முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிகழ்நேர இயங்குதளம் - ஓர் அறிமுகம்

இங்குதளம்(Operating System) என்பது ஒரு கணிணியின் வன்பொருளுக்கும் மென்பொருளுக்கும் இடையில் இயங்கும் நிரல்கட்டமைப்பு. CPU என்பதை ஒரு மூளையோடு ஒப்பிட்டால் இயங்குதளத்தை புத்தியோடு ஒப்பிடலாம். பிரபலமான சில இங்குதளங்களின் பெயரைக்கேட்டால் UNIX, XP,Linux என்பீர்கள். சரி கணிணி சார் பொருட்கள் அனைத்தையும் ஓரிடத்தில் குவித்து வைத்து அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் Windows, Linux , Mac OS போன்றவற்றால் இயங்கும் உபகரணங்களை மட்டும் பிரித்தால் எத்தனை சதவிகிதம் இருக்கும்? (விடை கடைசியில்)

இயங்குதளம் சரி, அது என்ன நிகழ்நேர(Real-time OS) இயங்குதளம்? சுருங்கச் சொன்னால் இவை சிறப்பு வகையை சார்ந்த இயங்குதளம். பதிகணினியியலில்(embedded technology)
அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளம். சாதாரணமாக நாம் உபயோகிக்கும் இயங்குதளங்கள் நேரக் கட்டுபாடு கொண்டவையல்ல. உதாரணம் MS WORD ஐ சொடுக்கும் போது

தொடர்புடைய மற்றொரு நிரல் நினைவகத்தில் ஏறுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டாலோ அல்லது செயல்படவில்லையெனிலோ இயங்குதளம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கருதமுடியாது. ஆனால் விமானத்தின் இயக்கத்தில் இதே மாதிரி ஒரு பிழை நேர்ந்தால்...?

விமான கட்டுப்பாட்டகம், ராக்கெட், ஏவுகணை போன்றவை, வின்வெளி செயற்கை கோள்கள், தொலை தொடர்பு இயக்ககங்கள், இயந்திரர் (robots), நாற்சக்கர வாகனங்கள், நிழற்பட, நிகழ்பட இயக்கிகள், கைத்தொலைபேசிகள், மருத்துவ உபகரணங்கள் என்று நீண்டுகொண்டே செல்லும் கணிணிசார் உபகரணங்களில் பெருமளவில் இந்த வகை இயங்கு தளங்கள் உபயோகப்படுகிறது.

இதனைப்பற்றி சொல்லப்படும் சொலவடை சாதாரண இயங்குதளம் இயங்காமல் போனால்வேலை போகும், நிகழ்நேர இயங்குதளங்களால் உயிர்கள் போகும். உதாரணம் இதயத்துடிப்பை கண்காணிக்கும் கருவிகள், space shuttle failures, சரியான நேரத்தில் போய்ச்சேராத ஒரு தகவல்.

சரி அப்படியென்ன வித்தியாசமானவை இந்த இயங்குதளங்கள்? மேல் சொன்ன உதாரணங்களை கொண்டு நிகழ்நேர இயங்குதளங்கள் மிக வேகமான இயங்குதளங்கள் என்று
முடிவுகட்டிக்கொள்ளக்கூடாது. செயற்கைக்கோளுக்கு இருக்கும் செயல் வேகத்தை விட ஒரு தொலைபேசி இயக்கத்திற்கு இருக்கக் கூடிய வேகம் அதிகம் தேவையில்லை. ஆனால் இரண்டிற்கும் பொதுவானவை வினையை செய்து முடித்து அடுத்த வினைக்கு கொடுக்கவேண்டிய சமிஞ்ஞைகளையும், தகவல்களையும் கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டும். அதாவது சரியாக செய்யவேண்டியவை(logical முடிவு) மட்டுமல்ல நேரமுடிவும் (timing) மிகவும் முக்கியம். இது பெருமளவில் வடிவமைப்பு தொழிற்நுட்பம் சார்ந்த இயங்குதளங்கள் எனக்கொள்ளலாம். எல்லா இயங்குதளங்களையும் இவ்வாறு செயல்படுத்த முடியும். ஆனால் அதற்கான தேவையும் சிறப்பு இயக்கி(Processor)களும் தேவை.

