக்கூட இருக்கும்.அமரிக்க பகல் நேரத்தில் என்ன இந்...

மே மாத புகைப்பட போட்டிக்கு

மே மாத புகைப்பட போட்டிக்கான என் படம்.

எகொஇச?

ஆங்கிலச்சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதுவது நான் அடிக்கடி முயலும் சங்கதி. மின்னஞ்சல்களில், ட்விட்டரில் எல்லாம். எத்தனை கலப்படம் செய்கிறேன் என்று அறிந்துகொள்வதற்காக. படத்தை பாருங்கள். சட்டென்று முகத்தில் அறையும் கலப்படம் தெரிவது முன்னேற்றமா அல்லது இன்னும் மிச்ச்சொச்சம் மறைந்து ஆங்கிலமே அகிவிட்ப்போவத்தற்கான வீழ்ச்சியா? தெரியவில்லை. இப்போதைக்கு தோன்றுவது தலைப்பு.

ஆறு வார்த்தைக் கதைகள்

டிவிட்டரில் எழுதிய ஆறுவார்த்தைக்கதைகள், ஒரு வரிக்கதைகள். டிவிட்டிரில் அழிந்தே போய்விடுகிறது. சேர்த்துவைத்தலுக்காக இங்கே பதியப்படுகிறது. 1) 'டேய் குப்பையை அள்ளிப்போட்டு வாசலை பெருக்கி சுத்தம்பண்ணீட்டு காசு வாங்கிட்டுப்போ' பத்து வயது முத்துவை விரட்டினார் பிளேஸ்கூல் மொதலாளி. ஆறுவார்த்தைக் கதைகள் 1) நாவல்.சிறுகதை.ஆறுவார்த்தைக் கதைகள்.சைக்கியாட்ரிஸ்டுகளுக்கு ஏறுமுகம் 2)பின் தூங்கி. முன் எழுவார். பத்தினிகள். பதிவர்கள் 3)வெளிநாட்டு வாழ்க்கை. கைநிறையக் காசு. பெற்றோர் படமாக 4)கட்டுப்பாடற்ற பொருளாதாரம். CVS பார்மஸியில் சிகரட் விற்பனை