பொதுவாகவே வலையில் மிக அதிகமாக பார்வையிடப்படும் வலையகங்களை பார்த்தால் அதன் வார்ப்புரு மிக எளிமையாக, வெண்மையான பின்ணணியில் இருக்கும். இதே வெண்மை பின்னணிதான் நாம் உபயோகிக்கும் பல மென்பொருட்களிலும், மென்பொருள் உருவாக்குதளங்களிலும் காணக்கிடைக்கிறது. அச்சடித்த காகித பழக்கத்தின் நீட்சியே இவ்வாறு நமக்கு பழகிப்போனதாக கருதவேண்டியிருக்கிறது. கணிணிதிரையை பொருத்தவரை ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு அளவு மின்சாரம் செலவழிவதாக இங்கு தெரிவிக்கிறார்கள். இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி ஓரு நாளைக்கு பல கோடி பார்வைகளை பெறும் கூகிளை கறுப்பு வண்ணத்தில் மாற்றினால் ஒரு வருடத்திற்கு 750 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கமுடியும் என்கிறார்கள் Blackle எனும் தளத்தை உருவாக்கி இருப்போர். இந்த எண்ண உருவாக்கத்திற்கு அவர்களுக்கு தூண்டுகோலாக அவர்கள் சுட்டுவது ஒரு பதிவை என்பது ஆச்சரியமாக இல்லை. கண்ணை உருத்துமோ எனும் பயமிருந்தால் அலுவலகத்தில் முக்கால்வாசி கறுவண்ண பின்னணியை உபயோகிப்போன் என்ற அளவில் என்னைக்கேட்டால் கட்டாயம் உருத்தாது. உண்மையில் பல மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யும்போது ஏற்படும் கண்ணயர்ச்சியை ஏற்படுத்தாது.