ஒரு சிறு உதாரணம், இரண்டு மோட்டார்கள் உள்ளன. அதில் ஒன்று பத்து வினாடி தண்ணீர் இறைத்து தொட்டியில் விட வேண்டும். மற்றொன்று இருபத்தொன்றாவது வினாடியில் அதை எடுத்து வயலுக்கு பாய்ச்ச வேண்டும். இப்பொழுது இவை இரண்டும் சரியான நேரத்தில் இரண்டையும் செய்ய வேண்டும். இதில் மேலும் ஒரு வினையை சேர்ப்போம் தொட்டியில் கொள்ளளவு பாதி வந்தவுடன் அதாவது 10வினாடியிலிருந்து 15 வினாடி வரை வெப்பபடுத்த வேண்டும். இதுவும் சரியாக வேலை செய்கிறது. அடுத்து ஒவ்வொரு 10 முறைகளுக்கு பிறகும் வயலுக்கு போகும் ஓடையின் திசையை இரண்டாவது தொட்டி 90 degree க்கு மாற்ற வேண்டும் என்று ஒரு கட்டளை. தொட்டியில் ஒரு சிறிய மாற்றம் செய்வோம், தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவு இல்லையெனில் வெப்பம் 2.5 நொடிகளும், இரண்டாவது தொட்டி 20 முறைக்கு ஒரு தடவையும் 90 degree க்கு மாற வேண்டும் என்று. இந்த மொத்த இயக்கத்தையும் ஒரு வயல் செயலியாக கருதிக்கொள்ளுங்கள். இதே போல் நூறு வயல் செயலிகளை ஒரே கட்டுபட்டாகம் கொண்டு இயக்க வேண்டும். இவற்றில் ஒன்று இயங்காமல் ஒத்திசையாமல் போனால் கூட மொத்த இயக்கமும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கொள்ளவேண்டும். இதை போன்ற செயலிகளுக்கு நிகழ்நேர இயங்குதளம் தேவைப்படும்.

சாதரண இயங்குதளங்களைவிட மூன்று முக்கிய வேறுபாடுகள்.
1. நேரக்கட்டுப்பாடு. எல்லா சூழ்நிலைகளிலும், வேலைப்பளு இருந்தாலும இல்லாவிட்டாலும் ஒரு வினைத்தொடருக்கான நேரம் மாறவேகூடாது.
2. அறுதியிடப்பட்ட வரையறைக்குள்(நினைவகம் முதற்கொண்டு) செயல்களை முடிக்கும் திறன்.
3. எதிர்பார்க்கும் வினைமுடிவு.

இதோடு நிறுத்திவிட்டு மேலும் சில விவரங்களை பார்க்கலாம். இயங்குதளங்களின் உள்விவரம் தெரிந்தவர்கள் மேலோட்டத்தோடு நிறுத்துகிறேன் என்று சண்டைக்கு வராதீர்கள். இன்னும் விவரமாக எழுத ஒரு தொடரோ அல்லது ஒரு தனி புத்தகமோ எழுதுமளவிற்கு விஷயமிருப்பதை அறிவீர்கள்.

VxWorks, pSOS, QNX, RTLinux போன்றவை பதிகணினியியலில்(embedded) உலகத்தின் Windows, Linux வகையறாக்கள். அதிலும் VxWorks தான் முடிசூடா மன்னன். இன்னும் சில
(பல) குறிப்பிட்ட வகை உபயோகத்திற்கென நி.இதளங்கள் உள்ளன. உ.ம்; Symbian - கைத்தொலைபேசிக்கானவை. ஒரு முக்கிய விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். முன்பே சொன்னமாதிரி வடிவைப்பும், எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். சிலவகை மிகச்சிறிய உபகரணங்களில்(உ.ம்; சாலை விளக்குகள்), இயங்குதளமே தேவைப்படாது.

பல நேரங்களில் வடிவமைப்பில் பிழை நேரும்போதுதான் பல விபத்துகளுக்கும்(செவ்வாயில் உணமையில் என்ன நடந்தது?) , கடலில் விழும் ராக்கெட்டுகளுக்கும் காரணம்.
அன்றாடம் பயன்படுத்தும் Windows, Linux , Mac OS போன்றவற்றால் இயங்கும் உபகரணங்களை மட்டும் பிரித்தால் எத்தனை சதவிகிதம் இருக்கும் என்று கேட்டிருந்தேனல்லவா?
Windows, Linux எல்லாம் சேர்த்து வெறும் 5 சதவிகிதம் தான் வரும். மீதி தொண்ணூற்றைந்து சதவிகிதம் உலகை ஆளவது நிகழ்நேர இயங்குதளங்களே!!

கருத்துகள்

ACE !! இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழில் படிக்க வித்தியாசமா இருந்தது.. நீங்க குறிப்பிட்ட மாதிரி இது ரொம்ப மேலோட்டமா தான் இருக்கு.. இன்னும் விரிவா இன்னொரு பதிவு போடுங்க..
ACE !! இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழாக்கம் ரொம்பவே ஆச்சர்யபடுத்துது.. வாழ்த்துக்கள் சத்யா..
ACE !! இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் embedded side தான்.. (கொஞ்சம் மேல் லேயர்:(() அதனால எளிதா relate பண்ண முடிஞ்சுது.. நன்றி
இலவசக்கொத்தனார் இவ்வாறு கூறியுள்ளார்…
புரிதல் இல்லாத துறை பற்றிய பதிவானதினாலும் அதிகமான தமிழாக்கத்தினாலும் ஒண்ணும் சரியா நம்ம மண்டையில் ஏறலைங்க. மன்னிச்சிடுங்க.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் பதிகணினியியலில் சார்ந்தவன்தான்

ஆனால் நிகழ்நேர இயங்குதளத்தில் இல்லை

தமிழாக்கம் ரொம்ப அட்டகாசம்.. வாழ்த்துக்கள் சத்யா..
வெட்டிப்பயல் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க சத்யா.. இதை சற்றுமுன் போட்டிக்கு அனுப்பலாமே
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
Ace,
முயற்சி பண்றேன்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
Ace,

\\தமிழாக்கம் ரொம்பவே ஆச்சர்யபடுத்துது\\
இதுல இருக்கற ஒரு சில வார்த்தைகளை தவிர மற்றதெல்லாம் ஏற்கனவே மக்கள் பயன்படுத்தறதுதான். விக்சனரி குழுமத்தில இருக்கறதும், முடிந்தவரை நற்றமிழ் விரதமும் உதவுகிறது.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
\\நானும் embedded side தான்.. (கொஞ்சம் மேல் லேயர்:(() அதனால எளிதா relate பண்ண முடிஞ்சுது.. நன்றி \\

என்ன லேயர். விவரமா சொல்லுங்க
பேசலாம்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
கொத்தனார்,
விக்கி பசங்க ல பின்றீங்க. அவையடக்கம் இவ்வளவா.
வருகைக்கு நன்றி,
புரியாத ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினாக்கூட
அதப்பத்தி தனி பதிவா போட்டுடறேன். அடிப்படை விஷயங்களை எழுதும்போதுதான் எனக்கும் புரிதலின் அளவு தெரியும். கட்டுரை எழுத விஷயமும் கிடைக்கும்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
\\நானும் பதிகணினியியலில் சார்ந்தவன்தான்

ஆனால் நிகழ்நேர இயங்குதளத்தில் இல்லை

தமிழாக்கம் ரொம்ப அட்டகாசம்.. வாழ்த்துக்கள் சத்யா
\\
நானும் ரொம்ப ஆழத்துல இல்லை. எதுல வேலை செய்யறீங்கன்னு சொல்லுங்க. ஒரு புதிய விஷயம் கிடைச்சா மாதிரி இருக்கும்.
தமிழாக்கம் என்னோடசொந்த உழைப்பு மட்டுமில்லை. விக்சனரி குழுமத்தையும் சாரும.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வெட்டிப்பயல்,
மீண்டும் வருகைக்கு நன்றி,\\
சற்றுமுன் போட்டிக்கு அனுப்பலாமே \\
அனுப்பிட்டா போச்சு.
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
RTOS ரொம்பவும் விவரமா படிச்சதில்லை.. ஆனா நல்லா தெளிவா எழுதிருக்கீங்க..

நிறைந்த தமிழ்ச் சொற்களும், அதிகம் தெரியாத துறையாகவும் இருப்பதால், படிப்பவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த ஏதும் படங்கள் போட்டு விளக்கினால் நம்ம மக்கள் தயக்கமின்றி படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.. ;)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
பொன்ஸ்,
அடுத்த முறை முயலுகிறேன். புரிகிற மாதிரி படங்களுக்கு மிகவும மெனக்கெடவேண்டும். சோம்பேறித்தனம் தான் எல்லாம். ;-)
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
மேலோட்டம் என்று நீங்களே சொல்லிட்டீங்க..ஆனா, நிகழ்நேர இயக்குதளம்னா முக்கியமா என்ன செய்யுதுன்னு புரிஞ்சிடுச்சு.. அது போதும் :) இப்ப நீங்க தமிழ்ல எழுதப் போய் ஆர்வமா, பொறுமா உக்கார்ந்து படிச்சேன்..இதுவே ஆங்கிலத்துல பொறுமை உக்கார்ந்து படிச்சிருப்பனான்னு தெரில..தொடர்ந்து எழுதுங்க..

embed - பதி - சரியா இருக்காதுன்னு தோணுது..பொதிந்து வைக்கிறது சரியா இருக்கலாம். tvu பார்த்து சொல்றேன்..

நட்சத்திர வாரத்துல இப்படி ஓர் இடுகை எழுத ரொம்ப துணிச்சல் வேணும் :)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ரவி,
என்னடா தமிழ்ப்படுத்த தடவிக்கிட்டு இருந்தப்போ, 'நிகழ்நேரம்' னு எடுத்து குடுத்த ஐரோப்பியரை காணோமேன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். வந்துட்டீங்க.

embedded software, system-பொதிந்த மென்பொருள்,கணினியல் அப்பிடின்னு தான் தமிழ்ப்பிச்சேன். tvu-ல இல்லை.விக்கில பதிகணினினு யாரோ போட்டிருந்தாங்க சரி பயன்படுத்துவோம்னு போட்டுட்டேன். விக்சனரில நம்ம சண்டைய தொடரலாம்.

\\நட்சத்திர வாரத்துல இப்படி ஓர் இடுகை எழுத ரொம்ப துணிச்சல் வேணும் :)\\

நன்றி!!
CVR இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல பதிவு!! யாரும் தேர்ந்தெடுக்காத தலைப்பு!!!

மேலும் மேலும் இது போன்ற தலைப்புகளில் எழுத வாழ்த்துக்கள்!! :-)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
CVR முயற்சி செய்கிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர்

சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த இலக்கியப்புத்தகங்கள். நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும், தமிழையும் பேச்சு மற்றும் எழுத்தாற்றலையும் (அட பரீட்சைகளில் வரும் கட்டுரைகளைத்தாங்க) வளர்க்க இவை பெரிதும் உதவி இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன். அதனாலேயே இப்போதும் இதுபோன்றவை கையில் சிக்கினால் வாசிக்காமல் விடுவதில்லை. கதைகளின் எளிமையையும் பாங்கையும் தாண்டி இக்காலகட்டத்தில் என்னமாதிரியான வாழ்வியல் சிந்தனைகளை, நல்ல பண்புகளை இவை அறிவுறுத்துகின்றன என்பதை கவனிக்க தவறியதில்லை. பெரிய பெரிய இலக்கியப்பொதிகளை எல்லாம் வாசிக்க பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. ஆனால் மூன்றாம் வகுப்புவரை சொல்லிக்கொடுத்தைக்கூட 'கற்றபின் நிற்க' முடியாமல் வாழும் போது சிறுவர் புத்தகங்களை அறிவுக்குறுக்கம் கொண்டவை என்று விலக்க முடிவதில்லை. சட்டென முடிந்துவிடும் கதைகளின் கருத்து சொல்லும் 'ஆறுவது சின'மோ 'பொறாமைப்படாதேயோ' இரண்டு நாட்கள் முன்பு வந்த கெட்ட சிந்தனையை ஞாபகப்படுத்த தவறியதில்லை. தினமணியில் வரும் மந்திரவாதி மாண்ட்ரேக்கும்(இதெல்லாம் இன்னும் வருதா?) பூந்தளிரில் வரும் சிறு சிறு அழகான பாடல்களும...